PM Kisan Latest News: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்? அதற்கு முன் விவசாயிகள் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் என்ன? முழு விவரத்தையும் இங்கே காணலாம்.

PM Kisan Samman Nidhi Yojana: பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் 20வது தவணை தாமதமாவது நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த வேளான் பருவத்தின் தவணையை அரசாங்கம் சரியான நேரத்தில் வெளியிடும் என்று பயனாளிகள் விவசாயிகள் நம்பினர். ஆனால் அது தாமதமாகி வருகிறது.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
விவசாயிகளுக்கு பிஎம் கிசான் 20வது தவணைக்கான ரூ.2000 தொகை எப்போது கிடைக்கும்? 20வது தவணை தவணை குறித்த புதுப்பிப்பு என்ன? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
இந்த வாரம், நாடு முழுவதும் உள்ள 9.8 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் கீழ் 20வது தவணையான ரூ.2000 -ஐ பெறக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 18 அன்று பீகாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அன்று அவர் மோதிஹரியில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவார். அந்த நிகழ்ச்சியில் பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணையை அவர் வெளியிடுவார் என கூறப்படுகின்றது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா: இவற்றில் கவனம் தேவை
பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் பயனாளி விவசாயிகள் 6 புதுப்பிப்புகளை பூர்த்தி செய்யுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சமீபத்தில், தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் அரசாங்கத் திட்டத்தின் பலனைப் பெறுவதை உறுதி செய்வதற்காக வேளாண் அமைச்சகம் ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் கணக்கில் எந்தத் தடையும் இல்லாமல் சரியான நேரத்தில் ரூ.2000 வர வேண்டும் என விரும்பினால், அவர்கள் e-KYC, நில சரிபார்ப்பு மற்றும் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைத்தல் போன்ற சில முக்கியமான பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.
PM Kisan: நெருங்கும் 20வது தவணையின் தேதி
மத்திய அரசின் சமீபத்திய அறிவுறுத்தலுக்குப் பிறகு, பிஎம் கிசான் யோஜனாவின் 20வது தவணைக்கான தேதி நெருங்கிவிட்டது என்று நம்பப்படுகிறது. வரவிருக்கும் தவணைகளுக்கு முக்கியமான பணிகள் முழுமையடையாத விவசாயிகள் இன்றே அவற்றை செய்து முடிப்பது நல்லது. அலட்சியம் காட்டினால், 20வது தவணையை பெறுவதில் பிரச்சனை ஏற்படக்கூடும்.
e-KYC: e-KYC ஐ செய்து முடிக்கவும்
e-KYC இல்லாமல், எந்த விவசாயியும் தவணையின் பலனைப் பெற முடியாது. இந்த செயல்முறையை பிஎம் கிசான் போர்டல் அல்லது CSC மையம் மூலம் செய்து முடிக்கலாம்.
Aadhaar Bank Account Linking: ஆதார் மற்றும் வங்கிக் கணக்கின் இணைப்பு
ஆதார் எண் உங்கள் வங்கிக் கணக்கில் சரியாக இணைக்கப்பட்டால் மட்டுமே திட்டத்தின் பலன் கிடைக்கும்.
Bank Account Details: வங்கிக் கணக்கு விவரங்களைச் சரிபார்க்கவும்
IFSC குறியீடு, கணக்கு எண் அல்லது பயனர் பெயரில் தவறு இருந்தால், தவணை சிக்கிக்கொள்ளக்கூடும்.
Land Verification: நிலப் பதிவுகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க வேண்டும்
மாநில போர்டல் அல்லது CSC மையத்திற்குச் சென்று நிலப் பதிவுகளைப் புதுப்பிப்பது அவசியம்.
Benificiary List: பயனாளிகள் பட்டியலில் பெயரைச் சரிபார்க்கவும்
PM Kisan portal pmkisan.gov.in க்குச் சென்று, ‘Beneficiary Status’ பிரிவில் உங்கள் பதிவு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிட்டு நிலையைச் சரிபார்க்கவும்.
Mobile Number: மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும்
OTP மற்றும் தவணை தொடர்பான விழிப்பூட்டல்களைப் பெற சரியான மொபைல் எண்ணை வைத்திருப்பது கட்டாயமாகும்.
What is PM Kisan Yojana?
பிஎம் கிசான் திட்டம் என்றால் என்ன? PM Kisan யோஜனா என்பது விவசாயிகளுக்கான மத்திய அரசின் ஒரு முக்கியமான முயற்சியாகும். இதன் கீழ் ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி உதவி தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 என்ற மூன்று சம தவணைகளில் நேரடியாக அனுப்பப்படுகிறது. பிப்ரவரி 2019 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் 19 தவணைகளில் சுமார் ரூ.3.68 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிப்ரவரி 24, 2025 அன்று பீகார், பாகல்பூரிலிருந்து பிரதமர் மோடி 9.8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் கணக்குகளில் 19வது தவணையை மாற்றினார். அடுத்த தவணை, அதாவது திட்டத்தின் 20வது தவணை இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ