PM Kisan 20வது தவணை எப்போது வருகிறது? பயனாளிகளுக்கு முக்கிய அப்டேட்

PM Kisan Latest News: தவணைப் பணத்தை எந்த வித சிக்கலும் இல்லாமல் பெற, சில முக்கியமான பணிகள் செய்யப்பட வேண்டும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 27, 2025, 01:54 PM IST
  • பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
  • விவசாயிகள் தவணை பணத்தை எவ்வாறு செக் செய்யலாம்?
  • இதுவரை எத்தனை தவணைகள் கிடைத்துள்ளன?
PM Kisan 20வது தவணை எப்போது வருகிறது? பயனாளிகளுக்கு முக்கிய அப்டேட்

PM Kisan Samman Nidhi Yojana: நாட்டில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. அவற்றில் விவசாயிகளுக்காக உள்ள பிரத்யேக நலத்திட்டங்களில் பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டம் ஒரு முக்கியமான மற்றும் பிரபலமான திட்டமாகும்.

Add Zee News as a Preferred Source

PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் கீழ் அடுத்த தவணை, அதாவது 20வது தவணைக்கான காத்திருப்பு அதிகரித்து வருகிறது. இந்தத் திட்டத்தின் அடுத்த தவணையை மத்திய அரசு விரைவில் வெளியிடலாம் என்று ஊகிக்கப்படுகிறது. ஜூன் 20ஆம் தேதி இந்த தவணை கிடைக்கும் என வெகுவாக நம்பப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. தற்போது, ஜூலை மாதம் முதல் வாரத்தில் விவசாயிகள் ஒரு பெரிய பரிசைப் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இந்த முறை சுமார் 10 கோடி விவசாயிகள் தவணைப் பணத்தைப் பெறக்கூடும்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா

ஒரு தவணைக்கு ரூ.2,000 வீதம் 19 தவணைகளை அரசாங்கம் இதுவரை வெளியிட்டுள்ளது. 20வது தவணைத் தொகை வெளியிடுவது குறித்து அரசாங்கத்திடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வரவில்லை. இது ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. தவணைப் பணத்தை எந்த வித சிக்கலும் இல்லாமல் பெற, சில முக்கியமான பணிகள் செய்யப்பட வேண்டும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

e KYC: விவசாயிகள் விரைவாக e-KYC செய்து முடிக்க வேண்டும். இதற்கான வழிமுறை இதோ.

- இதற்கு, விவசாயிகள் முதலில் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in -க்குச் செல்ல வேண்டும்.

- பின்னர் முகப்புப் பக்கத்தில் தோன்றும் e-KYC விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

- இதற்குப் பிறகு, ஆதார் மற்றும் தேவையான அனைத்து விவரங்களையும் இங்கே நிரப்ப வேண்டும்.

- பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட வேண்டும்.

- உங்கள் OTP சரிபார்ப்பு முடிந்ததும், உங்கள் பிஎம் கிசான் கணக்கின் e-KYC-ஐ முடிக்கும் பணியை செய்து முடிக்க முடியும்.

விவசாயிகள் தவணை பணத்தை எவ்வாறு செக் செய்யலாம்?

விவசாயிகள் தங்கள் கணக்கிற்கு தவணை பணம் வந்துள்ளதா இல்லையா என்பதை எளிதாக தெரிந்துகொள்ளலாம். இதற்கு, 
- விவசாயிகள் முதலில் 155261, 1800115526 அல்லது 011-23381092 என்ற உதவி எண்ணை அழைக்க வேண்டும். 
- pmkisan-ict@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அனுப்பலாம். 
- இதனுடன், 'பயனாளி நிலை' மூலம் தவணை சிக்கியதற்கான காரணத்தை போர்ட்டலுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.

பிஎம் கிசான்: இதுவரை எத்தனை தவணைகள் கிடைத்துள்ளன?

பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் கீழ், அரசாங்கம் இதுவரை தலா ரூ.2,000 வீதம் 19 தவணைகளை வெளியிட்டுள்ளது. அடுத்த தவணைக்காக அனைத்து விவசாயிகளும் இப்போது ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளை வெளியிடுகிறது. அதன்படி, அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு ரூ.6,000 அனுப்புகிறது. ஒவ்வொரு தவணைக்கும் இடையில் பொதுவாக 4 மாத இடைவெளி இருக்கின்றது.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: லெவல் 3 முதல் லெவல் 10 வரை... அகவிலைப்படி, சம்பளம் எவ்வளவு உயரும்?

மேலும் படிக்க | EPFO Auto Settlement வரம்பு அதிகமானது: 3 நாட்களில் கையில் பணம் வரும், முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News