PM Kisan 22வது தவணை ரூ.2,000 சிக்காமல் கிடைக்க இந்த மூன்றும் அவசியம்

PM Kisan 22nd Installment News: பிஎம் கிசான் திட்டத்திற்கு e-KYC ஏன் கட்டாயம்? இதை எப்படி செய்து முடிப்பது? இதற்கான எளிய செயல்முறை என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 23, 2026, 03:03 PM IST
  • பிஎம் கிசான் திட்டத்திற்கு e-KYC ஏன் கட்டாயம்?
  • ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் இணைப்பது ஏன் அவசியம்?
  • விவசாயி ஐடி ஏன் அவசியம்?
PM Kisan 22வது தவணை ரூ.2,000 சிக்காமல் கிடைக்க இந்த மூன்றும் அவசியம்

PM Kisan Samman Nidhi Yojana: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தகுதியுள்ள விவசாயிகளுக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் ₹6,000 நிதி உதவியை வழங்கி வருகிறது. இது மூன்று சம தவணைகளில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவணையிலும் ₹2,000 விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. 

Add Zee News as a Preferred Source

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், இதுவரை, 21 தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் இப்போது 22வது தவணைக்காகக் காத்திருக்கிறார்கள். பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அரசாங்கம் சில தேவைகளை கட்டாயமாக்கியுள்ளது. தவணைத் தொகையை தவறாமல் பெற இந்த தேவைகளிய பூர்த்தி செய்வது கட்டாயமாகும். இவற்றில் eKYC, வங்கிக் கணக்குகளுடன் ஆதார் இணைப்பு மற்றும் தனித்துவமான விவசாயி ஐடி ஆகியவை அடங்கும். இந்த பணிகளை செய்து முடிக்காத விவசாயிகளின் அடுத்த தவணை நிறுத்தி வைக்கப்படலாம். ஆகையால், இவற்றை விரைவில் பூர்த்தி செய்ய விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக e-KYC செய்து முடிக்காத மற்றும் விவசாயி அடையாள அட்டை இல்லாத விவசாயிகளின் கணக்கு முடக்கப்படும் என அரசாங்கம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வருகின்றது.

e KYC: பிஎம் கிசான் திட்டத்திற்கு e-KYC ஏன் கட்டாயம்?

- மோசடி பயனாளிகளை அகற்றுவதற்காக அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு e-KYC-ஐ கட்டாயமாக்கியுள்ளது.

- விவசாயிகள் பிஎம் கிசான் போர்டல் அல்லது அருகிலுள்ள CSC மையத்திற்கு சென்று திட்டத்திற்கான e-KYC-ஐ முடிக்கலாம்.

- விவசாயிகளின் e KYC முழுமையடையவில்லை என்றால், அவர்களது அடுத்த தவணை நிறுத்தி வைக்கப்படலாம்.

Aadhaar Card Bank Account Linking: ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் இணைப்பது ஏன் அவசியம்?

- மற்றொரு முக்கியமான பணி, விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கை அவர்களது ஆதாருடன் இணைப்பது.

- திட்டத்தின் நிதி DBT (நேரடி நன்மை பரிமாற்றம்) மூலம் நேரடியாக விவசாயிகளின் கணக்கிற்கு மாற்றப்படுகிறது.

- விவசாயிகளின் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றாலோ, அல்லது கணக்கில் உள்ள பெயர், ஆதார் மற்றும் திட்ட பதிவுகளுக்கு இடையில் முரண்பாடு இருந்தாலோ அடுத்த தவணை தாமதமாகலாம்.

- விவசாயிகள் தங்கள் வங்கிக்குச் சென்று தங்கள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைக்கலாம்.

Farmer ID: விவசாயி ஐடி ஏன் அவசியம்?

- இந்த முறை, இந்திய அரசு, தனித்துவமான விவசாயி அடையாள அட்டை இல்லாத விவசாயிகளின் அடுத்த தவணையை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

- விவசாயி ஐடி விவசாயிக்கான டிஜிட்டல் அடையாளமாகக் கருதப்படுகிறது.

- இதில் விவசாயியின் விவசாயம் மற்றும் வருமானம் பற்றிய தகவல்கள் இருக்கின்றன.

- திட்டத்தின் நன்மைகள் சரியான விவசாயிகளைச் சென்றடைவதை இது உறுதி செய்கிறது.

- நிலப் பதிவுகளில் செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் புதுப்பிக்கப்பட்ட விவசாயி அடையாள அட்டையில் தானாகவே பிரதிபலிக்கும்.

PM Kisan 22nd Installment: பிஎம் கிசான் 22வது தவணை எப்போது கிடைக்கும்?

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை தவணைத் தொகை வழங்கப்படுகின்றது. பிஎம் கிசான் 21வது தவணை நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அடுத்த தவணையான 22வது தவணை பிப்ரவரி மாதம் வரக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனினும், அரசாங்கம் இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும் படிக்க | PM Kisan 22வது தவணை எப்போது கிடைக்கும்? பயனாளி பட்டியலை செக் செய்வது எப்படி?

மேலும் படிக்க | பிஎம் கிசான் : விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! இதை செய்யாவிட்டால் பணம் இல்லை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News