)
PM Kisan Samman Nidhi Yojana: விவசாயிகள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருந்த மிகப்பெரிய செய்தி அவர்களுக்கு கிடைத்துவிட்டது. பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் 20வது தவணைக்கான தேதி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
- நாட்டின் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
- மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக பல வித நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது.
- அவற்றில் பிஎம் கிசான் திட்டம் மிக முக்கியமான மற்றும் பிரபலமான திட்டமாக உள்ளது.
- பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி அடுத்த தவணைக்கான தொகையை ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உள்ள சேவாபுரி சட்டமன்றத்தின் பனோலி கிராமத்தில் இருந்து வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
- 20வது தவணையின் ரூ.2,000 தகுதியான விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்படும்.
- இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் பகிரப்பட்ட செய்தியின் மூலம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா
இன்றே முடிக்க வேண்டிய 5 முக்கிய பணிகள்
- முதலில் https://pmkisan.gov.in/ -க்கு சென்று Beneficiary Status -இல் உங்கள் பயனாளி நிலையை செக் செய்யவும்.
- நிலப் பதிவுகளின் சரிபார்ப்பு அல்லது நிலப் பதிவுகள் தொடர்பான ஏதேனும் சிக்கல் நிலுவையில் இருந்தால், அதைத் தீர்க்கவும்.
- e-KYC ஐ செய்து முடிக்கவும். பிஎம் கிசான் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகள் eKYC ஐப் பெறுவது கட்டாயமாகும். இது இல்லாமல், அடுத்த தவணைக்கான பணம் கிடைக்காது.
- வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கவும். ஆதார் இணைகப்பட்ட கணக்கில்தான் தவணைத்தொகை அனுப்பப்படும். உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களையும் செக் செய்துகொள்ளவும். வங்கிக் கணக்கு செயலில் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.
- பிஎம் கிசான் பதிவு மற்றும் ஆதார் அட்டையில் பெயர் மற்றும் பிற விவரங்கள் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஏதேனும் பொருந்தாத தன்மை அல்லது தவறு இருந்தால், அதை சரி செய்யவும். மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும். OTP மற்றும் பிற அறிவிப்புகள் மொபைல் எண்ணில்தான் வரும்.
மத்திய அரசு கொடுத்த தகவல் என்ன?
- இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை X இல் ஒரு பதிவின் மூலம் பிஎம் கிசான் 20வது தவணை குறித்த அப்டேட்டை அளித்துள்ளது.
- 'இனி காத்திருக்க வேண்டாம்! பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் 20வது தவணை ஆகஸ்ட் 2, 2025 அன்று உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து நேரடியாக உங்கள் கணக்கை வந்தடையும்.' என்று பதிவில் கூறப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனா என்றால் என்ன?
- பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், அரசாங்கம் நாட்டின் அனைத்து தகுதியுள்ள நில உரிமையாளர் விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ.6000 நிதி உதவி வழங்குகிறது.
- இந்த தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது.
- நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 என்ற மூன்று சம தவணைகளில் இந்த தொகை வழங்கப்படுகின்றது.
- மத்திய அரசின் இந்த லட்சியத் திட்டம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முதல் தவணை கோரக்பூரில் இருந்து வெளியிடப்பட்டது.
- இதுவரை, அரசாங்கம் 19 தவணைகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.3.69 லட்சம் கோடியை வழங்கியுள்ளது.
- 19வது தவணையில் மட்டும், டிசம்பர் 2024 முதல் மார்ச் 2025 வரை, 10.06 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் கணக்குகளுக்கு ரூ.23,500 கோடிக்கும் அதிகமான தொகை அனுப்பப்பட்டுள்ளது.
பல துறைகளுடன் தரவு இணைப்பு
- பிஎம் கிசான் திட்டத்தை வெளிப்படையாகவும் துல்லியமாகவும் செயல்படுத்த, அரசாங்கம் PFMS, UIDAI மற்றும் வருமான வரித் துறையுடன் தரவு இணைப்பைச் செய்துள்ளது.
- அத்துடன் ஆதார் அடிப்படையிலான பணம் செலுத்துதல், லேண்ட் சீடிங் மற்றும் e-KYC ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
- புகார்களைத் தீர்க்க டிஜிட்டல் வழிமுறைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.
திட்டத்தில் புகார்கள் இருந்தால் இப்படி பதிவு செய்யலாம்
- விவசாயிகள் இப்போது CPGRAMS போர்டல், PM-Kisan போர்டல், நேரடி விண்ணப்பம் அல்லது மின்னஞ்சல் மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம்.
- இதுவரை, 53 லட்சம் விவசாயிகளின் 95 லட்சம் கேள்விகளுக்கு செப்டம்பர் 2023 இல் தொடங்கப்பட்ட AI அடிப்படையிலான 'Kisan e-Mitra' சாட்பாட் மூலம் 11 மொழிகளில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
- இந்த வழியில், இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு நேரடி நிதி உதவியை வழங்குவது மட்டுமல்லாமல், டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் விரைவான தீர்வு மூலம் விவசாயிகளின் நம்பிக்கையையும் வலுப்படுத்துகிறது.
- ஆதார், நிலப் பதிவுகள் அல்லது e-KYC தொடர்பான பிழைகள் காரணமாக பல விவசாயிகள் நன்மைகளைப் பெற முடியாமல் போகின்றது.
- ஆனால் இந்த செயல்முறைகள் முடிந்து, தவறுகள் திருத்தப்பட்டவுடன் நிறுத்தப்பட்ட தவணைகள் உட்பட அனைத்து முந்தைய தவணைகளும் மாற்றப்படுகின்றன.
பிஎம் கிசான் 20வது தவணை அப்டேட்ஸ் சுருக்கமாக....
- பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு, மத்திய அரசு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 நிதி உதவி அளிக்கிறது.
- இதுவரை இந்தத் திட்டத்தில் 19 தவணைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 20வது தவணை ஆக்ஸ்ட் 2 ம் தேதி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிஎம் கிசான் 20வது தவணையை பெற 5 முக்கிய பணிகளை விவசாயிகள் செய்து முடிக்க வேண்டும்.
- ஏதேனும் பிரச்சனை இருந்தால், விவசாயிகள் இப்போது CPGRAMS போர்டல், PM-Kisan போர்டல், நேரடி விண்ணப்பம் அல்லது மின்னஞ்சல் மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ