)
Physical Gold vs Gold ETFs: பழங்காலம் முதல் இன்று வரை தங்கத்தின் மீதான ஈர்ப்பு இருந்துகொண்டேதான் இருக்கின்றது. சிலர் தங்க நகைகளாக வாங்குகிறார்கள், சிலர் இதை முதலீடாக சேர்த்து வைக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்தில், தங்கம் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.
ஒரே ஆண்டில் பம்பர் ஏற்றம்
- கடந்த ஒரு ஆண்டில் தங்கம் மிகப்பெரிய ஏற்றத்தை கண்டுள்ளது.
- செப்டம்பர் 11, 2024 அன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.73,200 ஆக இருந்தது.
- ஒரு வருடம் கழித்து, செப்டம்பர் 11, 2025 அன்று அதன் விலை 10 கிராமுக்கு ரூ.1,12,500 ஆக அதிகரித்துள்ளது.
- அதாவது, சுமார் 54% அதிகரிப்பு காணப்படுகிறது.
Gold ETF முதலீட்டிலும் நல்ல லாபம்
கோல்ட் ஈடிஎஃப்-களில் முதலீடு செய்தவர்களும் சிறந்த வருமானத்தை பெற்றுள்ளனர். கடந்த ஒரு வருடத்தில், தங்க ETF-கள் சராசரியாக 50% வரை வருமானத்தை அளித்துள்ளன. ஆகஸ்ட் 2025 இல், தங்க ETF-களில் ரூ.2,189.5 கோடி நிகர முதலீடு வந்தது, இது தொடர்ந்து நான்காவது மாதமாக கிடைத்துள்ள வரவாகும். இந்தக் காலகட்டத்தில் தங்க ETF-களின் நிர்வகிக்கப்படும் சொத்து (AUM) ரூ.72,495 கோடியை எட்டியுள்ளதாக இந்தியாவில் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகள் சங்கம் (AMFI) கூறியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தங்க ETF-களில் முதலீட்டு ஓட்டம் 74% அதிகரித்துள்ளது.
Gold ETF என்றால் என்ன? இதன் செயல்முறை என்ன?
தங்க ETF என்பது பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் ஒரு முதலீட்டு கருவியாகும். இது தங்கத்தின் விலையைக் கண்காணித்து, அதை ஒத்த ஏற்ற இறக்கங்களை பிரதிபலிக்கிறது. அதாவது, சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தால், உங்கள் ETF இன் விலையும் அதிகரிக்கும். முதலீட்டாளர்கள் டிமேட் கணக்கு மற்றும் வர்த்தகக் கணக்கு மூலம் தங்க ETF ஐ வாங்கலாம். பங்குகளைப் போலவே எந்த நேரத்திலும் சந்தையில் அதை வாங்கி விற்கலாம்.
Gold ETF களில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
பாதுகாப்பு:
Gold ETF -இல் தங்கத்தை ஒரு புருளாக, அதாவது ஃபிசிக்கலாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆகையால், சேமித்து வைக்கும் இடம், திருட்டு அல்லது அதன் தூய்மை ஆகியவை பற்றிய கவலை இருக்காது.
வெளிப்படைத்தன்மை:
Gold ETF -இன் விலைகள் சந்தையில் பட்டியலிடப்பட்டுகின்றன. ஆகையால் இவற்றை முதலீட்டாளரால் எளிதாகக் கண்காணிக்க முடியும்.
பணப்புழக்கம்:
Gold ETF -ஐ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விற்கவும் வாங்கவும் வசதி உள்ளது.
சிறிய முதலீட்டின் வசதி:
Gold ETF -ஐ வாங்க பெரிய தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிறிய தொகையுடனும் இதை வாங்கலாம்.
Gold ETF முதலீட்டில் உள்ள அபாயங்கள்
- இது பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இது சந்தை ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படுகிறது.
- இதில் செலவு விகிதம் (ஃபண்டு மேலாண்மை கட்டணம்) செலுத்தப்பட வேண்டும். இது வருமானத்தை சிறிது குறைக்கக்கூடும்.
- தங்கத்தின் விலை லாங் டர்மில் சரிந்தால், இழப்பு ஏற்படலாம்.
ஃபிசிக்கல் தங்கத்தில் முதலீடு
இந்திய முதலீட்டாளர்கள் பாரம்பரியமாக தங்கத்தை அதாவது நகைகள், நாணயங்கள் அல்லது பிஸ்கட்களை வாங்க விரும்புகிறார்கள். ஆனால் சேமிப்பு செலவுகள், செய்கூலி மற்றும் தூய்மை போன்ற சிக்கல்கள் இதில் உள்ளன. இருப்பினும், திருமணம் மற்றும் குடும்ப காரணங்களால் அதன் தேவை எப்போதும் அதிகமாகவே இருக்கிறது.
முதலீட்டாளர்களுக்கான எச்சரிக்கை
கடந்த கால வருமானத்தைப் பார்த்து மட்டுமே முதலீட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது. தங்க விலைகள் பெரும்பாலும் சர்வதேச சந்தை, டாலர்-ரூபாய் மாற்று விகிதம் மற்றும் புவிசார் அரசியல் நிலைமைகளைப் பொறுத்தது. எனவே, தங்க முதலீட்டில் எதிர்காலத்தில் வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வழிகள் என்ன?
தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல வழிகள் உள்ளன:
- ஃபிசிக்கல் தங்கம் - நகைகள், நாணயங்கள், பிஸ்கட்கள்.
- தங்க ETFகள் - டிமேட் மூலம் பங்குச்சந்தையில் வாங்கி விற்கப்படும் அலகுகள்.
- தங்க மியூச்சுவல் ஃபண்டுகள் - ETF -களில் மறைமுக முதலீடு.
- சோவரின் தங்கப் பத்திரங்கள் (SGBs) - அரசாங்கத்தால் வெளியிடப்படும் பத்திரங்கள். இவற்றில் வட்டியும் செலுத்தப்படும்.
Gold ETF முதலீடு சுருக்கமாக....
- கடந்த ஒரு வருடத்தில் ஃபிசிக்கல் தங்கம் மற்றும் தங்க ETFகள் இரண்டும் சிறந்த வருமானத்தை அளித்துள்ளன.
- ஃபிசிக்கல் தங்கம் உணர்ச்சி மற்றும் பாரம்பரிய தேவைகளுக்கு ஏற்றது என்றாலும், நவீன முதலீட்டாளர்களுக்கு தங்க ETFகள் ஒரு வசதியான மற்றும் பாதுகாப்பான விருப்பமாக உருவெடுத்துள்ளன.
- எனினும், இதில் முதலீடு செய்வதற்கு முன், உங்கள் தேவைகள், இலக்குகள் மற்றும் ஆபத்து காரணிகளை மதிப்பிட்டு பின் முடிவெடுப்பது நல்லது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ