PM Kisan Samman Nidhi Yojana: நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் அடுத்த தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த முறை, பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 22வது தவணைக்காக அரசாங்கம் சில புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. விவசாயிகள் இந்த நடைமுறைகளை சரியான நேரத்தில் முடிக்கத் தவறினால், அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் ₹2,000 தவணைத் தொகை நிறுத்தி வைக்கப்படலாம்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தவனைத் தொகையை பெற வெறும் பதிவு அல்லது e-KYC மட்டும் இனி போதுமானதாக இருக்காது. விவசாயி அடையாள அட்டையும் (Farmer ID) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் போலிப் பயனாளிகளைத் தடுப்பதையும், உண்மையான விவசாயிகளுக்குத் திட்டத்தின் பலன்கள் கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது.
Farmer ID: விவசாயி அடையாள அட்டை இல்லாமல் பிஎம்-கிசான் பலன்கள் கிடைக்காது
தனித்துவமான விவசாயி அடையாள அட்டை இல்லாத விவசாயிகளுக்கு பிஎம்-கிசான் திட்டத்தின் 22வது தவணைத் தொகை கிடைக்காது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு விவசாயி இ-கேஒய்சி செயல்முறையை முடித்திருந்தாலும், அவரிடம் விவசாயி அடையாள அட்டை இல்லையென்றால், தவணைத் தொகை தாமதமாகலாம். எனவே, அனைத்துப் பயனாளி விவசாயிகளும் கூடிய விரைவில் தங்களின் விவசாயி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விவசாயி அடையாள அட்டையைச் செயல்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் அடையாளம் மற்றும் நிலப் பதிவுகள் அதிக வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என்றும், திட்டங்களின் பலன்கள் சரியான நபர்களைச் சென்றடைவதை இது உறுதி செய்யும் என்றும் அரசாங்கம் நம்புகிறது.
Farmer ID: விவசாயி அடையாள அட்டை என்றால் என்ன?
விவசாயி அடையாள அட்டை என்பது விவசாயியின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் அடையாள அட்டை போன்றது. இது மாநில அரசாங்கங்களின் நிலப் பதிவு அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயியின் நிலம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் சேமிக்கப்படுகின்றன. நிலப் பதிவுகளில் செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் புதுப்பிக்கப்பட்ட விவசாயி அடையாள அட்டையில் தானாகவே பிரதிபலிக்கும்.
இந்தத் தனித்துவமான அடையாள அட்டையின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், பல்வேறு அரசுத் திட்டங்களின் பலன்களைப் பெற விவசாயிகள் மீண்டும் மீண்டும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. மேலும், சந்தைகள், வங்கிகள் மற்றும் காப்பீடு போன்ற சேவைகளுக்கான அணுகலும் இதன் மூலம் எளிதாகிறது.
பிஎம்-கிசான் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா உலகின் மிகப்பெரிய நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிப்ரவரி 24, 2019 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நாட்டில் உள்ள தகுதியுள்ள நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் விவசாயச் செலவுகளை எளிதாகச் சமாளிக்க முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ், இடைத்தரகர்களின் பங்கை நீக்கி, அரசாங்கம் உதவித் தொகையை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுகிறது.
பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.2,000 என்ற மூன்று சம தவணைகளாக வழங்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, ரூ.2,000 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.
இதுவரை, மத்திய அரசு இந்தத் திட்டத்தின் கீழ் 21 தவணைகளை வெளியிட்டுள்ளது. 21வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19, 2025 அன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இருந்து வெளியிட்டார்.
PM Kisan 22nd Installment: பிஎம் கிசான் 22வது தவணை எப்போது கிடைக்கும்?
பிஎம்-கிசான் திட்டத்தின் 22வது தவணை பிப்ரவரி மற்றும் மார்ச் 2026-க்கு இடையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசு அறிக்கைகள் மற்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அரசாங்கம் இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ தேதியை அறிவிக்கவில்லை.
தவறான தகவல்கள் மற்றும் சிக்கல்களைத் தவிர்க்க, விவசாயிகள் அதிகாரப்பூர்வ பிஎம் கிசான் இணையதளம் மற்றும் மொபைல் செயலியைப் பார்வையிட்டு தங்கள் தகவல்களைத் தவறாமல் புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
e-KYC: இ-கேஒய்சி கட்டாயத் தேவையாகும்
விவசாயி அடையாள அட்டையுடன், பிஎம்-கிசான் திட்டத்திற்கு e KYC செயல்முறை கட்டாயத் டேவையாக உள்ளது. இ-கேஒய்சி முடிக்காத விவசாயிகளின் தவணைகள் நிறுத்தி வைக்கப்படலாம் என்று வேளாண் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
விவசாயிகள் தங்களின் இ-கேஒய்சியை பிஎம்-கிசான் அதிகாரப்பூர்வ இணையதளம், மொபைல் செயலி அல்லது அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று பயோமெட்ரிக் முறையில் முடிக்கலாம். இந்தச் செயல்முறையை சரியான நேரத்தில் முடிப்பது விவசாயிகளின் நலனுக்கு உகந்தது.
How to Check the Status of the PM Kisan 22nd Installment
22வது தவணையின் நிலையைச் சரிபார்ப்பது எப்படி? 22வது தவணை வெளியிடப்பட்டவுடன், விவசாயிகள் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ பிஎம்-கிசான் இணையதளத்திற்குச் சென்று தங்கள் கட்டண நிலையை செக் செய்யலாம். இணையதளத்தில் உள்ள 'உங்கள் நிலையை அறியுங்கள்' (Know Your Status) பகுதிக்குச் சென்று, பதிவு எண் மற்றும் ஓடிபி-யை உள்ளிட்டு முழுமையான தவணைத் தகவல்களைப் பெறலாம்.
விவசாயியின் பெயர் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தால், தவணை நேரடியாக அவர்களின் கணக்கிற்கு மாற்றப்படும். பெயர் சேர்க்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வேளாண்மை அதிகாரியைத் தொடர்புகொண்டு சிக்கலைத் தீர்க்கலாம்.
மேலும் படிக்க | பிஎம் கிசான் : தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு முக்கிய தகவல்! இ-மித்ரா செயலி அப்டேட்
மேலும் படிக்க | Budget 2026: விவசாயிகளுக்கு நிவாரணம்... பிஎம் கிசான் தவணைத் தொகை ரூ.9,000 ஆகிறதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









