ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம். PFRDA வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை.. முழு விபரம் இதோ..

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் (UPS) 2025 ஏப்ரல் 1ம் தேதி, முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) அறிவித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 22, 2025, 01:41 PM IST
  • ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிடுள்ள அறிக்கை
  • அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்குமான ஓய்வூதியத் திட்டம்.
  • தற்போதுள்ள மத்திய அரசு ஊழியர்கள் எப்போது UPS திட்டத்தை தேர்வுசெய்ய முடியும்?
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம். PFRDA வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை.. முழு விபரம் இதோ..

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் (UPS) 2025 ஏப்ரல் 1ம் தேதி, முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) அறிவித்துள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மத்திய அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் இணைவதற்கான கோரிக்கை படிவங்கள் அதே நாளில் இருந்து புரோட்டீன் CRA போர்ட்டலில் (Protean CRA portal) அதாவது npscra.nsdl.co.in என்ற தளத்தில் ஆன்லைனில் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிடுள்ள அறிக்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

1. அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்குமான ஓய்வூதியத் திட்டம்

தற்போது தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS ஒரு கூடுதல் ஆப்ஷனாக கிடைக்கும். விரும்பிய எவரும் இதனை தேர்ந்தெடுக்கலாம்.

2. புதிய ஓய்வூதிய விதிகள் மூன்று பிரிவு அரசு ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் சேர உதவும்

 - ஏப்ரல் 1, 2025 அன்று பணியில் இருக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்கள்

- ஏப்ரல் 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேரும் புதிய மத்திய அரசு ஊழியர்கள்

- மார்ச் 31 அன்று அல்லது அதற்கு முன் அடிப்படை விதிகள் 56(j) இன் கீழ் ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற அல்லது ஓய்வு பெற்ற NPS திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்கள்

3. ஓய்வு பெற்ற சந்தாதாரர் இறந்தால் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

மூன்றாவது வகை ஊழியர்களில், ஓய்வு பெற்ற பிறகு அல்லது UPS திட்டத்திற்கான விருப்பத்தைப் பயன்படுத்தாமல் ஓய்வு பெற்ற சந்தாதாரர் இறந்தால், அவர்களின் சட்டப்பூர்வமாக திருமணமான மனைவி இந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்ய முடியும்.

4. தற்போதுள்ள மத்திய அரசு ஊழியர்கள் எப்போது UPS திட்டத்தை தேர்வுசெய்ய முடியும்?

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்பும் மத்திய அரசு ஊழியர்கள் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை விண்ணப்பிக்க வேண்டும் என்று PFRDA தெரிவித்துள்ளது.

5. புதிய மத்திய அரசு பணியாளர்கள் எப்போது UPS-ஐத் தேர்வுசெய்ய முடியும்?

ஏப்ரல் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு சேரும் மத்திய அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்த 30 நாட்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்கள், இனி தேசிய ஓய்வூதிய முறைக்கு (NPS) பதிலாக, UPS முறையை தேர்வு செய்யலாம். புதிய திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த ஆண்டு ஜனவரியில் அமலாகும் தேதி மத்திய அரசால் உறுதிபடுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்பது பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் NPS என்னும் தேசிய ஓய்வூதிய முறை ஆகியவற்றின் கலவை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அரசு ஊழியர்கள் உத்திரவாத ஓய்வூதியத்தைப் பெறும் அதே நேரத்தில், சந்தையுடன்- இணைக்கப்பட்ட அவர்களின் முதலீடுகளின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் தொகையையும் பெறலாம்.

மேலும் படிக்க | UPS: உத்திரவாத ஓய்வூதியம் தரும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம்... கணக்கிடப்படும் முறை

மேலும் படிக்க | மேலும் படிக்க | UPS vs NPS: உங்களுக்கு ஏற்ற ஓய்வூதிய திட்டம் எது? முழுமையான ஒப்பீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News