)
PM Kisan Samman Nidhi Yojana: சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு நன்மைகளை வழங்க மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து இடங்களில் உள்ள மக்களும் இந்த திட்டங்களில் சேர்ந்து பயன்பெறலாம். அவர்கள் திட்டங்களுக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே ஒரெ நிபந்தனை.
உதாரணமாக, மத்திய அரசு விவசாயிகளுக்காக பல வித திட்டங்களை நடத்தி வருகின்றது. அவற்றில் மிக முக்கியமான மற்றும் பிரபலமான ஒரு திட்டமாக இருப்பது பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா. இதன் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு வருடத்திற்கு ₹2,000 என்ற மூன்று சம தவணைகளில் மொத்தம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது.
இதுவரை, பிஎம் கிசான் திட்டத்தின் 20 தவணைகள் வெளியிடப்பட்டுள்ளன, இப்போது 21வது தவணையின் முறை. பிஎம் கிசான் 21வது தவணை நவம்பர் மாத முதல் வாரத்தில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
விவசாயிகள் பிஎம் கிசான் 21வது தவணையின் பலன்களைப் பெற சில முக்கிய பணிகளை கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தவணை சலுகைகளைப் பெற விரும்பினால், விவசாயிகள் தங்கள் e-KYC ஐ நிறைவுசெய்ய வேண்டும். இது திட்டத்தின் கீழ் விவசாயிகள் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணியாகும். இந்தப் பணியை முடிக்க உங்கள் அருகிலுள்ள CSC மையத்திற்கு செல்லலாம். அல்லது, திட்டத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலான pmkisan.gov.in -க்குச் சென்று e-KYC ஐ ஆன்லைனில் செய்து முடிக்கலாம்.
பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் கீழ், விவசாயிகள் நில சரிபார்ப்பை செய்து முடிக்க வேண்டும். திட்டத்தில் சேர்ந்துள்ள விவசாயிகளின் சாகுபடி நிலத்தை வெரிஃபை செய்வது இதில் அடங்கும். இந்தப் பணியை முடிக்கத் தவறினால் உங்கள் தவணையைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, இது சரியான நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதிசெய்வது நல்லது.
பிஎம் கிசான் 21வது தவணைப் பலனைப் பலனைப் பெற விரும்பினால், விவசாயிகள் தங்கள் ஆதார் இணைப்பையும் செய்து முடிக்க வேண்டும். இந்தப் பணியை செய்து முடிக்கவில்லை என்றால், தவணை தாமதமாகலாம். விவசாயிகள் தங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று இதைச் செய்ய வேண்டும். இதில் உங்கள் ஆதார் அட்டையை உங்கள் வங்கிக் கணக்குடன் இணைப்பது அடங்கும்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 21வது தவணையைப் பெற விரும்பினால், நீங்கள் இன்னும் ஒரு பணியை முடிக்க வேண்டும். இதற்கு உங்கள் வங்கிக் கணக்கில் DBT ஆப்ஷனை இயக்க வேண்டும். அரசாங்கம் DBT மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு தவணை நிதியை மாற்றுகிறது. ஆகையால், DBT அவசியமாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ