)
PM Kisan Samman Nidhi Yojana: பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 20வது தவணையை வெளியிட்டார். பிரதமர் மோடி 9.26 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு பிஎம் கிசான் சம்மான் நிதியின் தவணைத் தொகையை அனுப்பினார். இனி விவசாயிகளின் கணக்குகளில் 2 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா
- பிஎம் கிசான் திட்டத்தின் தகுதியான விவசாயிகளாக இருக்கும் அனைவருக்கும் கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்.
- பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து இதற்கான செயல்முறை தொடங்கிவிட்டது.
- சில விவசாயிகளின் கணக்குகளில் தவணத் தொகையும் வந்துவிட்டது.
பிஎம் கிசான் 20வது தவணை வந்துவிட்டதா? எப்படி தெரிந்துகொள்வது?
தகுதியான விவசாயிகள் தங்கள் கணக்கில் 20வது தவணைத் தொகை வந்துவிட்டதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? இதற்கான செயல்முறையை அறிந்து கொள்ளலாம்.
- பிரதமர் கிசான் சம்மான் நிதியின் தவணைத் தொகை உங்கள் கணக்கிற்கு வந்தால், அதன் செய்தி உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலும் வரும்.
- இருப்பினும், பல முறை கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டாலும் செய்தி வருவதில்லை.
- அந்த நிலையில், 20வது தவணைக்கான பணம் கணக்கில் வந்துவிட்டதா இல்லையா என்பதை எப்படி அறிவது என்ற குழப்பத்தில் பலர் உள்ளனர்.
- பிஎம் கிசான் போர்ட்டல் மூலம் விவசாயிகள் தங்கள் கணக்கில் வந்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
- 20வது தவணை வந்ததா இல்லையா என்பதைச் சரிபார்க்க, முதலில் நீங்கள் பிஎம் கிசான் யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு https://pmkisan.gov.in/ -க்கு செல்ல வேண்டும்.
- இதற்குப் பிறகு, நீங்கள் Farmer Corner -க்குச் சென்று Beneficiary Status -க்குச் செல்ல வேண்டும்.
- Beneficiary Status என்பதைக் கிளிக் செய்தவுடன், உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- இந்தப் பக்கத்தில், நீங்கள் ஆதார் எண், மொபைல் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட வேண்டும்.
- இந்த தகவலை நிரப்பியவுடன், 20வது தவணையின் நிலை உங்கள் முன் தெரியும்.
- e-KYC, நில சரிபார்ப்பு மற்றும் ஆதார்-வங்கி சீடிங் என்ற இடங்களில் ‘யெஸ்’ எனக் காட்டப்பட்டால், பணம் உங்கள் கணக்கிற்கு வரும் அல்லது ஏற்கனவே வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
பிஎம் கிசான் தொகை எப்போது கணக்கில் வரும்?
- அனைத்து விவசாயிகளின் கணக்கிற்கும் ஒரே நேரத்தில் பணம் வராது.
- சிலருக்கு தவணைத் தொகை உடனடியாக வரலாம்.
- சிலருக்கு சிறிது நேரம் கழித்து வரலாம்.
- சிலருக்கு அடுத்த நாளும் வரலாம்.
- ஆகையால், நீங்கள் தகுதியுள்ள விவசாயியாக இருந்து, பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் பதட்டப்படாமல் காத்திருக்கவும்.
- பணம் வந்துவிட்டதா இல்லையா என்பதை நீங்கள் முழுமையாக உறுதிப்படுத்த விரும்பினால், உங்கள் வங்கிக்குச் சென்று பேங் ஸ்டேட்மெண்டை செக் செய்யலாம்.
Direct Bank Transfer: DBT மூலம் வந்த பிஎம் கிசான் தவணைத் தொகை
- பிரதமர் நரேந்திர மோடி பிஎம் கிசான் 20வது தவணையை DBT மூலம் விவசாயிகளின் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
- அதாவது சேவாபுரியில் உள்ள பனௌலி கிராமத்திலிருந்து நேரடி வங்கி பரிமாற்றம் மூலம் பணம் மாற்றப்பட்டுள்ளது.
- 9.7 கோடி விவசாயிகள் 20வது தவணையின் பலனைப் பெற்றுள்ளனர்.
- பிரதமர் மோடி ₹20,500 கோடிக்கும் அதிகமான தொகையை விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.
பிம் கிசான் 20வது தவணை அப்டேட்ஸ் சுருக்கமாக....
- பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 20வது தவணையை வெளியிட்டார்.
- பிரதமர் நரேந்திர மோடி பிஎம் கிசான் 20வது தவணையை DBT மூலம் விவசாயிகளின் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
- பிரதமர் கிசான் சம்மான் நிதியின் தவணைத் தொகை உங்கள் கணக்கிற்கு வந்தால், அதன் செய்தி உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலும் வரும்.
- பிஎம் கிசான் போர்ட்டல் மூலம் விவசாயிகள் தங்கள் கணக்கில் வந்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ