)
PM Kisan Samman Nidhi Yojana: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 20வது தவணைக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு முக்கிய செய்தி உள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 19வது தவணை பிப்ரவரி மாதம் கிடைத்தது. இதை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 24, 2025 அன்று பீகாரின் பாகல்பூரில் வெளியிட்டார். பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வரவு வைக்கப்படுகிறது. இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் 3 சம தவணைகளில் ரூ.6000 உதவித் தொகை கிடைக்கிறது.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
பிஎம் கிசான் 20வது தவணையை இந்த மாத இறுதிக்குள் அல்லது ஜூலை 2025 தொடக்கத்தில் வெளியிட மத்திய அரசு தயாராகி வருகிறது. இது நாடு முழுவதும் சுமார் 9.88 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும். எனினும் இந்த தவணையை எந்த வித சிக்கலும் இல்லாமல் பெறுவதற்கு சில முக்கிய விஷயங்களில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா: இந்த 8 முக்கியமான செயல்முறைகளை செய்து முடிக்க வேண்டியது மிக அவசியம்
e-KYC -ஐ செய்து முடிக்க வேண்டும்
PM Kisan Yojana இல் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் eKYC ஐச் செய்வது கட்டாயமாகும். இது இல்லாமல், அடுத்த தவணைக்கான பணம் கிடைக்காது என அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு நீங்கள் பதிவு செய்திருந்தாலும் eKYC முழுமையடையவில்லை என்றால், உடனே அதை விரைவாகச் செய்யுங்கள். eKYC க்கு அரசாங்கம் மூன்று விருப்பங்களை வழங்கியுள்ளது.
- விவசாயிகள் விரும்பினால், PM Kisan போர்ட்டலுக்கு சென்று மொபைல் OTP மூலம் eKYC செய்யலாம்.
- அல்லது அருகிலுள்ள CSC (பொது சேவை மையம்) க்குச் சென்று பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC-ஐப் பெறலாம்.
- இது தவிர, முக அங்கீகார தொழில்நுட்பத்தின் உதவியுடன், விவசாயிகள் தங்கள் மொபைல் போன்கள் மூலமாகவும் வீட்டில் இருந்தபடியே e-KYC-ஐ முடிக்கலாம்.
வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைக்கவும்
PM Kisan யோஜனாவின் பணம் தகுதியுள்ள விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்படுகின்றது. உங்கள் கணக்கு ஆதார் மற்றும் NPCI உடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அடுத்த தவணைக்கான பணம் செலுத்தப்படும்.
பெயரில் எழுத்துப்பிழை அல்லது வேறு எந்த தவறும் இருக்கக்கூடாது
வங்கி, ஆதார் மற்றும் போர்ட்டலில் பெயர் பதிவு செய்யப்பட வேண்டும். உங்கள் அனைத்து விவரங்களும் பிழை இல்லாமல் இருக்க வேண்டும்.
நிலப் பதிவுகளின் சரிபார்ப்பு
மாநில அரசால் நிலப் பதிவுகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பது கட்டாயமாகும். இதற்கு உ.பி., மத்தியப் பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் விவசாயி பதிவேடு செயல்முறை நடந்து வருகிறது. உங்கள் விவசாயி ஐடி இன்னும் உருவாக்கப்படவில்லை என்றால், இந்த செயல்முறையையும் உடனே செய்து முடிக்கவும்.
PM-Kisan போர்ட்டலில் உள்ள தகவல்கள் சரியாக உள்ளதா?
மொபைல் எண், முகவரி போன்றவற்றைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
செயலில் உள்ள வங்கிக் கணக்கு
மூடப்பட்ட அல்லது செயல்படாத வங்கிக் கணக்கிற்கு பிஎம் கிசான் தவணை மாற்றப்படாது.
நகல் உள்ளீடுகளைத் தவிர்க்கவும்
ஒரே விவசாயி இரண்டு முறை பதிவு செய்தால், பிஎம் கிசான் மூலம் கிடைக்கும் நன்மை நிறுத்தப்படும்.
ஆதாரில் சரியான தகவல்
பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினத்தில் எந்தப் பிழையும் இருக்கக்கூடாது.
மேலே உள்ள அனைத்து தகவல்களையும் நீங்கள் சரியான நேரத்தில் பூர்த்தி செய்திருந்தால், உங்கள் தவணை எந்த இடையூறும் இல்லாமல் உங்கள் கணக்கிற்கு வரும். இந்தத் தகவல்களில் ஏதேனும் முழுமையடையவில்லை என்றால், வரும் நாட்களில் PM Kisan Yojana -வின் அடுத்த தவணையை நீங்கள் இழக்க நேரிடலாம். ஆகையால், pmkisan.gov.in போர்ட்டலில் லாக் இன் செய்து உங்கள் தகவலை உடனடியாகச் சரிபார்த்து, தேவைப்பட்டால் அதில் திருத்தங்களை செய்வது நல்லது.
PM Kisan Yojana என்றால் என்ன?
பிஎம் கிசான் விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட ஒரு இலட்சிய திட்டமாகும். இது பிப்ரவரி 2019 இல் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் ஆண்டுதோறும் ரூ.6000 உதவித் தொகையை வழங்குகிறது, இது ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மூன்று சம தவணைகளில் நேரடியாக அனுப்பப்படுகிறது.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, பயனாளி விவசாயிகளுக்கு இதுவரை 19 தவணைகளில் ரூ.3.68 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6000 நிதி உதவி மூன்று சம தவணைகளில் வழங்கப்படுகிறது. திட்டத்தின் கடைசி தவணை பிப்ரவரி 24, 2025 அன்று விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது.
பிம் கிசான் திட்டத்தின் நோக்கம் என்ன?
- விவசாய வேலைக்குத் தேவையான பொருட்களை வாங்க விவசாயிகளுக்கு உதவுதல்.
- அறுவடைக்குப் பிறகு சிறிது வருமானத்தை உறுதி செய்தல்.
- கடன் அல்லது வட்டிக்கு கடன் கொடுப்பவர்களிடமிருந்து விவசாயிகளைக் காப்பாற்றுதல்.
விவசாயிகள் வலுவாக இருக்க வேண்டும், விவசாயத்தில் முன்னேற்றம் வேண்டும், கிராமங்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. பிரதம மந்திரி கிசான் யோஜனா இந்த திசையில் ஒரு வலுவான நடவடிக்கையாக கருதப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ