PM Kisan 20வது தவணை இந்த நாளில் வருகிறது: ஆனால்.... இதை செய்யவில்லை என்றால் கிடைக்காது

PM Kisan Latest News: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது வரும்? எந்தவித சிக்கலும் இல்லாமல்20வது தவணையை பெற விவசாயிகள் உடனடியாக செய்துமுடிக்க வேண்டிய பணிகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 7, 2025, 12:29 PM IST
  • பிஎம் கிசானின் 20வது தவணை.
  • மூன்று மிக முக்கியமான பணிகளை நீங்கள் விரைவில் முடிக்க வேண்டும்.
  • PM Kisan திட்டத்தின் பலன் யாருக்கு கிடைக்கும்?
PM Kisan 20வது தவணை இந்த நாளில் வருகிறது: ஆனால்.... இதை செய்யவில்லை என்றால் கிடைக்காது

PM Kisan Samman Nidhi Yojana: நாட்டில் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா. இந்தத் திட்டத்தின் கீழ், 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை, DBT பரிமாற்றம் மூலம், 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 தொகை கொண்ட 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

PM Kisan திட்டத்தின் பலன் யாருக்கு கிடைக்கும்?

இந்தத் திட்டத்தின் பலன், அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும், இந்திய குடிமக்களாக இருக்கும் விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் 19 தவணைகள் விவசாயிகளிக்கு அளிக்கப்பட்டு விட்டன. பிஎம் கிசான் 20வது தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பிஎம் கிசான் 20வது தவணை எப்போது வரும்? எந்தவித சிக்கலும் இல்லாமல்20வது தவணையை பெற விவசாயிகள் உடனடியாக செய்துமுடிக்க வேண்டிய பணிகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

பிஎம் கிசான் 20வது தவணை எப்போது வரக்கூடும்? இந்த கேள்வி அனைத்து விவசாயிகளுக்கும் உள்ளது. பிஎம் கிசான் யோஜனா விதிகளின்படி, முதல் தவணை ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதத்திற்குள்ளும், மூன்றாவது தவணை டிசம்பர் முதல் மார்ச் மாதங்களுக்கு இடையிலும் வெளியிடப்படும். அதன்படி, 20வது தவணை ஜூன் மற்றும் ஜூலை 2025 க்கு இடையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 மாத சுழற்சியின் அடிப்படையில் நாம் அதைப் பார்த்தால், 20வது தவணைக்கான நேரம் ஜூன் 2025 இல் நிறைவடையும்.

எனவே, ஜூன் 2025 இறுதிக்குள் 20வது தவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அரசாங்கத்தின் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், விவசாயிகள் தொடர்ந்து இந்த நல்ல செய்திக்காக காத்திருக்கிறார்கள். 

விவசாயிகள் எந்த வித தடங்கலும் இல்லாமல் பிஎம் கிசானின் 20வது தவணையைப் பெற விரும்பினால், இந்த பணிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும்.

PM Kisan Yojana திட்டத்தின் 20வது தவணையை எந்த இடையூறும் இல்லாமல் பெற விரும்பினால், இந்த மூன்று மிக முக்கியமான பணிகளை நீங்கள் விரைவில் முடிக்க வேண்டும்:

e-KYC-ஐ முடிக்கவும்

- முதலில், PM Kisan pmkisan.gov.in-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.

- “Farmers Corner” பகுதிக்குச் சென்று “e-KYC” விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

- உங்கள் ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.

- சரிபார்த்த பிறகு, மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

- OTP-ஐ உள்ளிடவும், உங்கள் e-KYC-ஐ உள்ளிடவும்.

மொபைல் ஆதாருடன் இணைக்கப்படவில்லை அல்லது கைரேகை வேலை செய்யவில்லையா? Play Store-இல் இருந்து PM Kisan Samaan Nidhi செயலியைப் பதிவிறக்கி, முக அங்கீகாரம் மூலமும் e-KYC-யை செய்யலாம். பயோமெட்ரிக் ஸ்கேனிங்கில் சிக்கல்களை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கானது இந்த வசதி.

Land Seeding: நில சரிபார்ப்பு

- உங்கள் அருகிலுள்ள வேளாண் துறை அலுவலகத்திற்குச் செல்லவும்.

- தேவையான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, அறிவுறுத்தல்களின்படி தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும். 

- இதில் உங்கள் PM கிசான் பதிவு எண், பண்ணை தொடர்பான ஆவணங்கள் போன்றவை அடங்கும்.

- விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை மதிப்பாய்வு செய்த பிறகு நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், நில சரிபார்ப்பு சான்று உங்களுக்குக் கிடைக்கும். இது நீங்கள் உண்மையிலேயே ஒரு விவசாயி என்பதையும் தகுதியான நிலம் உள்ளதையும் உறுதி செய்கிறது.

NPCI (NPCI on Bank Account) linking

- விவசாயி தனது வங்கிக் கணக்கில் NPCI (இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்) மேப்பிங் செய்யவேண்டியது கட்டாயமாகும். இது அரசாங்கத் திட்டத்திலிருந்து பணம் உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வருவதை உறுதி செய்கிறது.

- NPCI ஐ இணைக்க, உங்கள் வங்கி பாஸ்புக் மற்றும் ஆதார் அட்டையுடன் உங்கள் அருகிலுள்ள வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ளலாம். 

- இந்த செயல்முறையை முடிக்க வங்கி ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

மேலும் படிக்க | ரூ.100, ரூ. 200 நோட்டுகள் குறித்து ஆர்பிஐ போட்ட முக்கிய உத்தரவு - ஏடிஎம்களில் கிடைக்குமா?

மேலும் படிக்க | ஓய்வூதிய முறையில் மிகப்பெரிய மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் சான்ஸ், ஜூன் 30 கடைசி தேதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News