)
PM Kisan Samman Nidhi Yojana: மத்திய அரசு விவசாயிகளுக்காக செயல்படுத்தி வரும் பல வித திட்டங்களில் பிஎம் கிசான் திட்டமும் முக்கியமான ஒன்றாகும். அரசாங்கம் இப்படிப்பட்ட திட்டங்கள் மூலம் அதன் பயனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. தகுதிப் பட்டியல் முதல் விண்ணப்ப செயல்முறை வரை அனைத்தும் விளக்கப்படுகின்றன. உதாரணமாக, நீங்கள் ஒரு விவசாயியாக இருந்தால், விவசாயிகளுக்கு மட்டுமே பிரத்யேகமாக பிரதம மந்திரி கிசான் சமான் யோஜனாவில் சேரலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு பல வித நன்மைகள் கிடைக்கின்றன.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் கீழ், விவசாயிகளுக்கு தலா 2,000 ரூபாயாக ஆண்டுக்கு 3 தவணைகள் வழங்கப்படுகின்றன. இது விவசாயிகளுக்கு மொத்தம் 6,000 ரூபாய் ஆண்டு நிதி உதவியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 20 தவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது 21வது தவணைக்கான முறை.
பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்ட பயனாளிகளுக்கு இதுவரை மொத்தம் 20 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 20வது தவணை ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன் மூலம் 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனர். இந்த வரிசையில், திட்டத்துடன் தொடர்புடைய விவசாயிகள் தற்போது 21வது தவணைக்காக காத்திருக்கிறார்கள்.
லட்சக்கணக்கான விவசாயிகள் 21வது தவணைக்காகக் காத்திருக்கிறார்கள். எனினும், இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று மாநிலங்களில் உள்ள விவசாயிகள் ஏற்கனவே 21வது தவணையைப் பெற்றுள்ளனர். இந்த மாநிலங்களில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தியுள்ளன. எனவே, மத்திய அரசு இந்தத் தவணையை வெளியிட்டு, செப்டம்பர் 26 ஆம் தேதி, 27 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 21வது தவணையின் பலனை வழங்கியது.
பிரதமர் கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் இன்னும் லட்சக்கணக்கான விவசாயிகள் 21வது தவணைக்காகக் காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு முன் 21வது தவணை வெளியிடப்படலாம் என்று பல ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. ஆனால் இப்போது அது சாத்தியமில்லை. இதுவரை அரசாங்கம் அடுத்த தவணை வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால், தீபாவளிக்கு முன் இது வெளியிடப்படுவது கடினம் என்றே தோன்றுகிறது.
பொதுவாக, தவணை வெளியீட்டு தேதியை அரசாங்கம் தவணை செலுத்தப்படுவதற்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்பே அறிவிக்கும். ஆனால் இன்றுவரை இன்னும் 21வது தவணைக்கான அறிவிப்பு இன்னும் வரவில்லை. ஆகையால், தீபாவளிக்கு முன் தவணை வந்து சேர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகின்றது. விதிகளின் கீழ், 21வது தவணை நவம்பரில் வெளியிடப்படலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ