)
PM Kisan Samman Nidhi Yojana: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் 21வது தவணைக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி! இந்தத் தவணை 2025 நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
பிஎம் கிசான் திட்டத்தின் 21வது தவணை பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு (நவம்பர் 6 மற்றும் 11) சற்று முன்பு விவசாயிகளின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படலாம். இருப்பினும், மத்திய அரசு இன்னும் இதற்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
சில மாநிலங்களில் மத்திய அரசு ஏற்கனவே பிஎம் கிசான் 21வது தவணையை வெளியிட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச விவசாயிகள் செப்டம்பர் 26, 2025 அன்று இந்தத் தவணையைப் பெற்றனர். இந்த மாநிலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய அரசாங்கம் முன்கூட்டியே நிவாரணம் வழங்கியது. மேலும், இந்தத் தொகை அக்டோபர் 7, 2025 அன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள விவசாயிகளின் கணக்குகளையும் அடைந்துள்ளது. பிற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் நவம்பரில் பணம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணைகளாக விவசாயிகளின் கணக்குகளுக்கு ₹2,000 செலுத்தப்படுகிறது. முதல் தவணை ஏப்ரல்-ஜூலை மாதங்களுக்கு இடையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட்-நவம்பர் மாதங்களுக்கு இடையிலும், மூன்றாவது தவணை டிசம்பர்-மார்ச் மாதங்களுக்கு இடையிலும் விவசாயிகளின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகின்றன.
பீகாரில் சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக மாடல் கோட் ஆஃப் காண்டக்ட் விதிகள் அமலில் உள்ளன. இந்த நேரத்தில் பிஎம் கிசான் தவணைகளை வெளியிட முடியுமா என்ற கெள்வி பலருக்கு உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் புதிய திட்டங்களை அறிவிப்பதைத்தான் தடைசெய்கின்றன. பிஎம் கிசான் போன்ற ஏற்கனவே உள்ள திட்டங்களின் கீழ் பணம் செலுத்துவதை இவை தடுக்காது.
சில விவசாயிகளுக்கு பிஎம் கிசான் 21வது தவணையை பெறுவதில் சிக்கல் ஏற்படக்கூடும். இந்த விவசாயிகள் 21வது தவணையைப் பெற மாட்டார்கள். e-KYC செய்து முடிக்காத விவசாயிகள், ஆதார் சீடிங்க் அல்லது வங்கிக் கணக்கு இணைப்பை முடிக்காத விவசாயிகள் 21வது தவணையைப் பெற மாட்டார்கள் என்று வேளாண் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. தகுதியான விவசாயிகளின் சரிபார்ப்புப் பட்டியலை விரைவில் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்புமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளியாக உள்ளவர்கள், உடனடியாக உங்கள் e-KYC மற்றும் ஆதார் சீடிங்க் நிலையைச் சரிபார்ப்பது நல்லது. இந்த சம்பிரதாயங்கள் முழுமையடையவில்லை என்றால், உங்கள் அருகிலுள்ள விவசாய அலுவலகம் அல்லது பொது சேவை மையத்தை (CSC) தொடர்பு கொள்ளவும். அடுத்த தவணை உங்கள் கணக்கை எந்த இடையூறும் இல்லாமல் சென்றடைவதை உறுதிசெய்ய இந்த பணிகளை சரியான நேரத்தில் முடிக்கவும்.
பதிவு செய்வதில் சிக்கல் இருந்தால் அல்லது உங்கள் தவணை குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், அதிகாரப்பூர்வ பிஎம் கிசான் வலைத்தளத்திற்கு செல்லவும். ஃபார்மர் கார்னரில் ஒரு ஹெல்ப் டெஸ்க் ஆப்ஷன் இருக்கும். தகவலைப் பெற உங்கள் ஆதார் எண், கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும். வினவல் படிவத்தில் உங்கள் சிக்கலைத் தேர்ந்தெடுத்து, அதன் விவரங்களை எழுதி சமர்ப்பிக்கவும். மாற்றாக, உங்கள் அருகிலுள்ள பொது சேவை மையம் (CSC), உள்ளூர் பட்வாரி, வருவாய் அதிகாரி அல்லது மாநில அரசு நோடல் அதிகாரியைத் தொடர்புகொண்டும் இதற்கு பதிவு செய்யலாம்.
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2, 2025 அன்று உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணையை வெளியிட்டார். அப்போது 9.7 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு ரூ.20.84 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டம் பிப்ரவரி 2019 இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் ₹6,000 நிதி உதவியைப் பெறுகிறார்கள். இது நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் மூன்று தவணைகளில் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. தற்போது, நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ