Universal Pension Scheme: மத்திய அரசு பலதரப்பட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. பெண்கள், குழந்தைகள், விவசாயிகள், தனியார் துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், மூத்த குடிமக்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என அனைவருக்கும் பிரத்யேக திட்டங்கள் உள்ளன. இப்போது நாட்டு மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
Unorganised Sector: அமைப்புசாரா துறைகள்
மத்திய அரசு நாட்டில் 'யுனிவர்சல் பென்ஷன் திட்டத்தை' அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களை ஓய்வூதிய வரம்பிற்குள் கொண்டு வருவதாகும். இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின் முன்மொழிவு ஆவணத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கம் என்ன?
நாட்டில் உள்ள அனைத்து சம்பளம் பெறும் ஊழியர்களுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் இந்த உலகளாவிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் ஓய்வூதியப் பலன்களை வழங்க அரசாங்கம் விரும்புகிறது. இதன் கீழ், பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை இணைத்து ஒரு விரிவான திட்டத்தை உருவாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இந்த முன்மொழிவு ஆவணம் தயாரிக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடமிருந்தும் பரிந்துரைகள் பெறப்படும். தற்போது அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், அமைப்புசாரா துறையில் பணிபுரியும் ஊழியர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக பல ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளன. எனினும், அனைவருக்குமான ஒரு பொதுவான ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்க அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.
Pension Schemes: தற்போது அமைப்புசாரா துறை ஊழியர்களுக்கு உள்ள ஓய்வூதியத் திட்டங்கள் என்ன?
தற்போது அமைப்புசாரா துறை ஊழியர்களுக்காக பல ஓய்வூதியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் APY எனப்படும் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) மற்றும் PMSYM எனப்படும் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana) ஆகியவை அடங்கும். இதன் கீழ் 60 வயதில் உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கிறது.
Voluntary Scheme: இது ஒரு தன்னார்வத் திட்டமா? இதில் அரசாங்கம் பங்களிக்குமா?
உலகளாவிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசாங்கமும் பங்களிக்குமா என்பது இதில் ஒரு முக்கியமான கேள்வியாக உள்ளது. எனினும், இந்தத் திட்டம் ஒரு தன்னார்வ திட்டமாக இருக்கும் என்றும், அரசாங்கத்திடமிருந்து எந்த நிதி பங்களிப்பும் இருக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, EPFO போன்ற திட்டங்களுக்கு ஊழியர் மற்றும் முதலாளி இருவரின் பங்களிப்புகளும், NPS போன்ற திட்டங்களில் அரசின் பங்களிப்பும் உள்ளன. ஆனால் யுனிவர்சல் ஓய்வூதிய திட்டத்தில் எந்த அரசாங்க பங்களிப்பும் இருக்காது.
UPS NPS-ஐ யுனிவர்சல் ஓய்வூதுயத் திட்டம் மாற்றுமா?
தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension System) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Universal Pesion Scheme) போன்ற திட்டங்களை இது மாற்றுமா என்ற கேள்வியும் பலருக்கு உள்ளது. ஆனால், இது UPS மற்றும் NPS-க்கு மாற்றாக இருக்காது. அனைத்து திட்டங்களும் தனித்தனியாகவே இருக்கும்.
உலகின் பிற நாடுகளில் ஏற்கனவே உள்ள யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டம்
வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. அமெரிக்கா, கனடா, ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஓய்வூதியம், சுகாதார சேவைகள் மற்றும் வேலையின்மைக்கான பாதுகாப்பு திட்டங்கள் உள்ளன. மேலும், டென்மார்க், சுவீடன், நார்வே, நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் ஏற்கனவே உலகளாவிய ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளன. அவை நாட்டில் உள்ள மூத்த குடிமக்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









