)
Pensioners Latest News: ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. நீங்கள் உங்கள் ஓய்வூதியத்தை தவறாமல் சரியான நேரத்தில் பெற, ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். அதைச் சமர்ப்பிப்பதற்கான செயல்முறை சில குறிபிட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
- 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை அதைச் சமர்ப்பிக்கலாம்.
- 60 முதல் 80 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை அதைச் சமர்ப்பிக்கலாம்.
இந்த வேலையை வீட்டிலிருந்தே ஆன்லைனில் எளிதாகச் செய்யலாம். அல்லது, ஓய்வூதியதாரர்கள் ஒரு தபால்காரரை அழைத்து அவர் மூலமாகவும் ஆயுள் சான்றுதழை சமர்ப்பிக்கலாம்.
ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்க்கைச் சான்றிதழ் என்பது பயோமெட்ரிக் அடிப்படையிலான டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் ஆகும். மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இது மிகவும் முக்கியமானது. ஓய்வூதியம் பெறுபவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதற்கான சான்றை இது வழங்குகிறது.
வாழ்க்கைச் சான்றிதழ் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். அதாவது டிசம்பர் மாதம் முதல் தடையின்றி ஓய்வூதியத்தைப் பெற, நவம்பர் 30 ஆம் தேதிக்குள் அதை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு ஓய்வூதியதாரர் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தவறினால், டிசம்பர் முதல் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பது நிறுத்தப்படும். இருப்பினும், ஓய்வூதியதாரர் அதை சமர்ப்பித்தவுடன், முழு ஓய்வூதியத் தொகையும், நிறுத்தப்பட்ட மாதங்களுக்கான அரியர் தொகையும் அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஓய்வூதியதாரர்கள் ஜீவன் பிரமான் செயலி மூலமாகவோ, தங்கள் வங்கி அல்லது தபால் நிலையத்தின் அதிகாரப்பூர்வ செயலி மூலமாகவோ, தேவையான தகவல்களை வழங்கி, வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். அல்லது, அருகிலுள்ள ஜீவன் பிரமான் மையம், வங்கி அல்லது பொது சேவை மையத்திற்குச் சென்றும் இதை பதிவு செய்யலாம். ஆதார், வங்கி விவரங்கள், PPO எண் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை வழங்கி பதிவை நிறைவுசெய்யலாம்.
- முதலில், ஜீவன் பிரமான் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- செயலியில் உள்ள புதிய பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
– ஆதார் எண், பெயர், வங்கி கணக்கு எண், ஓய்வூதிய உத்தரவு (PPO) மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை நிரப்பவும்.
– ‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிடவும்.
– இதற்குப் பிறகு, ஆதார் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் அடையாளத்துடன் (கைரேகை அல்லது கருவிழி) உறுதிப்படுத்தவும்.
– சமர்ப்பித்தவுடன், ஆதார் அதிகாரி தகவலைச் சரிபார்ப்பார்.
- அதன் பின் உங்களுக்கு ஜீவன் பிரமான் ஐடி கிடைக்கும்.
– பிரமான் ஐடியை உருவாக்கிய பிறகு, ஓய்வூதியதாரர் OTP மூலம் மீண்டும் செயலியில் லாக் இன் செய்ய வேண்டும்.
– ‘Generate Jeevan Pramaan’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- ‘Generate OTP’ என்பதைக் கிளிக் செய்து பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும். உங்கள் PPO எண், நீங்கள் ஓய்வூதியம் பெறும் நிறுவனம், உங்கள் பெயர் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களையும் உள்ளிட வேண்டும்.
– பின்னர் செயலி உங்கள் முகத்தை ஸ்கேன் செய்ய அனுமதி கேட்கும்.
- ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
- அதில் தோன்றும் வழிமுறைகளைப் படித்து, பின்னர் Proceed பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் முகம் ஸ்கேன் செய்யப்படும். கோரப்பட்ட தகவலை உள்ளிடவும், உங்கள் முகம் மீண்டும் ஸ்கேன் செய்யப்படும். அதன் பிறகு உங்கள் ஜீவன் பிரமான் ஐடி எண் உங்களுக்கு வழங்கப்படும்.
- இறுதியாக, சான்றிதழைப் பதிவிறக்குவதற்கான விருப்பம் செயல்படுத்தப்படும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தியையும் பெறுவீர்கள்.
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) மூலம் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பதற்கான ஒரு சேவையை அஞ்சல் துறை தொடங்கியுள்ளது. கோரிக்கையின் பேரில், அருகிலுள்ள தபால் நிலையத்திலிருந்து ஒரு தபால்காரர் ஓய்வூதியதாரரின் வீட்டிற்குச் சென்று டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கும் செயல்முறையை செய்து முடிக்க உதவுவார். ஓய்வூதியதாரர் இந்த சேவைக்கு ₹70 செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக, இந்த ஆண்டு நான்காவது டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் பிரச்சாரம் நடத்தப்படும் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை தெரிவித்துள்ளது. இது 2025 நவம்பர் 1 முதல் 30 வரை நாடு முழுவதும் நடக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ