ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்காமல் பென்ஷன் நிறுவிட்டதா? ஓய்வூதியதாரர்கள் இதை செய்தால் போதும்

Life Certificate for Pensioners: ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்காததால் ஓய்வூதியம் நின்றுவிட்டதா? ஓய்வூதியத்தை மீண்டும் பெறத் தொடங்க என்ன செய்ய வேண்டும்? இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 6, 2025, 11:00 AM IST
  • உங்கள் ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டுள்ளதா?
  • ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயம்.
  • வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான எளிய வழிகள் என்ன?
ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்காமல் பென்ஷன் நிறுவிட்டதா? ஓய்வூதியதாரர்கள் இதை செய்தால் போதும்

Pensioners Latest News: மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. நவம்பர் மாதத்தில் உங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்து விட்டீர்களா? காலக்கெடுவிற்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்காதவர்கள் என்ன செய்வது? ஓய்வூதியம் முடக்கப்பட்டால் அதை மீண்டும் பெற என்ன வழிவகை உள்ளது? ஓய்வூதியத்தை மீட்டெடுக்க தேவைப்படும் ஆவணங்கள் என்ன? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source

Life Certificate: ஆயுள் சான்றிதழ் என்றால் என்ன?

வாழ்க்கைச் சான்றிதழ் என்றும் அழைகப்படும் ஆயுள் சான்றிதழ் ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கான முக்கியமான ஆவணமாகும். ஓய்வூதியதாரர் உயிருடன் இருப்பதையும், அவர் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதை உறுதிசெய்யவும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கப்படுகின்றது.

Pension Stopped: உங்கள் ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டுள்ளதா?

இந்த ஆண்டும் இதே செயல்முறை இருந்தது. ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக மத்திய அரசு டிஜிட்டல் ஆயுள் பிரச்சராம் 4.0 -ஐயும் நடத்தியது. எனினும் சில காரணங்களால் இன்னும் சில ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்காமல் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாததால் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டிருந்தால், கவலை வேண்டாம், பீதியடைய வேண்டாம். அரசாங்க விதிமுறைகளின்படி, நிறுத்தப்பட்ட உங்கள் ஓய்வூதியத்தை உடனடியாக மீண்டும் தொடங்க எளிதான மற்றும் விரைவான வழி உள்ளது. முழுமையான செயல்முறையை இங்கே காணலாம்.

ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதிய விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை பராமரிக்க இந்த செயல்முறை அவசியம். ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதையும் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவரிடம் தான் ஓய்வூதியம் செல்கிறது என்பதையும் இந்த சான்றிதழ் உறுதிப்படுத்துகிறது. காலக்கெடுவிற்குள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்காத மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட துரதிர்ஷ்டவசமான ஓய்வூதியதாரர்களில் நீங்களும் ஒருவரா? கவலைப்படத் தேவையில்லை. விதிகளின்படி, நீங்கள் உங்கள் ஆயுள் சான்றிதழை மீண்டும் சமர்ப்பித்தவுடன், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட உங்கள் ஓய்வூதியம் உடனடியாக மீட்டெடுக்கப்படும்.

வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான எளிய வழிகள்

வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் செயல்முறை இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. ஓய்வூதியதாரர்களுக்கு வசதியான பல வழிகள் தற்போதுள்ளன. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என 2 வழிகளிலும் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

ஆஃப்லைன் செயல்முறை

ஆயுள் சான்றிதழை ஆஃப்லைனில் சமர்ப்பிக்க விரும்பினால், பின்வரும் ஆவணங்களுடன் உங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டும்:

ஆதார் அட்டை

ஓய்வூதிய ஐடி

வங்கி பாஸ்புக்

ஒரு புகைப்படம்

சரிபார்ப்புக்குப் பிறகு வங்கி ஊழியர்கள் உங்கள் வாழ்க்கைச் சான்றிதழை ஏற்றுக்கொள்வார்கள்.

ஆன்லைன் செயல்முறை

உங்கள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். இதைச் செய்ய, ஜீவன் பிரமான் செயலி (Jeevan Pramaan App) அல்லது ஜீவன் பிரமான் போர்ட்டலைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு கீழ்காணும் விஷயங்கள் தேவை:

- உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
- பின்னர் நீங்கள் பயோமெட்ரிக் சரிபார்ப்பை (கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன்) முடிக்க வேண்டும்.
- சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் வாழ்க்கைச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட்டு டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்படும்.

வீட்டிலிருந்தே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான சிறப்பு வசதி

80 வயதுக்கு மேற்பட்ட அல்லது மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் ஒரு சிறப்பு வசதியை வழங்கியுள்ளது. அத்தகைய மூத்த குடிமக்களுக்கு, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வீட்டிலிருந்தே வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும் வசதியை வழங்குகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், வங்கி மற்றும் தபால் நிலைய ஊழியர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று சான்றிதழ்களைப் பெறுகிறார்கள். உடல் ஊனம் அல்லது முதுமை காரணமாக வங்கிக்கு செல்ல முடியாதவர்களுக்கு இந்த சிறப்பு வசதி ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அலவன்சுகள் நிறுத்தப்படுமா? 18 மாத குழப்பம் ஏன்?

மேலும் படிக்க | 2026ல் தங்க விலை எப்படி இருக்கும்? பலமடங்கு உயர்கிறதாம்.. அதிர்ச்சி! எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News