PM Kisan Samman Nidhi Yojana: விவசாயிகளுக்கு இன்று முக்கியமான நாள். பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளி விவசாயிகளுக்கு இன்று 21வது தவணை கிடைக்கவுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் இந்த தவணை அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்
மத்திய அரசு சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு இந்த குறிப்பிடத்தக்க பரிசை இன்று வழங்க உள்ளது. இதற்காக விவசாயிகள் பல நாட்களாக காத்திருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி இன்று விவசாயிகளின் கணக்குகளில் 21வது தவணையாக 2,000 ரூபாயை DBT மூலம் வெளியிடுவார். கோயம்புத்தூரில் ஒரு விவசாய நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி 21வது தவணையை வெளியிடவுள்ளார்.
பிஎம் கிசான் திட்டம்
இன்று பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ₹18,000 கோடி வெளியிடப்படும். தகுதியுள்ள விவசாயிகள் மட்டுமே தவணையின் மூலம் பயனடைவார்கள். மேலும், விவசாயிகள் e-KYC -ஐ செய்து முடிக்கப்படாவிட்டால், அவர்களுக்கு தவணை மறுக்கப்படும். விவசாயிகள் தங்கள் கணக்குகளில் உள்ள தவணையை எளிதாக சரிபார்க்க முடியும். இது அனைத்து குழப்பங்களையும் நீக்குகிறது.
How To Check PM Kisan Beneficiary List?
மத்திய அரசு தகுதியற்ற விவசாயிகளின் பெயர்களை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. ஆகையால், தகுதியுள்ள விவசாயிகள் மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். விவசாயிகள், பயனாளிகளின் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை மிக எளிய வழியில் தெரிந்துகொள்ளலாம்.
- இதற்கு, விவசாயியகள் முதலில் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- இதற்குப் பிறகு, Farmer Corner -இல் Beneficiary List விருப்பத்தை பாக்க வேண்டும்.
- அதைக் கிளிக் செய்த பிறகு, புதிய விருப்பங்கள் திறக்கப்படும்.
- முதலில், விவசாயிகள் தங்கள் சொந்த மாநிலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இதற்குப் பிறகு, தங்கள் மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் கிராமத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- பின்னர், Get Report என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- இதைத் தொடர்ந்து பயனாளிகளின் பெயர்களின் பட்டியல் திறக்கும்.
இந்த விவசாயிகளுக்கு தவணைத் தொகை கிடைக்காது
இன்று வெளியிடப்படும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 21வது தவணை, இதற்கு தேவையான பணிகளை முடித்த அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கும். e-KYC-ஐ முடிக்காத விவசாயிகளுக்கு தவணை நிறுத்தப்படலாம். 21வது தவணைக்கு முன், e-KYC -ஐ விரைவாக பூர்த்தி செய்யுமாறு விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிஎம் கிசான் 21வது தவணை சுருக்கமாக....
- பிஎம் கிசான் விவ்சாயிகளுக்காக மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு முக்கியமான திட்டமாகும்.
- பிஎம் கிசான் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி உதவி கிடைக்கிறது.
- இந்த தொகை ரூ.2,000 என்ற சம தவணைகளில் 4 மாதங்களுக்கு ஒரு முறை அளிக்கப்படுகின்றது.
- இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 20 தவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
- பிஎம் கிசான் 21வது தவணை இன்று கோயம்புத்தூரிலிருந்து வழங்கப்படவுள்ளது.
- தகுதியுள்ள விவசாயிகள் பயனாளி பட்டியலை பார்த்து தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளலாம்
மேலும் படிக்க | பிஎம் கிசான் 21வது தவணைத்தொகை : தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் கிடைக்காது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









