)
PM Kisan Samman Nidhi Yojana: விவசாயிகளின் நீண்ட நாள் காத்திருப்பு இன்று முடிவுக்கு வருகின்றது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் பயனாளி விவசாயிகளுக்கு இன்று 20வது தவணை கிடைக்கும். இன்று வரவுள்ள 20வது தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த தவணைக்கு முன், 19 தவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
பிஎம் கிசான் 20வது தவணை இன்று அதாவது ஆகஸ்ட் 2, 2025, விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இன்று, கோடிக்கணக்கான விவசாயிகள் 20வது தவணைக்கான பரிசைப் பெறுவார்கள். பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரத்திலிருந்து இன்று 11 மணியளவில் 20வது தவணையை வெலியிடுவார் என கூறப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் திட்டம்: இந்த தவணை எந்த விவசாயிகளுக்கு கிடைக்கும்?
பிரதமர் கிசான் யோஜனாவின் கீழ், e-KYC, நில சரிபார்ப்பு மற்றும் ஆதார் இணைப்பு போன்ற தேவையான பணிகளைச் செய்த விவசாயிகளின் கணக்கிற்கு தவணைத் தொகை அனுப்பப்படும். அத்தியாவசிய பணிகளை செய்யாத மற்றும் இந்த திட்டத்திற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத விவசாயிகளுக்கு தவணைத்தொகை கிடைக்காது. இது தொடர்பாக அரசு அளித்த தகவலின்படி, 20வது தவணை 9.70 கோடிக்கும் மேற்பட்ட தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா விவசாயிகளுக்கான மத்திய அரசின் ஒரு சிறந்த திட்டமாகும். இதன் கீழ் 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.6,000 பெறுகிறார்கள். இந்தத் தொகை 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் 3 சம தவணைகளாக வழங்கப்படுகிறது. 19வது தவணை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. பிஎம் கிசான் 20வது தவணைக்காக ஜூன் மாதம் முதல் விவசாயிகள் காத்திருக்கிறார்கள். இன்று இந்த பரிசு அவர்களுக்கு கிடைக்கவுள்ளது.
பிஎம் கிசான்: உங்கள் பெயர் பயனாளி பட்டியலில் உள்ளதா இல்லையா?
பிஎம் கிசான் திட்ட பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இல்லையா என்பதை பார்ப்பதற்கான செயல்முறையை இங்கே காணலாம்:
- முதலில், திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in அல்லது அதிகாரப்பூர்வ செயலிக்குச் செல்லலவும்.
- இங்கே 'Know Your Status' என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர் உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதன் பிறகு பயனாளி பட்டியல் தோன்றும்.
- அங்கு உங்கள் பெயர் உள்ளதா என்பதை செக் செய்யலாம்.
பிஎம் கிசான் தவணையை பெற eKYC செய்து அவசியம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
e KYC செய்வது எப்படி?
- முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in க்குச் செல்லவும்.
- “Farmer Corner" பகுதிக்குச் சென்று “e-KYC” விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- சரிபார்ப்புக்குப் பிறகு, மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
- OTP ஐ உள்ளிடவும், eKYC நிறைவடையும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ