)
PM Kisan Samman Nidhi Yojana: மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் 20வது தவணை இந்த மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான இந்தத் திட்டத்தின் இரண்டாவது தவணை இந்த மாதம் தகுதியுள்ள 9.8 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா
இந்திய அரசு மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தைத் தொடங்கி நடத்து வருகின்றன. இதன் கீழ் இந்தியாவில் உள்ள தகுதியுள்ள அனைத்து விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 மானியம் வழங்கப்படுகிறது. இது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 மூன்று சமமான தவணைகளில் வழங்கப்படும்.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
பிஎம் கிசான் 20வது தவணை ஜூன் மாத இறுதியில் கிடைக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது இது ஜூன் 20 ஆம் தேதி வரக்கூடும் என தற்போது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.
இந்திய அரசு சமீபத்திய அறிவிப்பில், பதிவு செயல்முறையை முடித்த விவசாயிகள் மட்டுமே PM-Kisan சம்மான் நிதி யோஜனாவின் பலன்களுக்குத் தகுதியுடையவர்கள் என்று அறிவித்து இதை கட்டாயப்படுத்தியுள்ளது.
e-KYC-ஐ செய்து முடிப்பது எப்படி?
20வது தவணையைப் பெற, விவசாயிகள் கிசான் பதிவேடு மொபைல் செயலி, அதிகாரப்பூர்வ பிஎம் கிசான் வலைத்தளம் அல்லது ஏதாவது ஒரு பொது சேவை மையத்திற்கு சென்று பதிவு செயல்முறையை செய்து முடிக்கலாம்.
இது தவிர, விவசாயிகள் தங்கள் KYC-ஐ செய்து முடிக்க வேண்டும். மேலும், ஆதார் அட்டை, நில சரிபார்ப்பு மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட செயலில் உள்ள வங்கிக் கணக்கு போன்ற தொடர்புடைய ஆவணங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
- முதலில் அதிகாரப்பூர்வ PM Kisan யோஜனா வலைத்தளத்திற்கு செல்லவும் (https://pmkisan.gov.in/).
- கிசான் கார்னர் பகுதிக்குச் சென்று e-KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் ஆதார் எண் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் மொபைல் சாதனத்திற்கு OTP (ஒரு முறை கடவுச்சொல்) அனுப்பப்படும்.
- e-KYC செயல்முறையை முடிக்க OTP ஐப் பயன்படுத்தவும்.
PM Kisan திட்டத்தின் பலன் யாருக்கு கிடைக்கும்?
PM Kisan திட்டம் இந்தியா முழுவதும் உள்ள ஏழை விவசாயிகளுக்கு ஒரு உயிர்நாடி திட்டமாகும். பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்குகிறது. மத்திய அரசு, விவசாயிகளுக்காக நடத்தும் பல்வேறு நலத்திட்டங்களில் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா மிக பிரபலமான ஒரு திட்டமாக உள்ளது.
2019 இல் தொடங்கப்பட்ட PM Kisan திட்டம், ஏழை மற்றும் நலிந்த நிலையில் உள்ள விவசாயிகளுக்கு மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்குகிறது. பருவமழை விதைப்பு நெருங்கி வருவதால், காரீப் பயிர் பருவத்திற்குத் தயாராகும் லட்சக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு ஜூன் மாத தவணை மிக முக்கியமானது. மேலும், உள்ளீட்டு செலவுகள் அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் இது சரியான நேரத்தில் நிதி உதவியையும் வழங்குகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ