PM Kisan 20வது தவணை: இதை செய்வது மிக அவசியம், அரசின் முக்கிய அப்டேட்

PM Kisan Latest News: ஜூன் 20ஆம் தேதி இந்த தவணை கிடைக்கும் என நம்பப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. தற்போது, ஜூலை மாதம் முதல் வாரத்திலேயே விவசாயிகள் ஒரு பெரிய பரிசைப் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 1, 2025, 12:47 PM IST
  • PM Kisan Yojana என்றால் என்ன?
  • பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
  • e-KYC மற்றும் ஆவணங்களை எவ்வாறு புதுப்பிப்பது?
PM Kisan 20வது தவணை: இதை செய்வது மிக அவசியம், அரசின் முக்கிய அப்டேட்

PM Kisan Samman Nidhi Yojana: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 20வது தவணைக்காக விவசாயிகள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். ஜூன் மாதமே இது வெளியிடப்படும் என நம்பப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை. எனினும், இந்த மாத தொடக்கத்திலேயே இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Add Zee News as a Preferred Source

PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் கீழ் அடுத்த தவணை, அதாவது 20வது தவணைக்கான காத்திருப்பு அதிகரித்து வருகிறது. இந்தத் திட்டத்தின் அடுத்த தவணையை மத்திய அரசு விரைவில் வெளியிடலாம் என்று ஊகிக்கப்படுகிறது. ஜூன் 20ஆம் தேதி இந்த தவணை கிடைக்கும் என நம்பப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. தற்போது, ஜூலை மாதம் முதல் வாரத்திலேயே விவசாயிகள் ஒரு பெரிய பரிசைப் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. 

பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா

பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணைக்கான காத்திருப்பு நீண்ட நாட்களாக தொடர்கிறது. 19வது தவணை அளிக்கப்பட்டு இப்போது 4 மாதங்களாகிவிட்டன. ஆனால் அடுத்த தவணையான ரூ.2,000 இன்னும் கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளுக்கு வந்து சேரவில்லை. இதற்கிடையில், விண்ணப்பத்தில் தவறு உள்ள அல்லது e-KYC முழுமையடையாத விவசாயிகளின் தவணைத் தொகை நிறுத்தப்படும் என்று அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால் தவறை சரிசெய்ய இன்னும் கடைசி வாய்ப்பு உள்ளது. நீங்கள் தேவையான ஆவணங்களை புதுப்பிக்கவில்லை என்றால், உங்கள் அடுத்த தவணையும் சிக்கிக்கொள்ளலாம்.

PM Kisan Yojana என்றால் என்ன?

PM Kisan Yojana திட்டத்தின் கீழ், மத்திய அரசு நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 நிதி உதவியை வழங்குகிறது. இது மூன்று சம தவணைகளில் வழங்கப்படுகின்றது. மத்திய அரசு வழக்கமாக 4 மாத இடைவெளியில் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு ரூ.2,000 தொகையை அனுப்புகிறது. பிப்ரவரி 2019 இல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் கீழ், இதுவரை 19 தவணைகளில் ரூ.3.68 லட்சம் கோடிக்கு மேல் பயனாளி விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளின் போக்கின்படி, ஜூன் 2025 இல் அரசாங்கம் 20வது தவணையை வெளியிடும் என்று ஊகிக்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் இன்னும் ரூ.2000 க்காக காத்திருக்கிறார்கள்.

இந்த தாமதத்தை பயன்படுத்தி விவசாயிகள் தாங்கள் செய்து முடிக்க வேண்டிய முக்கிய பணிகளை செய்து முடிக்கலாம். இதன் மூலம் 20வது தவணை எந்த விதமான தடங்கலும் இல்லாமல் கிடைப்பதை உறுதிபடுத்திக்கொள்ளலாம்.

20வது தவணை எதனால் பாதிக்கப்படலாம்?

- e-KYC முடிக்கப்படாத நிலை

- நில பதிவு சரிபார்ப்பில் பிழை

- விவசாயி பதிவேடு முடிக்கப்படவில்லை

- வங்கி விவரங்களில் பிழை

- ஆதார் மற்றும் பெயருக்கு இடையில் பொருந்தமின்மை

- நில பதிவு பதிவேற்றப்படாத நிலை

திருத்தத்திற்கான கடைசி வாய்ப்பு

இதுவரை e-KYC அல்லது ஆவண திருத்தம் செய்யாத விவசாயிகள், போர்ட்டலைப் பார்வையிட்டு அதை விரைவில் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் விவசாய அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தப் பணியை PM-Kisan போர்டல், CSC மையம் அல்லது மொபைல் செயலி மூலம் எளிதாகச் செய்யலாம்.

e-KYC மற்றும் ஆவணங்களை எவ்வாறு புதுப்பிப்பது?

- முதலில் pmkisan.gov.in என்ற PM Kisan இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்

- 'e-KYC' பிரிவுக்குச் சென்று ஆதார் எண்ணை உள்ளிடவும்

- OTP மூலம் செயல்முறையை முடிக்கவும்

- 'Farmer Corner' -க்குச் சென்று உங்கள் நிலம் மற்றும் வங்கி விவரங்களைச் சரிபார்க்கவும்

- ஏதேனும் தவறு இருந்தால், அதைச் சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்கவும்

பிஎம் கிசான்: பயனாளிகள் இந்த விஷயங்களை செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்?

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் திருத்தச் செயல்முறை முடிக்கப்படாவிட்டால், விவசாயிகளின் 20வது தவணை நிறுத்தப்படலாம். மேலும் வரவிருக்கும் தவணைகளையும் நீங்கள் இழக்க நேரிடலாம். 20வது தவணையின் பலனை சரியான நேரத்தில் பெற விவசாயிகள் தங்கள் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களின் நிலையை உடனடியாகச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | SSY முதல் PPF வரை... அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அறிவிப்பு

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: பம்பர் ஊதிய உயர்வை தீர்மானிக்கவுள்ள அந்த 2 முக்கிய அம்சங்கள் இவைதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News