)
PM Kisan Samman Nidhi Yojana: நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மத்திய அரசிடமிருந்து ஒரு சிறந்த செய்தி கிடைத்துள்ளது. பிரதமர் கிசான் யோஜனாவின் 20வது தவணை விவசாயிகளின் கணக்கில் நாளை அதாவது ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இதற்காக நீண நாட்களாக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா
- பிஎம் கிசான் யோஜனாவின் மூலம், அரசாங்கம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி உதவியை வழங்குகிறது.
- இந்த ரூ.6,000, விவசாயிகளின் கணக்கிற்கு ரூ.2,000 மூன்று தவணைகளாக அனுப்பப்படுகிறது.
- அதாவது, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் நேரடிப் பயனைப் பெறுகிறார்கள்.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
- பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணை பற்றிய தகவலை வேளாண் அமைச்சகம் வழங்கியுள்ளது.
- 20வது தவணை ஆகஸ்ட் 2, 2025 அன்று உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து வெளியிடப்படும் என்று வேளாண் அமைச்சகம் கூறியுள்ளது.
- இந்தத் திட்டத்தின்படி, அரசாங்கம் விவசாயிகளின் கணக்கிற்கு ரூ.2,000 தவணையை நேரடியாக அனுப்பும்.
- ஆகஸ்ட் 2 ஆம் தேதி சுமார் 9.3 கோடி விவசாயிகளுக்கு அரசாங்கம் தவணைப் பலனை வழங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் 2019 இல் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இதுவரை 19 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப்போது 20வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
பிஎம் கிசான்: இந்த விவசாயிகள் பலனைப் பெறுவார்கள்
- பிரதமர் கிசான் யோஜனாவின் 20வது தவணையின் பலன், e-KYC மற்றும் நிலப் பதிவுகளின் சரிபார்ப்பை நிறைவு செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
- விவசாயிகள் நிலையை அறிய விரும்பினால், அவர்கள் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அதை தெரிந்துகொள்ளலாம்.
- ஆகஸ்ட் 2 ஆம் தேதி வங்கிக் கணக்குகளுக்கு பிஎம் கிசான் 20வது தவணை அனுப்பப்படுவதோடு மொபைல் போனில் SMS செய்திகளும் வரும்.
பிஎம் கிசான் தவணை வந்துவிட்டதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளும் செயல்முறை:
- இதற்காக, பயனாளிகள் முதலில் pmkisan.gov.in -இன் அதிகாரப்பூர்வ வலைத்திற்கு செல்ல வேண்டும்.
- இதற்குப் பிறகு, முகப்புப் பக்கத்தை அடைந்து ‘Beneficiary Status’ அல்லது 'விவசாயி நிலை' என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு, உங்கள் ஆதார் எண், மொபைல் எண் அல்லது பதிவு எண்ணை உள்ளிடவும்.
- அதன் பின், Get Data / Get Status பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு, தவணையின் நிலை மற்றும் கட்டணத் தகவல் திரையில் தோன்றும்.
பிஎம் கிசான் 20வது தவணைப் பணம் வரவில்லை என்றால் என்ன செய்வது?
- பிஎம் கிசான் 20வது தவணைத் தொகை வரவில்லை என்றால், மாவட்டத்தின் வேளாண் அதிகாரி அல்லது CSC சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
- இதனுடன், நிலத்தின் ஆவணங்கள், வங்கி விவரங்கள் மற்றும் ஆதார் அட்டை தகவல்கள் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
- e-KYC செய்யப்படவில்லை என்றால், அதை விரைவாகச் செய்து முடிப்பது நல்லது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ