)
Life Certificate: பணி ஓய்வுக்கு பிறகு, ஓய்வூதியதாரர்ளுக்கு மிகப்பெரிய நிதி ஆதாரமாக இருப்பது ஓய்வூதியம்தான். ஓய்வுக்குப் பிறகு, பிறரை நிதி ரீதியாக சார்ந்திராமல் இருக்க ஓய்வூதியம் துணையாக இருக்கின்றது. ஓய்வூதியம் முதியவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ மிகப்பெரிய ஆதரவாக விளங்குகிறது. ஆனால், இதை தொடர்ந்து பெற சில அத்தியாவசிய பணிகளை செய்ய வேண்டியது அவசியமாகும். ஒரு சிறு தவறும் ஓய்வூதியம் நிறுத்தப்பட காரணமாகலாம்.
ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அதை சமர்ப்பிக்காவிட்டால், ஓய்வூதியம் நிறுத்தப்படுகிறது. ஜீவன் பிரமான் பத்திரம் அதாவது வாழ்க்கைச் சான்றிதழ் என்றால் என்ன? இதை எப்போது சமர்ப்பிக்க வேண்டும்? இதை சம்பர்ப்பிப்பதற்கான வழிகள் என்ன? இவை அனைத்தையும் இந்த பதிவில் காணலாம். ஓய்வுதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை எளிதாக உருவாக்கலாம். இதற்கான வழிமுறையை இங்கே காணலாம்.
ஓய்வூதியதாரர்களுக்கு ஜீவன் பிரமாண் பத்திரம் ஏன் அவசியம்
ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஜீவன் பிரமான் பத்திரம் எனப்படும் ஆயுள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிப்பது மிகவும் முக்கியம். ஓய்வூதியம் பெறும் நபர் உயிருடன் இருக்கிறார் என்பதையும், அவர் தொடர்ந்து ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதையும் நிரூபிப்பதே இதன் நோக்கம். இது சரியான நேரத்தில் டெபாசிட் செய்யப்படாவிட்டால், ஓய்வூதியம் நிறுத்தப்படும். முன்னர், இந்த வேலையை வங்கி கிளை அல்லது ஓய்வூதிய அலுவலகத்திற்குச் சென்று செய்ய வேண்டியிருந்தது. இது பல முதியவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த செயல்முறை மிகவும் எளிதாகிவிட்டது.
வீட்டிலிருந்து விண்ணப்பிக்கவும்
இப்போது ஓய்வூதியதாரர்கள் வாழ்க்கைச் சான்றிதழைப் பெற மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. அவர்கள் விரும்பினால், ஆதார் அட்டை கொண்டு ஆன்லைன் வாழ்க்கைச் சான்றிதழை வீட்டிலிருந்தபடியே பெறலாம். இது தவிர, தங்கள் அருகிலுள்ள வங்கி, தபால் அலுவலகம் அல்லது பொது சேவை மையத்திற்குச் (CSC) சென்று இந்த செயல்முறையை செய்து முடிக்கலாம்.
ஓய்வூதியதாரரின் வாழ்க்கைச் சான்றிதழைப் பெறுவதற்கு பல எளிய வழிகள் உள்ளன. ஓய்வூதியதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப எந்த முறையையும் தேர்வு செய்யலாம்:
வங்கி அல்லது தபால் நிலையத்தில் இந்த பணியை செய்யலாம்
அருகிலுள்ள உங்கள் வங்கி அல்லது தபால் நிலையத்தின் கிளைக்குச் சென்று உங்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை உடனடியாகப் பெறலாம். இந்த வேலை ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்புடன் உடனடியாக செய்யப்படுகிறது.
பொது சேவை மையம் (CSC)
நாடு முழுவதும் பல இடங்களில் உள்ள பொது சேவை மையத்திற்குச் சென்று உங்கள் வாழ்க்கைச் சான்றிதழைப் பெறலாம். இது மிகவும் வசதியான வழி.
வீட்டிலிருந்து ஆன்லைனில் DLC பெறலாம்
வீட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றால், 'ஜீவன் பிரமான் செயலியை' மொபைல் அல்லது மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து, அதம் மூலம் இந்த பணியை செய்து முடிக்கலாம். இதில், உங்கள் ஆதார் எண், ஓய்வூதிய ஐடி மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். பயோமெட்ரிக் சரிபார்ப்பு முடிந்தவுடன் உங்கள் டிஜிட்டல் சான்றிதழ் உருவாக்கப்படும்.
- வாழ்க்கைச் சான்றிதழைப் பெற்ற பிறகு, ஓய்வூதியம் பெறுவோர் முற்றிலும் கவலையின்றி இருக்கலாம்.
- ஏனெனில் இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெறுவதற்கான வழி மிகவும் எளிதாகிவிடும்.
- இந்த முக்கியமான ஆவணத்தை சரியான நேரத்தில் சமர்ப்பித்துவிட்டால், ஓய்வூதியம் பெறுவதில் எந்தத் தடையும் இருக்காது.
- இந்த வசதி ஓய்வூதியதாரரின் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வலுவான நிதிப் பாதுகாப்பையும் வழங்குகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ