)
PM Kisan Samman Nidhi Yojana: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 19வது தவணைக்காகக் காத்திருக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்தச் செய்தி உங்களுக்கானது. மத்திய அரசு கிசான் சம்மான் திட்டத்தின் 19வது தவணைக்கான வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது. இருப்பினும், சில விவசாயிகளுக்கு இந்த முறை தவணைத் தொகை கிடைக்காமல் போகலாம். சில முக்கியமான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத விவசாயிகள் இந்த நன்மையைப் பெற முடியாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
PM Kisan
உங்கள் பிஎம் கிசான் தவணை பணம் உங்கள் கணக்கில் எப்போது வரவு வைக்கப்படும்? பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 19வது தவணைத் தொகையின் வெளியீட்டுத் தேதி என்ன? உங்கள் பயனாளி நிலையைச் செக் செய்வது எப்படி? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
PM Kisan 19th Installment: பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 24, 2025 அன்று பீகார் வருகையின் போது பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 19வது தவணையை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்த தேதியை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். இது மில்லியன் கணக்கான விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
PM Kisan: இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் எவ்வளவு தொகை கிடைக்கின்றது?
இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. இது மூன்று சம தவணைகளாகப் பிரிக்கப்படுகிறது. இந்தத் தவணைகளில், விவசாயிகள் ரூ.2,000 பெறுவார்கள். இதுவரை, 18 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
19வது தவணையை எந்த விவசாயிகளுக்கு கிடைக்கும்?
பிரதமர் கிசான் யோஜனாவில் இருந்து பயனடைய, விவசாயிகள் சில முக்கியமான பணிகளை செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், உங்கள் தவணை தாமதமாகலாம் அல்லது நிறுத்தி வைக்கப்படலாம்.
eKYC Completion: eKYC நிறைவு
பிஎம் கிசான் தவணையை தவறாமல் பெற மிக முக்கியமான பணி eKYC-ஐ முடிப்பதாகும். இந்த பணி செய்து முடிக்கப்படாவிட்டால், அடுத்த தவணையின் பலனைப் பெற முடியாது. உங்கள் அருகிலுள்ள CSC மையத்திலோ அல்லது pmkisan.gov.in இணையதளத்திலோ eKYC-ஐ எளிதாக செய்து முடிக்கலாம்.
Aadhar Card: ஆதார் அட்டை இணைப்பு
உங்கள் ஆதார் அட்டை உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், தவணையை பெறுவது தாமதமாகலாம். உங்கள் ஆதார் அட்டையை இணைக்க உங்கள் வங்கிக் கிளைக்குச் செல்லவும்.
Direct Benefit Transfer: வங்கிக் கணக்கில் DBT விருப்பம்
உங்கள் வங்கிக் கணக்கில் DBT (நேரடி பலன் பரிமாற்றம்) விருப்பம் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அது இயக்கப்படவில்லை என்றால், உங்கள் தவணை சிக்கிக்கொள்ளக்கூடும். உங்கள் வங்கிக்குச் சென்று இந்த விருப்பத்தை இயக்கலாம்.
Bank Account Details: சரியான வங்கிக் கணக்கு விவரங்கள்
சரியான வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கியுள்ளீர்களா என்பதை இருமுறை சரிபார்க்கவும். உங்கள் வங்கிக் கணக்குத் தகவலில் ஏதேனும் தவறு இருந்தால், தவணை உங்களுக்கு கிடைக்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ