)
PM Kisan Samman Nidhi Yojana: பலதரப்பட்ட மக்களுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. விவசாயிலளுக்காகவும் பல வித திட்டங்கள் செயலில் உள்ளன. அவற்றில் மிக பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இருப்பது பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமாகும். இதன் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 20 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் வாயிலாக, விவசாயிகள் ஆண்டுதோறும் மூன்று சம தவணைகளில் ₹6,000 பெறுகிறார்கள். DBT மூலம் பணம் அவர்களின் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 20 தவணைகள் அளிக்கப்பட்டுள்ளன. இப்போது, விவசாயிகள் 21வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் 20வது தவணை ஆகஸ்ட் 2 அன்று வெளியிடப்பட்டது. இந்த தவணையின் வெளியீட்டில் சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. எனினும், 21வது தவணையில் தாமதம் இருக்காது என கூறப்படுகின்றது.
திட்ட விதிகளின்படி, முதல் தவணை ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், இரண்டாவது தவணை ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில், மூன்றாவது தவணை டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் வெளியிடப்படும். இதன் படி, அடுத்த தவணை நவம்பர் 2025 இல் வழங்க திட்டமிடப்படலாம். இருப்பினும், அக்டோபரில் தீபாவளியை ஒட்டி விவசாயிகளுக்கான தவணையை மத்திய அரசு முன்னரே வெளியிடக்கூடும் என்ற ஊகம் பரவலாக உள்ளது. எப்படியும் பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 21வது தவணை அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வெளியிடப்படும். எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை. 21வது தவணையைப் பெறுவதற்கு முன், விவசாயிகள் KYC செயல்முறை மற்றும் பிற நடைமுறைகளை முடிக்க வேண்டியது அவசியமாகும்.
- 21வது தவணைக்கு முன் விவசாயிகள் e-KYC மற்றும் நிலப் பதிவுகள் சரிபார்ப்பு உள்ளிட்ட பிற நடைமுறைகளை செய்து முடிக்க வேண்டும்.
- விவசாயிகள் தங்கள் விவசாயி பதிவேட்டையும் புதுப்பிக்க வேண்டும்.
- மேலும், தங்கள் வங்கிக் கணக்கில் நேரடி மானிய விருப்பத்தையும் செயல்படுத்த வேண்டும்.
- ஆதார் மற்றும் மொபைல் எண்ணை இனைப்பதும் அவசியமாகும்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா சுருக்கமாக.....
- பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா நாட்டின் விவசாயிகளுக்காகத் தொடங்கப்பட்டது.
- இதன் கீழ், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.6,000 அனுப்பப்படுகிறது.
- இந்தத் தொகை ரூ.2,000 மூன்று சம தவணைகளாக அளிக்கப்படுகிறது.
- இது விவசாயம் மற்றும் வீட்டுச் செலவுகளில் விவசாயிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ