PM Kisan 20வது தவணை யாருக்கெல்லாம் கிடைக்காது? முக்கிய அப்டேட் இதோ

PM Kisan Latest News: பதிவு செய்த பிறகும், சில விவசாயிகளின் பிஎம் கிசான் தவணை கிடைக்காமல் சிக்கல் ஏற்படக்கூடும். இதற்கு என்ன காரணம்? எந்த பிரச்சனையும் இல்லாமல் பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணையை பெற என்ன செய்ய வேண்டும்? இது பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 17, 2025, 01:50 PM IST
  • பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
  • 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள்.
  • இந்த விவசாயிகளுக்கு 20வது தவணை கிடைக்காமல் போகலாம்.
PM Kisan 20வது தவணை யாருக்கெல்லாம் கிடைக்காது?  முக்கிய அப்டேட் இதோ

PM Kisan Samman Nidhi Yojana: நாட்டில் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் விவசாயிகளுக்காக பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் மிக பிரபலமான ஒரு திட்டமாக உள்ளதுதான் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம். இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 

Add Zee News as a Preferred Source

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்

இந்தத் திட்டத்தின் நோக்கம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதாகும். இந்த திட்டத்தின் கீழ், இதுவரை, விவசாயிகள் 19 தவணைகளில் பலன்களைப் பெற்றுள்ளனர். விரைவில் நாட்டின் விவசாயிகள் 20வது தவணையின் பலனைப் பெற உள்ளனர். 

PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணை ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த முறை பதிவு செய்த பிறகும், சில விவசாயிகளின் தவணை கிடைக்காமல் சிக்கல் ஏற்படக்கூடும். இதற்கு என்ன காரணம்? எந்த பிரச்சனையும் இல்லாமல் பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணையை பெற என்ன செய்ய வேண்டும்? இது பற்றி இந்த பதிவில் காணலாம்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் கீழ், ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த தொகையை அரசாங்கம் விவசாயிகளுக்கு 3 தவணைகளாக வெளியிடுகிறது. ஒவ்வொரு தவணையிலும் ரூ.2,000 வழங்கப்படுகிறது.

9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள்

கடந்த முறை, பிஎம் கிசான் திட்டத்தின் 19வது தவணையில், 9 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள விவசாயிகளின் கணக்குகளில் பணம் வந்தது. முன்னதாக, 9 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள விவசாயிகள் 18வது தவணையின் பலனைப் பெற்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், 20வது தவணையின் பலனை எத்தனை விவசாயிகள் பெறுவார்கள் என்பது குறித்து துறை இன்னும் தகவல் அளிக்கவில்லை. இருப்பினும், இந்த எண்ணிக்கை 9 கோடிக்கு சற்று குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம் என்றே கூறப்படுகின்றது.

இந்த விவசாயிகளுக்கு 20வது தவணை கிடைக்காமல் போகலாம்

1 - இன்னும் தங்கள் e-KYC-ஐ செய்து முடிக்காத விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் பணத்தைப் பெற மாட்டார்கள். ஆகையால், இந்த வேலையை உங்கள் அருகிலுள்ள CSC மையம், வங்கி, திட்டத்தின் அதிகாரப்பூர்வ போர்டலான pmkisan.gov.in அல்லது அதிகாரப்பூர்வ செயலியின் மூலம் செய்து முடிப்பது நல்லது.

2 - போர்ட்டலில் நில உரிமைப் பதிவு பதிவேற்றம் செய்யப்படாத அல்லது சரிபார்க்கப்படாதவர்களின் தவணை நிறுத்தப்படலாம்.

3 - தவறான ஆவணங்களின் அடிப்படையில் சலுகைகளைப் பெறும் விவசாயிகளை அரசாங்கம் அடையாளம் கண்டு அவர்களின் பெயர்களை பட்டியலிலிருந்து நீக்கி வருகிறது.

4 - வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், பணம் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.

PM Kisan பணம் வரவில்லை என்றால் என்ன செய்வது?

பிஎம் கிசான் தொகை வெளியிடப்பட்ட பின் உங்கள் கணக்கில் டெபாசிட் ஆகவில்லையா? பிரதம மந்திரி கிசான் யோஜனா தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் எதிர்கொள்கிறீர்களா? அப்படியென்றால், இந்த உதவி எண்ணை அழைக்கவும். இது தவிர, நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியும் உதவி பெறலாம்.

E Mail: மின்னஞ்சல்: pmkisan-ict@gov.in

Toll Free Number: கட்டணமில்லா எண்: 155261 / 1800115526

Helpline: உதவி எண்: 011-23381092

விவசாயிகளுக்கு உதவ இந்த தொடர்பு சேனல்கள் அனைத்தும் 24×7 செயல்படும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: இணையும் பே ஸ்கேல்.... ஊதிய உயர்வு மட்டுமல்ல, பதவி உயர்வும் நிச்சயம்

மேலும் படிக்க | Mutual Fund SWP: ரூ.15 லட்சம் முதலீட்டில்... ஓய்வுக்கு பின் மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News