)
PM Kisan Samman Nidhi Yojana: மத்திய அரசு விவசயிகளின் நலனுக்கான பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. இவற்றில் பிஎம் கிசான் திட்டம் மிகவும் பிரபலமான மற்றும் முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது. விவசாயிகள் தற்போது பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின் 20வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இதற்கு முந்தைய தவணை பிப்ரவரி 2025 இல் வழங்கப்பட்டது.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
- பிஎம் கிசான் திட்டத்தின் வழக்கமான அட்டவணையின்படி, 20வது தவணை ஜூன் மாதத்தில் பெறப்பட்டிருக்க வேண்டும்.
- இருப்பினும், சில தொழில்நுட்ப காரணங்களால், இந்த முறை தவணைப் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- 20வது தவணை எப்போது வரும் என்ற கேள்வி இப்போது அனைவருக்கும் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் ரூ.2,000 தவணையை வெளியிடக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
- அவர் ஜூலை 19 ஆம் தேதி பீகார் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரதமர் மோடி பீகாரில் இருந்து 20வது தவணையை வெளியிட்டு தகுதியான விவசாயிகளின் கணக்குகளுக்கு தலா ரூ.2,000 அனுப்பக்கூடும் என்று நம்பப்படுகிறது.
- இருப்பினும், அரசாங்கம் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா: பலன்களைப் பெறுவதற்கான வழிமுறைகள்
- பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகள் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 பெறுகிறார்கள்.
- எந்த தடையும் இல்லாமல் தவணைத் தொகையை பெற, விவசாயிகள்:
- இந்த முறை, நில விவரங்களில் உள்ள பிழைகள் காரணமாக பல கொடுப்பனவுகள் தாமதமாகின்றன.
- பெரும்பாலான நிராகரிப்புகள் தவறான மாநில அல்லது மாவட்ட உள்ளீடுகள் காரணமாக நடந்தன.
- PM-KISAN போர்ட்டலில் உள்ள 'State Transfer Request’ விருப்பத்தைப் பயன்படுத்தி அல்லது அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று விவசாயிகள் இதைச் சரிசெய்யலாம்.
e-KYC இல்லை என்றால் தவணைத் தொகை கிடைக்காது
e-KYC-ஐ முடிக்காத விவசாயிகளுக்கு அடுத்த தவணை கிடைக்காது என்று அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (pmkisan.gov.in) தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் e-KYC-ஐ பின்வருமாறு செய்து முடிக்கலாம்:
How to Check Beneficiary Status
பயனாளியின் நிலையை எப்படி செக் செய்வது? பிஎம் கிசான் வலைத்தளம் மூலம் விவசாயிகள் தங்கள் பெயர் பயனாளிகள் பட்டியலில் உள்ளதா என்பதை செக் செய்யலாம். ஆதார் எண், வங்கி விவரங்கள் மற்றும் நிலப் பதிவுகள் சரியாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது அடுத்த கொடுப்பனவை சரியான நேரத்தில் பெற உதவுகிறது.
பிஎம் கிசான் தவணை நிலையைச் சரிபார்க்கும் செயல்முறை:
- முதலில் https://www.pmkisan.gov.in என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.
- ‘Farmers Corner’ க்குச் சென்று ‘Beneficiary Status’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்.
= ‘Get Data’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் தவணை நிலை, வங்கி விவரங்கள் மற்றும் e-KYC தகவல் தோன்றும்.
உங்கள் பதிவு எண் உங்களுக்கு நினைவில் இல்லை என்றால் என்ன செய்வது?
- ‘Know Your Registration Number’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்க்கவும்.
- உங்கள் பதிவு எண் திரையில் காண்பிக்கப்படும்.
- பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் அல்லது வேறு ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், PM-KISAN உதவி எண்ணை 155261 அல்லது 011-24300606 என்ற எண்ணில் அழைக்கவும்.
PM Kisan: முக்கிய தகவல்கள் சுருக்கமாக
- பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் ரூ.2,000 என்ற 3 சம தவணைகளில் விவசயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 வழங்கப்படுகின்றது.
- பிஎம் கிசான் 20வது தவணை இந்த மாத இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- பிஎம் கிசான் வலைத்தளம் மூலம் விவசாயிகள் தங்கள் பெயர் பயனாளிகள் பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
- e-KYC இல்லை என்றால் தவணைத் தொகை கிடைக்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ