)
PM Kisan Samman Nidhi Yojana: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நல்ல செய்தி வருகிறது. நாடு முழுவதும் 9.88 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் ஜூலை மாதத்தில் திட்டத்தின் 20வது தவணையைப் பெற வாய்ப்புள்ளது. பிப்ரவரி 2019 முதல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 19 தவணைகளில் சுமார் ரூ.3.68 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போது விவசாயிகள் 20வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 18 அன்று பீகார் மாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக செல்லவுள்ளார். அப்போது அவர் 20வது தவணையை வெளியிடுவார் என கூறப்படுகிறது. எனினும், அரசாங்கத்திடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. கடந்த முறை போலவே, இந்த முறையும் ஏப்ரல்-ஜூலை தவணையில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் திட்டத்தின் அடுத்த தவணை ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா என்றால் என்ன?
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் கீழ், மத்திய அரசு தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ.6000 நிதி உதவி வழங்குகிறது. இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மூன்று சம தவணைகளில், அதாவது தலா ரூ.2000 நேரடியாக அனுப்பப்படுகிறது. வழக்கமாக, ஒவ்வொரு நிதியாண்டிலும், முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 -க்குள்ளும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 -க்குள்ளும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 -க்குள்ளும், அதாவது 4 மாத இடைவெளியில் விவசாயிகளின் கணக்கிற்கு அரசாங்கத்தால் மாற்றப்படும்.
இந்தத் திட்டத்தின் இதற்கு முந்தைய தவணை, அதாவது 19வது தவணை, பீகாரில் உள்ள பாகல்பூரிலிருந்து 9.8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அனுப்பினார். 20வது தவணையின் தொகையும் பீகாரில் உள்ள மோதிஹரியிலிருந்து அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, பிரதமர் மோடி ஜூலை 2 முதல் 9 வரை ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் 20வது தவணை அவர் நாடு திரும்பிய பின்னரே விடுவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
PM Kisan: இந்த திட்டத்தின் பலன்களை பெற யாருக்கு தகுதி உண்டு? யாருக்கு இல்லை?
இந்தத் திட்டத்தின் பலன், சாகுபடி செய்யக்கூடிய நிலம் வைத்திருக்கும் நில உரிமையாளர் விவசாயிகளுக்குக் கிடைக்கும். இருப்பினும், மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற நிபுணர்கள் மற்றும் ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மாதாந்திர ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள்.
எந்த விவசாயிகளுக்கு பிஎம் கிசான் தவணை கிடைக்காது?
e-KYC செய்து முடிக்காத விவசாயிகளின் 20வது தவணை சிக்கிக்கொள்ளலாம். இதுவரை இந்தச் செயல்முறையை முடிக்காத விவசாயிகள், அருகிலுள்ள சிஎஸ்இ மையத்திற்கு சென்று அல்லது அவர்களின் மொபைலிலிருந்தே e KYC செய்ய வேண்டும்.
மொபைலில் e-KYC செய்வது எப்படி?
= முதலில், பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in -க்குச் செல்லவும்.
- வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள e-KYC விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- இப்போது ஆதார் எண் மற்றும் பிற தேவையான தகவல்களை நிரப்பவும்.
- பின்னர் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
- OTP வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டவுடன் உங்கள் e-KYC முடிக்கப்படும்.
தவணை தொகை கணக்கில் வரவில்லை என்றால் என்ன செய்வது?
- பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in -க்குச் சென்று “Beneficiary Status” -ஐ செக் செய்யவும்.
- 155261 அல்லது 011-23381092 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கவும்.
- அரசாங்கத்தின் 'கிசான் உதவி செயலியை' பதிவிறக்கம் செய்து புகார்கள், தற்போதைய நிலை மற்றும் எச்சரிக்கைகள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ