PM Kisan 22வது தவணை எப்போது கிடைக்கும்? சிக்காமல் கிடைக்க என்ன செய்ய வெண்டும்?

PM Kisan Latest News: பிஎம் கிசான் 22வது தவணை எப்போது கிடைக்கும்? இது தடைபடாமல் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? முழுமையான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 12, 2025, 04:37 PM IST
  • விவசாயிகளுக்கான முக்கிய ஆலோசனை.
  • பிஎம் கிசான் 22வது தவணை எப்போது கிடைக்கும்?
  • நில சரிபார்ப்பு ஏன் அவசியம்?
PM Kisan 22வது தவணை எப்போது கிடைக்கும்? சிக்காமல் கிடைக்க என்ன செய்ய வெண்டும்?

PM Kisan Samman Nidhi Yojana: மத்திய அரசு நாட்டில் உள்ள விவசாயிகளுகாக செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களில் பிஎம் கிசான் திட்டம் மிக பிரபலமான ஒரு திட்டமாக உள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 21 தவணைகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது விவசாயிகள் 22வது தவணைக்காக காத்திருக்கிறார்கள்.

Add Zee News as a Preferred Source

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா

பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா பரந்த அளவிலான நோக்கத்தைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். இதுவரை, அதன் தொடக்கத்திலிருந்து, 21 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் ஒவ்வொரு தவணையிலும் ரூ.2,000 பெறுகிறார்கள். இந்த வகையில் ஒரு ஆண்டுக்கு பயனாளி விவசாயிகளுக்கு 3 சம தவணைகளில் ரூ.6,000 வழங்கப்படுகின்றது. இந்தப் பணம் DBT (நேரடி நன்மை பரிமாற்றம்) மூலம் நேரடியாக பயனாளி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. இந்த செயல்முறை, ஏதேனும் முறைகேடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நீக்குகிறது.

பிஎம் கிசான்: எந்த விவசாயிகளுக்கு இதற்கான தகுதி உண்டு?

பிஎம் கிசான் யோஜனா அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே பயனளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தவணைத் தொகையை பெற,

- E KYC செய்து முடித்திருக்க வேண்டும்
- ஆதார் சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும்
- சாகுபடி செய்யக்கூடிய நிலம் இருக்க வெண்டும்
- நிலப் பதிவேடுகளில் தங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
- அரசு வேலை இருக்கக்கூடாது
- வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது

இந்த அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விவசாயிகள் திட்டத்தின் தவணைகளைப் பெற தகுதியுடையவர்கள்.

PM kisan: தவறான ஆவணங்கள் தவணையை தாமதப்படுத்தலாம்

சிலர் பெரும்பாலும் தவறான அல்லது போலி ஆவணங்களின் அடிப்படையில் திட்டத்தின் பலன்களைப் பெற முயற்சி செய்கிறார்கள். இருப்பினும், இந்த விண்ணப்பங்களை துறை அவ்வப்போது சரிபார்க்கிறது. ஒரு விவசாயியின் ஆவணங்கள் தவறாக இருப்பது கண்டறியப்பட்டால் அல்லது அவர்கள் தவறான தகவல்களுடன் விண்ணப்பித்திருந்தால், அவர்களின் விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படும். மேலும், இதற்குப் பிறகு, அந்த விவசாயிக்கு எந்த தவணையும் அளிக்கப்படாது. இந்த திட்டத்தின் நன்மைகள் உண்மையான தகுதியுள்ள விவசாயிகளை மட்டுமே சென்றடைவதை உறுதிசெய்ய அரசாங்கம் இந்த செயல்முறையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

PM kisan Land Verification: நில சரிபார்ப்பு ஏன் அவசியம்?

நில சரிபார்ப்பு என்பது பிஎம் கிசான் யோஜனாவின் ஒரு முக்கிய பகுதியாகும். இது விவசாயிகளின் சாகுபடி நிலத்தை சரிபார்த்து பதிவுகளை புதுப்பிப்பதை உள்ளடக்கியது. பல மாநிலங்களில், இந்த செயல்முறை மாவட்டம் அல்லது தாலுகா மட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் இந்த செயல்முறையை சரியான நேரத்தில் முடிக்கவில்லை என்றால், அவர்களின் பெயர் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம், தவணையும் தாமதமாகலாம்.

PM kisan: E-KYC ஐ நிரப்புவது கட்டாயம்

E-KYC பிஎம் கிசான் திட்டத்தின் மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாகும். இந்த செயல்முறை விவசாயியின் அடையாளத்தைச் சரிபார்த்து, பணம் சரியான நபரைச் சென்றடைவதை உறுதி செய்கிறது. விவசாயிகள் அருகிலுள்ள CSC மையத்திற்குச் சென்றோ, அல்லது அதிகாரப்பூர்வ PM Kisan வலைத்தளம் மூலமாகவோ அல்லது மொபைல் செயலி மூலமாகவோ e-KYC-ஐ பூர்த்தி செய்யலாம். ஒரு விவசாயி e-KYC-ஐ முடிக்கவில்லை என்றால், அவரது அடுத்த தவணை நிறுத்தி வைக்கப்படும். ஆகையால், அனைத்து விவசாயிகளும் அதை சரியான நேரத்தில் முடிப்பது மிகவும் முக்கியம்.

PM Kisan 22nd Installment: பிஎம் கிசான் 22வது தவணை எப்போது கிடைக்கும்?

அரசாங்கம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பிஎம் கிசான் தவணைகளை வெளியிடுகிறது. 21வது தவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. 22வது தவணை பிப்ரவரி 2025 இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ தேதியை அறிவிக்கவில்லை.

விவசாயிகளுக்கான முக்கிய ஆலோசனை

விவசாயிகள் எதிர்காலத்தில் தவணை தாமதமாக கிடைப்பதையும், தடங்கல்களையும் தவிர்க்க விரும்பினால், அவர்கள் சில அத்தியாவசிய விதிகளை மனதில் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் e-KYC ஐ முடிப்பது, நில சரிபார்ப்பை முடிப்பது, ஆவணங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது. ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது, செய்திகளைப் பெற உங்கள் மொபைல் எண்ணை செயலில் வைத்திருப்பது ஆகியவை மிக முக்கியம். இந்த எளிய விதிகளைப் பின்பற்றினால், பிஎம் கிசான் பயனாளிகள் அனைத்து தவணைகளையும் எந்த தொந்தரவும் இல்லாமல் பெறலாம்.

மேலும் படிக்க | இலவச எல்பிஜி சிலிண்டர் இணைப்பு முதல் பிஎம் கிசான் வரை - மத்திய அரசின் 6 முக்கிய அறிவிப்புகள்

மேலும் படிக்க | பிஎம் கிசான் திட்டம் - தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News