Petrol Diesel Excise Tax Hike: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது நாளை (ஏப்ரல் 8) முதல் அமலுக்கு வருகிறது.
Petrol Diesel Excise Tax Hike: கலால் வரி உயர்வு
உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாள்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உலக நாடுகளுக்கான வணிக வரியை அறிவித்ததன் விளைவாக கச்சா எண்ணெய் விலையில் இந்த ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். இதையொட்டி, தங்களின் வரி வருமானத்தை பெருக்கிக் கொள்ள மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் அளவில் உயர்த்திருப்பதாக கூறப்படுகிறது.
Petrol Diesel Excise Tax Hike: மக்களுக்கு பாதிப்பு இருக்காது
இருப்பினும், இது எப்போது மற்றும் எப்படி பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. இருப்பினும் பெட்ரோலிய அமைச்சகம் இந்திய நுகர்வோருக்கு இந்த கலால் வரி உயர்வால் எவ்வித பாதிப்பும் இருக்காது என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Petrol Diesel Excise Tax Hike: தற்போதைய பெட்ரோல், டீசல் விலை
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மிகக் குறைந்த அளவிற்குச் சரிந்துள்ளது. சில்லறை எண்ணெய் விலைகள் குறைவதால் நுகர்வோருக்கு எந்த தாக்கமும் இருக்காது. ஆனால், மத்திய அரசு சமீபத்திய கலால் வரி உயர்வின் மூலம் அதன் வருவாயை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது என கூறப்படுகிறது. சென்னையில் தற்போது பெட்ரோல் விலை ரூ.100.80 ஆகவும், டீசல் விலை ரூ.92.39 ஆகவும் விற்பனையில் உள்ளது.
Petrol Diesel Excise Tax Hike: எல்பிஜி விலை உயர்வு
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மட்டுமின்றி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் தற்போது மத்திய அரசால் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதன்மூலம் தற்போது ரூ.818.50 என்ற விலையில் சென்னையில் விற்பனையாகி வரும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது ரூ.868.50 ஆக உயரும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு பொது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி மத்திய அரசால் மானியம் பெற்று வரும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நடுத்தர வர்க்கத்தினர், பாமர மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். எப்போதும் ஆங்கில மாதம் 1ஆம் தேதியே எல்பிஜி சிலிண்டர் விலை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் நிலையில், தற்போது 7ஆம் தேதி விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க | சமையல் சிலிண்டர் திடீர் விலை உயர்வு... உச்சக்கட்ட ஷாக்கில் மக்கள்!
மேலும் படிக்க | EPF உறுப்பினர்களுக்கு ஷாக்: உயர் ஓய்வூதியம் பெறுவதில் வந்த சிக்கல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









