மத்திய அரசு கடந்த பல ஆண்டுகளாக, அனைத்து குடிமக்களுக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சமூகத்தின் ஒதுக்கப்பட்ட பிரிவினர் மீது சிறப்பு கவனம் செலுத்தி, பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பணி நிலையைப் பொருட்படுத்தாமல், ஓய்வுக்குப் பிந்தைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஓய்வூதியத் துறையில் பல சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பெண்களை மையமாகக் கொண்ட சில ஓய்வூதிய சீர்திருத்தங்களையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
ஓய்வூதிய சேவை விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள்
ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மத்திய அரசு சமீபத்தில் தொடங்கிய ஓய்வூதிய மன்றத்தின் அமர்வில், 531 புகார்களில் 490 புகார்கள் உடனடியாக தீர்க்கப்பட்டன. மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சமீபத்தில் இந்த முயற்சியின் வெற்றியைப் பாராட்டினார். மேலும் ஓய்வூதியம் தொடர்பான சேவை விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை எடுத்துரைத்தார்.
மகள்கள் ஓய்வூதியத்திற்கு உரிமை கோரலாம்
கடந்த வாரம் தன்னார்வ நிறுவனங்களின் நிலைக்குழுவின் (SCOVA) 34வது கூட்டத்தில், அரசாங்கத்தின் சமீபத்திய முடிவுகள் பெண்களுக்கு அதிக நிதிப் பாதுகாப்பை வழங்கியுள்ளன என்று சிங் கூறினார். பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) பொறுப்பாளரான சிங், இப்போது விவாகரத்து பெற்ற அல்லது பிரிந்த மகள்கள் தங்கள் மறைந்த தந்தையின் ஓய்வூதியத்திற்கு உரிமை கோரலாம் என்று கூறினார்.
பெண்களின் பொருளாதார பாதுகாப்பிற்கான முக்கிய நடவடிக்கைகள்
முன்னதாக அவர்கள் நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது, ஆனால் இப்போது விவாகரத்து செயல்முறை பெற்றோரின் வாழ்நாளில் தொடங்கியிருந்தால், மகள் நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இந்த மாற்றம் முன்பு வரை இந்த உரிமையை இழந்த மகள்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. பெண்களின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் சுயசார்பை அதிகரிக்க அரசாங்கம் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மறுமணத்திற்குப் பிறகும் ஓய்வூதியம் பெற உரிமையுள்ள கைம்பெண்கள்
குழந்தைகள் இல்லாத கணவனை இழந்த பெண் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டாலும் ஓய்வூதிய உரிமையைப் பெறுவார். முன்னதாக, மறுமணம் செய்து கொண்டவுடன் ஓய்வூதியம் கிடைக்காத நிலை இருந்தது. ஆனால் இப்போது அவளுடைய பிற வருமானம் குறைந்தபட்ச ஓய்வூதிய வரம்பை விடக் குறைவாக இருந்தால், அவள் தனது மறைந்த கணவரின் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்தைப் பெறலாம்.
குடும்ப ஓய்வூதியத்தில் பெண்களுக்கு உள்ள அதிக உரிமைகள்
ஒரு பெண் விவாகரத்துக்கு விண்ணப்பித்தால் அல்லது வீட்டு வன்முறை அல்லது வரதட்சணை துன்புறுத்தலின் கீழ் வழக்குத் தொடர்ந்தால், அவள் கணவருக்குப் பதிலாக தனது குழந்தைகளை ஓய்வூதியத்திற்கு பரிந்துரைக்கலாம். திருமண வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு இது ஒரு பெரிய ஆதரவாக இருக்கும்.
நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை
விவாகரத்து பெற்ற அல்லது பிரிந்த மகளும் இப்போது குடும்ப ஓய்வூதியத்தைப் பெற முடியும். விவாகரத்து செயல்முறை அவளுடைய பெற்றோரின் வாழ்நாளில் தொடங்கப்பட்டிருந்தால், நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்காக அவள் காத்திருக்க வேண்டியதில்லை. முன்னதாக, இந்த செயல்முறை பல ஆண்டுகள் எடுக்கும். இதனால், நிதி நெருக்கடிகள் மற்றும் மன அழுத்தத்த்தை சந்திக்க வேண்டிய நிலை இருந்தது.
பென்ஷன் விதிகள் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்
பென்ஷன் விதிகள் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதற்கும், சமூக-பொருளாதார ரீதியாக அவர்கள் அதிகாரம் பெறுவதற்கும் என்று சிங் கூறினார். ஓய்வூதியம் பெறுவோர் கௌரவமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ அரசாங்கம் மிகக் குறுகிய காலத்தில் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கிறது.
மேலும் படிக்க | SIP Mutual Fund: ஆயிரங்களை லட்சங்களாக பெருக்க... மாதம் ரூ.2000 முதலீடு போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









