)
PM Kisan Samman Nidhi Yojana: நாட்டின் முதுகெலும்புகளாக உள்ள விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. அவற்றில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா மிகவும் பிரபலமான மற்றும் முக்கியமான ஒரு திட்டமாக உள்ளது. இதன் கீழ், நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் இதுவரை 20 தவணைகளில் நிதி உதவி பெற்றுள்ளனர்.
இப்போது விவசாயிகள் அடுத்த தவணையான 21வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். பிம் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதி உதவியை வழங்குகிறது. இது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 -க்கான மூன்று சம தவணைகளில் வழங்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு தவணையிலும் விவசாயிகளின் கணக்கில் ரூ.2,000 டெபாசிட் செய்யப்படுகிறது.
விவசாயிகள் இப்போது அடுத்த தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வரும் இந்தத் தவணைக்கான நேரம் நவம்பரில் நிறைவடைய உள்ளது. எனினும், இந்த முறை தீபாவளிக்கு முன்னரே அரசாங்கம் விவசாயிகளுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 21வது தவணை தீபாவளியை ஒட்டி வெளியிடப்படலாம் என்று கூறப்படுகின்றது. இருப்பினும், இது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
கடந்த 20வது தவணையில், 9.70 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இந்தத் திட்டத்தின் பயனைப் பெற்றனர். இப்போது 21வது தவணையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நரேந்திர மோடி அரசு விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிஎம் கிசான் 20வது தவணை இன்று ஆகஸ்ட் 2, 2025, அன்று விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. கோடிக்கணக்கான விவசாயிகள் 20வது தவணைக்கான பரிசைப் பெற்றார்கள்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா சுருக்கமாக.....
- பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காகத் தொடங்கப்பட்டது.
- இதன் கீழ், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.6,000 உதவி நேரடியாக அனுப்பப்படுகிறது.
- இந்தத் தொகை மூன்று சம தவணைகளாக வழங்கப்படுகிறது.
- இது விவசாயம் மற்றும் வீட்டுச் செலவுகளில் விவசாயிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ