PM Kisan 20வது தவணை சிக்காமல் கிடைக்க, இந்த 5 விஷயங்கள செய்வது அவசியம்

PM Kisan Latest News: பிஎம் கிசான் 20வது தவணையை பெற விவசாயிகள் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 9, 2025, 05:31 PM IST
  • வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைப்பது அவசியம்.
  • தவறான தகவல் உள்ளவர்களுக்கு பணம் கிடைக்காது.
  • நீங்கள் தகுதியற்றவராக இருந்தால் தவணைத் தொகை கிடைக்காது.
PM Kisan 20வது தவணை சிக்காமல் கிடைக்க, இந்த 5 விஷயங்கள செய்வது அவசியம்

PM Kisan Samman Nidhi Yojana: மத்திய அரசு, விவசாயிகளுக்காக நடத்தும் பல்வேறு நலத்திட்டங்களில் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா மிக பிரபலமான ஒரு திட்டமாக உள்ளது. இதில் ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை, DBT பரிமாற்றம் மூலம், 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 தொகை கொண்ட 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

PM Kisan திட்டத்தின் பலன் யாருக்கு கிடைக்கும்?

இந்தத் திட்டத்தின் பலனை பெற விவசாயிகள் சில பணிகளை கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும். இந்த பணிகள் நிறைவடையாவிட்டால், கண்டிப்பாக பிஎம் கிசான் 20வது தவணை கிடைகாது. பிஎம் கிசான் 20வது தவணையை பெற விவசாயிகள் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1. eKYC செய்து முடிக்க வேண்டும்

இதுவரை e-KYC-ஐ செய்துமுடிக்காத விவசாயிகளுக்கு 20வது தவணைக்கான பணம் கிடைக்காது என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. PM Kisan போர்ட்டலில் OTP அல்லது பயோமெட்ரிக் மூலம் e-KYC -ஐ செய்து முடிப்பது கட்டாயமாகும்.

2. Land Seeding: நில சரிபார்ப்பு

உங்கள் நிலம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்படவில்லை என்றால், PM Kisan-இன் பயனாளிகள் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்படலாம். ஒவ்வொரு மாநில அரசாங்கமும் நில ஆவணங்களைச் சரிபார்த்து வருகிறது. ஆகையால் இதை சேய்து முடிப்பது அவசியமாகும்.

3. Bank Account Linking with Aadhaar: வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைப்பது அவசியம்

உங்கள் வங்கிக் கணக்கு உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்றால், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 20வது தவணை சிக்கிக்கொள்ளலாம். முன்னரும் இந்தக் காரணத்தினால், பல விவசாயிகளின் கணக்குகள் செயலிழந்துவிட்டன. ஆகையால், விரைவாக வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது நல்லது.

4. தவறான தகவல் உள்ளவர்களுக்கு பணம் கிடைக்காது

பிஎம் கிசான் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் போது தவறான ஆவணங்கள், போலி ஆதார் அல்லது தவறான நிலத் தகவல்களை வழங்கிய விவசாயிகளின் நன்மைகள் நேரடியாக நிறுத்தப்படும். இதுபோன்ற வழக்குகளில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

5 நீங்கள் தகுதியற்றவராக இருந்தால் தவணைத் தொகை கிடைக்காது

பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் கீழ், அதற்கு தகுதியான விவசாயிகள் மட்டுமே தவணைகளைப் பெறுகிறார்கள். தகுதியற்றவர்கள் அல்லது இந்தத் திட்டத்தில் தவறான வழியில் சேர்ந்த விவசாயிகளின் விண்ணப்பம் விசாரணையின் போது ரத்து செய்யப்படுகிறது. எனவே, நீங்கள் தவறான வழியில் திட்டத்தில் சேர்ந்திருந்தால், முன்கூட்டியே உங்கள் பெயரைத் திரும்பப் பெறுங்கள். இல்லையெனில் பின்னர் சிக்கல்கள் ஏற்படலாம்.

PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

பிஎம் கிசான் 20வது தவணை ஜூன் மற்றும் ஜூலை 2025 க்கு இடையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 2025 இறுதிக்குள் 20வது தவணை வெளியிடப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | EPFO EDLI Scheme: முக்கிய விதிகளில் மாற்றம், PF உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் இலவச காப்பீடு

மேலும் படிக்க | தங்கம் விலை அதிரடியாக சரியும்... அதுவும் 2 மாதங்களில்... எவ்வளவு குறையும் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News