PM Kisan Samman Nidhi Yojana: நாட்டில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளின் நலனுக்கான பல திட்டங்கள் செயலில் உள்ளன. அவற்றில் மிக பிரபலமான ஒரு திட்டமாக இருப்பது பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் என்பது விவசாயிகளுக்கான ஒரு முக்கிய மத்திய அரசு திட்டமாகும். இதன் கீழ் 97 லட்சக்கணக்கான விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி உதவியை பெறுகிறார்கள். இந்தத் தொகை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2,000 என்ற மூன்று சம தவணைகளில் விநியோகிக்கப்படுகிறது. இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு DBT பரிமாற்றம் மூலம் அனுப்பப்படுகிறது.
PM Kisan 21th Installment: பிஎம் கிசான் 21வது தவணை எப்போது கிடைக்கும்?
இந்த திட்டத்தின் பலன் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் மற்றும் இந்திய குடிமக்களாக இருக்கும் விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. இதுவரை, திட்டத்தின் 20 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் 21வது தவணைக்காக இப்போது விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாநிலங்களான பஞ்சாப், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் 21வது தவணைக்கான தலா ரூ.2,000 தொகையை, வழக்கமான நேரத்தை விட முன்னதாகவே பெற்றுள்ளனர். இந்த நிலையில், மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கும் விரைவில் நிதி அனுப்பப்படும். இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக 21வது தவணை வெளியிடப்படக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.
பிஎம் கிசான் திட்டம்
பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் விதிகளின்படி, முதல் தவணை ஏப்ரல் - ஜூலை மாதங்களுக்கு மத்தியிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் - நவம்பர் மாதங்களுக்கு மத்தியிலும், மூன்றாவது தவணை டிசம்பர் - மார்ச் மாதங்களுக்கு மத்தியிலும் வழங்கப்படும். நான்கு மாத காலத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அடுத்த தவணை நவம்பரில் செலுத்தப்படும் என கூறப்படுகின்றது. எனினும், பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக, மத்திய அரசு அக்டோபரில், தீபாவளியை ஒட்டி தவணையை வெளியிடக்கூடும் என்ற ஊகங்களும் உள்ளன. இருப்பினும், இறுதி தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை அல்லது புதுப்பிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
21வது தவணையை பெற தேவையான ஆவணங்கள்
விவசாயிகள் 21வது தவனையை எந்த வித சிக்கலும் இல்லாமல் பெற, 5 பணிகளில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். இந்த பணிகளை செய்யவில்லை என்றால், 21வது தவணை தொகை கிடைக்காமல் போகலாம்.
- e-KYC,
- நில சரிபார்ப்பு,
- விவசாயி பதிவு
- மொபைல் என்ணை ஆதாருடன் இணைப்பது
- வங்கிக் கணக்கில் DBT விருப்பத்தை இயக்குவது
போன்ற பணிகளை முடிக்க வேண்டும், இல்லையெனில் பணம் சிக்கிக்கொள்ளக்கூடும்.
விண்ணப்பப் படிவத்தில் பெயர், முகவரி, மொபைல் எண், ஆதார் எண் தவறாக இருந்தால், அவற்றையும் சரி செய்வது அவசியம். இல்லையெனில் தவணைப் பலன்கள் கிடைக்காமல் போகலாம்.
இந்த விவசாயிகளுக்கு சலுகைகள் கிடைக்காது
- பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், நிதி நிலைமை சிறப்பாக உள்ள விவசாயிகளுக்கு சலுகை வழங்கப்படாது, அவர்கள் தகுதியுடையவர்களாக கருதப்பட மாட்டார்கள்.
- நிறுவன நிலம் உள்ல விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது.
- அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள் அல்லது முன்னர் வகித்தவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள்.
- முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள், நகராட்சி நிறுவனங்களின் தற்போதைய மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்துகளின் முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்கள் இதற்கு தகுதி பெற மாட்டார்கள்.
- மத்திய அல்லது மாநில அரசு மற்றும் அதன் களப் பிரிவுகளின் அமைச்சகங்கள்/அலுவலகங்கள்/துறைகளின் அரசு அதிகாரிகள் அல்லது ஊழியர்களுக்கு இதன் பலன் கிடைக்காது.
- ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் அரசுப் பணி ஊழியர்களுக்கு இதன் நன்மைகள் கிடைக்காது.
- உள்ளாட்சி அமைப்புகளின் வழக்கமான ஊழியர்களும் (மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்/பிரிவு IV/குரூப் D ஊழியர்கள் தவிர) பயன் பெற முடியாது.
- ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மாதாந்திர ஓய்வூதியம் (மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்/கிளாஸ் IV/குரூப் D ஊழியர்கள் தவிர) பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு இது கிடைக்காது.
- பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் போன்ற தொழில் வல்லுநர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற முடியாது.
- இந்த திட்டத்திற்கு தகுதியற்றவராக இருந்து ஒரு விவசாயி இதன் பயனைப் பெற்றிருந்தால், அரசாங்கம் அதை அவரிடமிருந்து மீட்டெடுக்கும்.
- மேலும் அவர் அரசாங்கத்திடமிருந்து பெற்ற அனைத்து தவணைகளையும் திருப்பித் தர வேண்டும்.
மேலும் படிக்க | இனி உதவித்தொகை பெற இந்த ஆவணம் கட்டாயம்! எப்படி பெறுவது? முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









