)
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் பயனாளி விவசாயிகளுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இப்போது ஓய்வூதியத் திட்ட நன்மைகளும் கிடைக்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 42,000 ரூபாய் கிடைக்கக்கூடும். யாருக்கெல்லாம் இந்த நன்மை கிடைக்கும்? இதற்கு விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்? அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா
- பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இரட்டிப்பு நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
- இப்போது விவசாயிகள் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 தவணைத் தொகையை மட்டுமல்லாமல், முதுமையில் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியமும், ஆண்டுதோறும் ரூ.42,000 வரை உத்தரவாத வருமானமும் பெற முடியும்.
- அதுவும் எந்த வித கூடுதல் நடவடிக்கைகளோ ஆவணச் செயல்முறையும் இல்லாமல் இது கிடைக்கும்.
- மத்திய அரசின் இரண்டு திட்டங்களான பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM Kisan Samman Nidhi) மற்றும் பிரதம மந்திரி கிசான் மான்தன் ஓய்வூதிய யோஜனா (PM Kisan Maandhan Pension Yojana) ஆகியவை இணைந்து விவசாயிகளுக்கு சிறந்த நிதி பாதுகாப்பை வழங்குவதில் பயனுள்ளதாக அமையும்.
பிஎம் கிசான் பயனாளிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தின் நன்மைகளும் கிடைக்கும்
உங்கள் பெயர் பிரதம மந்திரி கிசான் யோஜனாவில் இருந்தால், நீங்கள் அதன் மூலம் பயனடைந்து வந்தால்,பிரதம மந்திரி கிசான் மான்தன் யோஜனா (PM-KMY) இன் நேரடிப் பலனையும் பெறலாம். இது ஒரு அரசாங்க ஓய்வூதியத் திட்டமாகும். இதில் 60 வயதிற்குப் பிறகு, ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். அதாவது ஆண்டு வருமானம் ரூ.36,000 வரை பெற முடியும். இதன் முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.
- பிஎம் கிசான் பயனாளிகள் பிரதம மந்திரி கிசான் மான்தன் ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்வதற்கு எந்த தனி ஆவணத்தையும் வழங்க வேண்டியதில்லை.
- 18 முதல் 40 வயதுக்குட்பட்ட எந்தவொரு விவசாயியும் மான்தன் திட்டத்தில் பதிவு செய்யலாம்.
- மாதாந்திர பங்களிப்பு உங்கள் வயதைப் பொறுத்து ரூ.55 முதல் ரூ.200 வரை இருக்கும்.
- இதன் சிறப்பு என்னவென்றால், இந்த மாதாந்திர பங்களிப்பு PM-Kisan இன் வருடாந்திர உதவியான ரூ.6,000 இலிருந்து நேரடியாகக் கழிக்கப்படும், அதாவது, பயனாளிகள் கையை விட்டு எதையும் கொடுக்க வேண்டி இருக்காது.
பிஎம் கிசான் பயனாளிகள் ஆண்டுக்கு ரூ.42,000 பெறுவது எப்படி?
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒருவர் 40 வயதிலிருந்து அதிகபட்சமாக ரூ.200 மாத பங்களிப்பு செய்திருந்தால் (இது ஆண்டுக்கு ரூ.2,400), இது பிஎம் கிசானின் ஆண்டு தவணையான ரூ.6,000 இலிருந்து கழிக்கப்படும். மீதமுள்ள ரூ.3,600 பயனாளியின் கணக்கில் வரும்.
பயனாளி 60 வயதை அடையும் போது:
- அவருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 ஓய்வூதியம், அதாவது ஆண்டுக்கு ரூ.36,000 கிடைக்கும்.
- மேலும் பிஎம் கிசானின் மூன்று தவணைகள் அதாவது ரூ.6,000 கிடைக்கும்.
- மொத்த ஆண்டு வருமானம் ரூ.42,000 ஆக இருக்கும்.
பிஎம் கிசான் மற்றும் மான்தன் திட்டத்தின் இந்த கலவையின் சிறப்பு என்ன?
- தனி ஆவணங்கள் தேவையில்லை.
- பதிவு தானாகவே செய்யப்படும்.
- ஓய்வூதியத்திற்கான மாதாந்திர பங்களிப்பும் அரசாங்க நிதியிலிருந்து கழிக்கப்படும்
- 60 வயதிற்குப் பிறகு வழக்கமான வருமானத்திற்கான உத்தரவாதம் கிடைக்கும்.
- 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏற்கனவே மான்தான் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
60 வயதிற்குப் பிறகு வீட்டிலிருந்தபடியே நிலையான வருமானம்
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் பலனைப் பெறும் விவசாயிகளுக்கு அரசாங்கம் ஆண்டுக்கு ரூ.6000 வழங்குகிறது. அதே நேரத்தில், அவர்களுக்கு 60 வயதாகும்போது, இந்த 6000 ரூபாயுடன் ஆண்டுக்கு ரூ.36000 சேர்க்கப்படும். அதாவது, பிஎம் கிசானில் ஒரு கணக்கைத் திறப்பதைத் தவிர, பிஎம் கிசான் மான்தன் ஓய்வூதியத் திட்டத்திலும் நீங்கள் குழுசேர்ந்திருந்தால், 60 வயதிற்குப் பிறகு உங்களுக்கு ஆண்டுதோறும் 42 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 60 வயதிற்குப் பிறகு, ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பு விலக்கு நிறுத்தப்படும்.
பிஎம் கிசான்: ஆகஸ்ட் 2 ஆம் தேதி 20வது தவணை வெளியிடப்பட்டது
- பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2, 2025 அன்று வாரணாசியில் இருந்து பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணையை வெளியிட்டார்.
- இதன் கீழ் நாடு முழுவதும் உள்ள 9.7 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் கணக்குகளுக்கு ரூ.2,000 தொகை மாற்றப்பட்டது.
PM Kisan பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? இந்த வழியில் செக் செய்யலாம்
- பிஎம் கிசான் பயனாளிகளாக இருந்தும், இன்னும் 20வது தவணையை பெறாத பயனாளிகள் pmkisan.gov.in க்குச் சென்று பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயரை செக் செய்யலாம்.
- பெயர் இல்லையென்றால், விவரங்களைப் புதுப்பித்து தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
- இதனால் அடுத்த தவணை மற்றும் ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை சரியான நேரத்தில் பெற முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ