)
PM Kisan Samman Nidhi Yojana: இந்தியாவின் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் விவசாயத்தையும் வாழ்க்கையையும் மேம்படுத்தவும் உதவுகிறது.
விதைகள், உரங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.6,000 நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மூன்று தவணைகளாக அனுப்பப்படுகிறது. இப்போது, நாடு முழுவதும் 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் நிதி யோஜனா 20வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணை ஜூன் 20 ஆம் தேதி, அதாவது நாளை வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், சில விவசாயிகளுக்கு இந்த தவணை கிடைக்காமல் போகலாம்.
பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணை சில விவாசாயிகளுக்கு கிடைக்காது என கூறப்படுவதற்கான காரணம் என்ன? இந்தத் திட்டத்தின் முழுமையான விவரங்கள் என்ன? தவணையை பெறுவதற்கான நிபந்தனைகள் என்ன? இவை அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.
பிரதம மந்திரி கிசான் நிதி யோஜனா
2019 இல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா, சிறு மற்றும் குறு விவசாயிகளை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 -க்கான தவணை, அதாவது ஆண்டுக்கு ரூ.6,000, நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன.
இதுவரை 19 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் 20வது தவணை ஜூன் 2025 -இல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ தேதியை அறிவிக்கவில்லை என்றாலும், இதற்கான செயல்முறை முழு வீச்சில் உள்ளது.
பிஎம் கிசான் 20வது தவணை: யாருக்குப் பலன் கிடைக்கும், யாருக்குப் பலன் கிடைக்காது?
நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் பிஎம் கிசான் 20வது தவணைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் இந்த முறை சில விவசாயிகள் ஏமாற்றமடையக்கூடும். அரசாங்கம் சில நிபந்தனைகளை கட்டாயமாக்கியுள்ளது. இவை நிறைவேற்றப்படாவிட்டால், தவணை சிக்கிக்கொள்ளக்கூடும். உங்கள் பணம் சிக்கிக்கொள்ளக் கூடிய காரணங்கள் என்ன என்பதை இங்கே காணலாம்.
eKYC: முதல் மற்றும் மிக முக்கியமான நிபந்தனை
eKYC இல்லாமல் எந்த விவசாயியும் PM Kisan பலன்களைப் பெற முடியாது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. நீங்கள் இன்னும் eKYC செய்யவில்லை என்றால், உடனடியாக இதை செய்து முடிக்கவும். eKYC -ஐ 2 வழிகளில் செய்யலாம். \
ஆன்லைன் OTP மூலம்: pmkisan.gov.in போர்டலுக்குச் சென்று உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் OTP உடன் eKYC ஐ செய்து முடிக்கவும்.
பயோமெட்ரிக் மூலம்: அருகிலுள்ள CSC மையத்தில் கைரேகை மூலம் eKYC ஐ செய்யலாம்.
Aadhaar Bank Account Linking: ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு இணைக்கப்பட வேண்டும்
பல நேரங்களில் விவசாயிகளின் பணம் அவர்களின் ஆதார் அட்டை வங்கிக் கணக்குடன் இணைக்கப்படாததால் சிக்கிக் கொள்கிறது. உங்கள் கணக்கு எண், IFSC குறியீடு அல்லது ஆதாரில் ஏதேனும் தவறு இருந்தால், பணம் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படலாம். அதை உடனடியாக சரிசெய்யவும்.
Land Verification: நில சரிபார்ப்பு
PM கிசான் நிதி யோஜனாவின் கீழ் நில சரிபார்ப்பு அவசியம். உங்கள் நிலப் பதிவுகள் புதுப்பிக்கப்படாவிட்டால் அல்லது சரிபார்க்கப்படாவிட்டால், 20வது தவணை உங்கள் கணக்கிற்கு வராது. ஆகையால் இவற்றை சரிபார்த்து புதுப்பிக்கவும்.
Farmer Registry and Farmer ID: விவசாயிகள் பதிவு
விவசாயிகள் பதிவு செய்து விவசாயி ஐடியைப் பெறுவது கட்டாயமாகும். நீங்கள் இன்னும் பதிவு செய்யவில்லை என்றால், pmkisan.gov.in -க்கு சென்று அதை செய்து முடிக்கவும். விவசாயி ஐடி இல்லாமல், தவணைப் பலனைப் பெற முடியாது.
தவறான தகவல் அல்லது தகுதியின்மை
பல நேரங்களில் விவசாயிகள் தவறான வங்கி விவரங்கள், ஆதார் எண் அல்லது நிலப் பதிவுகள் போன்ற தவறான தகவல்களை வழங்குவதால் தவணை பெற முடியாமல் தவிக்கின்றனர். இது தவிர, சிலர் திட்டத்தின் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்வதில்லை.
இந்த நபர்களுக்கு தவணை கிடைக்காது:
- அரசு ஊழியர்கள்
- வருமான வரி செலுத்துவோர்
- மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் போன்ற வல்லுநர்கள்
- ரூ.10,000 க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறும் நபர்கள்
- பெரிய விவசாயிகள் அல்லது நிறுவன நில உரிமையாளர்கள்
PM Kisan: உங்கள் 20 வது தவணையின் நிலையை எவ்வாறு செக் செய்வது?
உங்கள் பிஎம் கிசான் நிதி யோஜனா 20 வது தவணை எப்போது வரும் அல்லது நீங்கள் அதைப் பெற முடியுமா இல்லையா என்பதை அறிய விரும்பினால், pmkisan.gov.in இணையதளத்திற்க்குச் செல்லவும். அங்கு “பயனாளி நிலை” பிரிவில் உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு எண்ணை உள்ளிட்டு நிலையைச் சரிபார்க்கலாம். கடைசி தவணை பிப்ரவரி 2025 இல் வெளியிடப்பட்டது. இப்போது 20வது தவணை ஜூன் 2025 இறுதிக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PM Kisan தவணையை பெற தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதி
பிரதம மந்திரி கிசான் நிதி யோஜனாவின் பலன்களைப் பெற, நீங்கள் இந்த ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்:
- ஆதார் அட்டை
- வங்கி பாஸ்புக்
- நிலப் பதிவுகள்
- மொபைல் எண்
- விவசாயி பதிவு எண்
பிஎம் கிசான் திட்டத்திற்கு தகுதி பெற, நீங்கள் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். உங்கள் பெயரில் சாகுபடி நிலம் இருக்க வேண்டும். மேலும் உங்கள் ஆதார் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ