Universal Pension Scheme: மத்திய அரசு ஒரு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றது. 'யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டம்' என்று அழைக்கப்படும் இந்த திட்டம் குறித்து சில நாட்களாக பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. யுனிவர்சல் பென்ஷன் திட்டம் என்றால் என்ன? இது பங்களிப்பு திட்டமா? இதில் யாரெல்ல்லாம் சேர முடியும்? இந்த அனைத்து கேள்விகளுக்கும் இந்த பதிவில் பதில்களை காணலாம்.
யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டம்
யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நாட்டு மக்கள் அனைவரும் ஓய்வூதியத்தின் வரம்பிற்குள் வருவார்கள் என கூறப்படுகின்றது. ஒருவர் தொழிலதிபராக இருந்தாலும் சரி, தொழிலாளியாக இருந்தாலும் சரி, தனியார் வேலை செய்தாலும் சரி, சொந்தமாக வணிகம் செய்தாலும் சரி, அனைவரும் இதனால் பயனடைவார்கள். புதிய உலகளாவிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் பின்னணியில் உள்ள அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், கட்டுமானத் துறை போன்ற துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களையும், அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களையும் ஓய்வூதியத்தின் வரம்பிற்குள் கொண்டு வருவதாகும்.
Labour Ministry: பணியை தொடங்கிய தொழிலாளர் அமைச்சகம்
அரசாங்கம் தொழிலாளர் அமைச்சகம் மூலம் அதன் முன்மொழிவு ஆவணங்களைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய திட்டத்தில், பல்வேறு வகையான ஓய்வூதியத் திட்டங்களைச் சேர்த்து அரசாங்கம் ஒரு உலகளாவிய ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாருக்குப் பலன் கிடைக்கும்?
இந்தத் திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் அனைவரும் சேர்ந்து 60 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறும் பலனைப் பெறலாம். இந்தத் திட்டத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO -வின் கீழ் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
New Pension Scheme: இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஏன் கொண்டு வரப்படுகிறது?
2036 ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதத்தை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் "இந்தியா ஏஜிங் ரிப்போர்ட் 2023" கூறுகிறது. 2050 ஆம் ஆண்டுக்குள், இந்த எண்ணிக்கை 20 சதவீதத்தை எட்டும். இத்தகைய சூழ்நிலையில், அரசாங்கம் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது அவசியமாகிவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, கனடா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இதுபோன்ற ஓய்வூதியத் திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய திட்டங்களுக்கும் இந்த புதிய திட்டத்திற்கும் என்ன வித்தியாசம்?
தற்போது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி போன்ற திட்டங்களில், அரசாங்கம் மற்றும் நிறுவனம் இரு சாராரும் நிதிக்கான தொகைக்கு பங்களிக்கின்றன. ஆனால் வரவிருக்கும் இந்த 'புதிய ஓய்வூதியத் திட்டத்தில்' அரசாங்கம் எந்த பங்களிப்பையும் செய்யாது. பயனாளிகள் திட்டத்தில் எவ்வளவு பணம் முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்பது அந்தந்த நபரின் விருப்பத்தைப் பொறுத்தது.
National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பிற்கு பதிலாக இது இருக்குமா?
இந்தப் புதிய திட்டம் தற்போதுள்ள தேசிய ஓய்வூதியத் அமைப்பு (NPS) திட்டத்திற்கு மாற்றாக இருக்காது. இந்தப் புதிய திட்டத்தின் மூலம் மற்றொரு பாதுகாப்பான ஓய்வூதியத் திட்டத்திற்கான விருப்பம் உங்களுக்கு கிடைக்கும்.
Central Government Schemes: ஏற்கனவே உள்ள அரசாங்க ஓய்வூதியத் திட்டங்கள்
- APY: அமைப்புசாரா துறையினருக்காக அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) போன்ற சில அரசு ஓய்வூதியத் திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் கீழ் 60 வயதிற்குப் பிறகு பயனாளி மாதத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை ஓய்வூதியம் பெறுகிறார்.
- PMSYM: தெரு வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana) செயல்பாட்டில் உள்ளது.
- PMKMY: விவசாயிகளுக்காக பிரதம மந்திரி கிசான் மான்தன் யோஜனா (Pradhan Mantri Kisan Maandhan Yojana) திட்டத்தையும் அரசாங்கம் நடத்தி வருகிறது. இதன் கீழ் விவசாயிகளிக்கு 60 வயதிற்கு மேல், மாதத்திற்கு ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









