)
PM Kisan Samman Nidhi Yojana: இந்த பண்டிகைக் காலத்தில் நாடு முழுதும் உள்ள விவசாயிகள் மத்தியில் பொதுவான கேள்வி ஒன்று உள்ளது. பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் 21வது தவணையின் ரூ.2,000 தொகை எப்போது அவர்களின் கணக்குகளில் வரும் என்பதுதான் அது. பிஎம் கிசான் 21வது தவணை எப்போது கிடைக்கும்? அதற்கு முன் செய்ய வேண்டிய பணிகள் என்ன? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
பல விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா தொடர்பான சமீபத்திய தகவல்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகளை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இந்த முறை எந்த விவசாயிகளுக்கு ₹2,000 உதவி கிடைக்காது என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பிஎம் கிசான் 21வது தவணை பற்றிய ஒரு புதிய அப்டேட் கிடைத்துள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் அரசாங்கம் பிஎம் கிசான் 21வது தவணைத் தொகையை வெளியிடக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதாவது, தங்கள் e-KYC ஐ நிறைவு செய்த விவசாயிகளுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் அடுத்த சில நாட்களில் அவர்களின் அடுத்த தவணையான ₹2,000 வரவு வைக்கப்படும்.
பிஎம் கிசான் e-KYC-ஐ இன்னும் முடிக்காத விவசாயிகளுக்கும், தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படாத விவசாயிகளுக்கும் இந்த தவணை கிடைக்காது. e-KYC இல்லாமல் யாரும் தவணைத் தொகையை பெற மாட்டார்கள் என்று அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது. மேலும், பிப்ரவரி 1, 2019 க்குப் பிறகு நிலம் வாங்கிய விவசாயிகள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற மாட்டார்கள். இந்த விதி மரபுரிமை பெற்ற நிலத்திற்கு மட்டும் பொருந்தாது.
e KYC -ஐ செய்து முடிக்க மூன்று வழிகள் உள்ளன:
- OTP மூலம் e-KYC-ஐச் செய்ய, pmkisan.gov.in -க்கு செல்லவும்.
- பயோமெட்ரிக் KYC -க்கு அருகிலுள்ள பொது சேவை மையத்திற்குச் (CSC) செல்லவும்.
- முக அங்கீகாரத்திற்கு மொபைல் செயலியை பயன்படுத்தவும்.
உங்கள் தவணை எப்போது வரும் என்பதைத் தெரிந்துகொள்ள, வலைத்தளத்திற்குச் சென்று ‘Beneficiary Status’ என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் எண் அல்லது கணக்கு எண்ணை உள்ளிட்டு, பணம் உங்கள் கணக்கிற்கு எப்போது வரும் என்பதைக் காணலாம்.
பிஎம் கிசான் 21வது தவணை சுருக்கமாக......
- பிஎம் கிசான் திட்டம் மூலம் விவசாயிகளிக்கு 3 தவணைகளில் மொத்தம் ரூ.6,000 வழங்கப்படுகிறது.
- இது விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பை அளிக்கின்றது.
- இதுவரை 20 தவணைகள் அளிக்கப்பட்டுள்ளன.
- 21வது தவணை நவம்பர் முதல் வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ