PM Kisan Latest News: பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் அடுத்த தவணையை எந்த வித சிக்கலும் இல்லாமல் பெற, விவசாயிகள் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டிய ஒரு பணி பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. அதை பற்றி இங்கே காணலாம்.

PM Kisan Samman Nidhi Yojana: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா மத்திய அரசால் விவசாயிகளுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் ஒரு திட்டமாகும். இதன் கீழ் விவசாயிகளுக்கு சீரான இடைவெளியில் நிதி உதவி அளிக்கப்படுகின்றது.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
பிரதமர் கிசான் சம்மான் நிதியின் 20வது தவணைக்காக விவசாயிகள் இப்போது காத்திருக்கின்றனர். இந்தக் காத்திருப்பு இப்போது விவசாயிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது. நீண்ட காலமாக, பயனாளி விவசாயிகள் பிஎம் கிசான் சம்மான் நிதியின் 20வது தவணை எப்போது வரும் என்பதை அறிய ஆவலாக இருக்கின்றனர். இந்த தவணை ஜூலை 18, 2025 அன்று வெளியிடப்படும் என சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதை பற்றி அரசாங்கம் இன்னும் எந்த வித அறிக்கையையும் வெளியிடவில்லை.
பல்வேறு ஊடக அறிக்கைகள், பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 20வது தவணையை பிரதமர் மோடி ஜூலை 18 வெள்ளிக்கிழமை வெளியிடக்கூடும் என்று தெரிவிக்கின்றன. அந்த நேரத்தில் பீகாரில் ஒரு விழாவில் பங்குகொள்ளும் பிரதமர் பிஎம் கிசான் 20வது தவணைத் தொகையையும் வெளியிடுவார் என நம்பப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா
இதற்கிடையில், பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் அடுத்த தவணையை எந்த வித சிக்கலும் இல்லாமல் பெற, விவசாயிகள் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டிய ஒரு பணி பற்றியும் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. அதை பற்றி இங்கே காணலாம்.
பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா: e-KYC இல்லையென்றால், 20வது தவணைக்கான பணம் சிக்கிக்கொள்ளலாம்
பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை (20வது தவணை) இன்னும் e-KYC செய்யாத விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படாது என்று மத்திய அரசு தெளிவாகக் கூறியுள்ளது. எனவே, நீங்கள் இன்னும் e-KYC செய்யவில்லை என்றால், உடனடியாக அருகிலுள்ள CSC மையத்திற்குச் சென்று அல்லது PM கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று இந்த செயல்முறையை செய்து முடிக்கவும்.
இது தவிர, உங்கள் வங்கிக் கணக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றாலும், பணம் சிக்கிக்கொள்ளலாம். ஆகையால், விவசாயிகள் கண்டிப்பாக இந்த இரண்டு பணிகளையும் விரைவாக செய்து முடிக்க வேண்டும். இதன் மூலம் அடுத்த தவணை எந்த பிரச்சனையும் இல்லாமல் கணக்கிற்கு வருவதை உறுதிபடுத்திக்கொள்ளலாம். நீங்கள் e-KYC செய்யாவிட்டால், உங்கள் பணம் சிக்கிக்கொள்ளலாம்.
PM Kisan: பிஎம் கிசான் சம்மான் நிதி 20வது தவணை பணம் வந்துவிட்டதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளும் வழி
- இதற்கு முதலில் பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in க்குச் செல்லவும்.
- அதன் பிறகு Farmers Corner பகுதிக்குச் செல்ல வேண்டும்.
- இப்போது Beneficiary Status / Know Your Status என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் ஆதார், வங்கிக் கணக்கு அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- கேப்ட்சாவை உள்ளிட்டு, OTP பெற்று நிலையைப் பார்க்கவும்.
What is PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் என்றால் என்ன?
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் பிப்ரவரி 24, 2019 அன்று தொடங்கப்பட்டது. இது டிசம்பர் 2018 முதல் அமலுக்கு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை நேரடி நன்மை பரிமாற்ற (DBT) தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக ரூ.2,000 மதிப்பிலான மூன்று தவணைகளில் அனுப்பப்படுகிறது. இந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் 4 மாத இடைவெளியில் வழங்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ