பிஎம் கிசான் : பட்டா பெயர் மாற்றம் செய்தால் மட்டுமே ரூ.2000! - விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

PM Kisan : பிஎம் கிசான் 21வது தவணைத்தொகை பட்டாவில் பெயர் மாற்றம் செய்தால் மட்டுமே கிடைக்கும் என தமிழ்நாடு விவசாயிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கொடுக்கப்பட்டுள்ளது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Nov 13, 2025, 09:08 PM IST
  • பிஎம் கிசான் 21வது தவணைத் தொகை
  • தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
  • பட்டாவில் கட்டாயம் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்
பிஎம் கிசான் : பட்டா பெயர் மாற்றம் செய்தால் மட்டுமே ரூ.2000! - விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

PM Kisan : பிஎம் கிசான் 21வது தவணைத்தொகை பெறுவது தொடர்பாக கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தலைக் கொடுத்துள்ளார். பட்டாவில் பெயர் மாற்றம் செய்யாதவர்களுக்கு இம்முறை பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 கிடைக்காது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில், பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டத்தின்கீழ் (PM-KISAN) தனித்துவ அடையாள அட்டை பெற்றால் மட்டுமே பி.எம்.கிஷான் 21வது தவணை தொகை பெற முடியும் என கூறியுள்ளார். 

Add Zee News as a Preferred Source

பிஎம் கிசான் 21வது தவணைத்தொகை

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்டத்தின்கீழ், கரூர் மாவட்டத்தில் 31704 விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000/- வீதம் ஆண்டுக்கு ரூ.6000/- ஒன்றிய அரசால் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 20 தவணைகளில் உதவித் தொகை வழங்கப்பட்டு உள்ளது. 21வது தவணை உதவித் தொகை பெற தனித்துவ விவசாய அடையாள அட்டையில் பதிவு செய்து அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நிதி உதவி பெறும் விவசாயிகளில் இதுவரை 21 ஆயிரத்து 280 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 10424 பேர் தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனர்.

கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

எதிர்வரும் நவம்பர் 2025ம் மாத மாதத்தில் 21வது தவணை பெறுவதற்கு விவசாயிகள் விரைவாக தனித்துவ விவசாய அடையாள எண் பெற வேண்டியது கட்டாயம். எனவே, விவசாயிகள் தங்களது பகுதி வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமாகவோ தங்களது சிட்டா, ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண் உடன் சென்று உடனடியாக பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்று பிரதமரின் கௌரவ நிதி உதவி தொகை 21வது தவணை பெறுவதை உறுதிப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்

மேலும், முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் பெற்று, அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால் மட்டுமே பி.எம்.கிஷான் அடுத்த தவணை தொகை தொடர்ந்து கிடைக்கும் என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

திரூவாரூர் பயிர்க்காப்பீடு

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு 2025-26 ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு 15.11.2025 வரை அறிவிக்கப்பட்டுள்ளதால், பயிர் காப்பீட்டு கட்டணமாக சம்பா நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.1393.08 செலுத்தி விவசாயிகள் பயனடையலாம். திருவாரூர் மாவட்டத்தில் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் ஷேமா (Kshema) பொது காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

எனவே, சம்பா பயிர் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறா விவசாயிகள் என அனைவரும் அறிவிக்கை செய்யப்பட்ட பயிரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ (இ சேவை மையங்கள்) / தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள "விவசாயிகள் கார்னரில்" (www.pmfby.gov.in) நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் / இ-அடங்கல் / விதைப்பு சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass Book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhaar Card) நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத்தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்) / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். 

இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ (www.pmfby.gov.in) அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையோ அல்லது திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ அணுகுமாறு விவசாய பெருங்குடி மக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிர் காப்பீடு செய்ய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இறுதி நாள் வரை காத்திருக்காமல், விரைந்து காப்பீடு செய்து பயன்பெறுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | பிஎம் கிசான் : தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காலவகாசம் நீட்டிப்பு

மேலும் படிக்க | PM Kisan 21வது தவணை: இந்த விவசாயிகளுக்கு இந்த முறை ரூ.4,000 கிடைக்கும்... அரசு அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News