PM Dhan Dhan Yojana 2025 : பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள "பிரதம மந்திரி தன் தான்ய கிருஷி யோஜனா" திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மாவட்ட விவசாயிகளுக்கு சிறப்பு நிதியுதவி கிடைக்கப்போகிறது. அதனால், இத்திட்டத்தைப் பற்றியும், இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பிரதம மந்திரி தன்-தான்ய கிருஷி யோஜனா:
தற்போது மத்திய அரசு பல்வேறு பயனுள்ள மற்றும் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல், அவ்வப்போது புதிய திட்டங்களும் தொடங்கப்படுகின்றன. உதாரணமாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றுதான் இந்த "பிரதம மந்திரி தன் தான்ய கிருஷி யோஜனா" திட்டம்.
அப்போது நாடாளுமன்றத்தில் இத்திட்டம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை மத்திய அரசு தொடங்கும் என்றும், இதன் நேரடிப் பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த வரிசையில், அக்டோபர் 11 சனிக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி "பிரதம மந்திரி தன் தான்ய கிருஷி யோஜனா" திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் உள்ள 100 மாவட்ட விவசாயிகள் பலனடைய இருக்கிறார்கள்.
பிரதம மந்திரி தன் தான்ய கிருஷி யோஜனா திட்டத்தின் 5 முக்கிய நோக்கங்கள்:
வேளாண் உற்பத்தித்திறனை அதிகரித்தல்: குறைந்த விளைச்சல் உள்ள பகுதிகளில் உற்பத்தியைப் பெருக்குவதே முக்கிய நோக்கம்.
பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் நிலையான வேளாண் நடைமுறைகளை ஊக்குவித்தல்: ஒரே பயிரை நம்பியிருப்பதை மாற்றி, பலதரப்பட்ட பயிர்களைப் பயிரிட விவசாயிகளை ஊக்குவிப்பது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண் முறைகளைச் செயல்படுத்துவது.
பஞ்சாயத்து மற்றும் வட்டார அளவில் அறுவடைக்குப் பிந்தைய சேமிப்புத் திறனை அதிகரித்தல்: விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்க உதவும் வகையில் சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துதல்.
நம்பகமான நீர் ஆதாரங்களுக்காக நீர்ப்பாசனக் கட்டமைப்பை மேம்படுத்துதல்: விவசாய நிலங்களுக்குத் தேவையான நீர் கிடைப்பதை உறுதி செய்ய, நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவது.
விவசாயிகளுக்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால விவசாயக் கடன் வசதியை அதிகரித்தல்: விவசாயிகளுக்குத் தேவையான நேரத்தில் எளிதாகக் கடன் கிடைப்பதை உறுதி செய்வது.
இத்திட்டத்தின் பலன் குறைந்த விளைச்சல் கொண்ட பகுதிகளில் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் 1.7 கோடி விவசாயிகளுக்கு உதவி கிடைக்கும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
யார் யார் பயன்பெறுவார்கள்?
பிரதம மந்திரி தன் தான்ய கிருஷி யோஜனா 2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, ஜூலை 16, 2025 அன்று இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளுக்கு ரூ.24,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 100 குறைந்த செயல்திறன் கொண்ட விவசாய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு: இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர்,
கேரளா: கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர்,
கர்நாடகா: துமகூரு, சித்ரதுர்கா, கொப்பல், கடக், ஹாவேரி, சிக்கபல்லாபுரா
தெலுங்கானா: நாராயண்பேட், ஜோகுலாம்பா கதவால், ஜன்கான், நாகர்கர்னூல்
ஆந்திரப் பிரதேசம்: ஸ்ரீ சத்ய சாய், அனந்தபூர், அல்லூரி சீதாராம ராஜு, அன்னமையா
ஒடிசா: கண்டமால், மல்கான்கிரி, சுந்தர்கர், நுவாபாடா
இதுதவிர இன்னும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாவட்டங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களுக்கு மத்திய அரசு பிரதம மந்திரி தன் தான்ய கிருஷி யோஜனா திட்டத்தின் கீழ் சிறப்பு கவனம் செலுத்த இருக்கிறது.
மேலும் படிக்க | PM Mudra Yojana: சொந்த தொழில் தொடங்க ரூ.20 லட்சம் கடன் தரும் அரசு, பெறுவது எப்படி?
மேலும் படிக்க | முத்ரா திட்டம் : யார் யாரெல்லாம் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









