PM Kisan 19வது தவணை 2 நாட்களில் வருகிறது: தவணைத் தொகையை செக் செய்யும் எளிய வழி இதோ

PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்டத்தின் பயனைப் பெறும் விவசாயிகள் e-KYC-ஐ நிறைவு செய்வது மிக அவசியமாகும். e-KYC செய்து முடிக்காத விவசாயிகள் 19வது தவனைத் தொகையை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 22, 2025, 02:12 PM IST
  • பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா.
  • பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?
  • பிஎம் கிசான் தவணை நிலையை செக் செய்வது எப்படி?
PM Kisan 19வது தவணை 2 நாட்களில் வருகிறது: தவணைத் தொகையை செக் செய்யும் எளிய வழி இதோ

PM Kisan Samman Nidhi Yojana: நாட்டின் உயிர்நாடியாக இருக்கும் விவசாயிகளுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் 19வது தவணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குள் விவசாயிகள் சில முக்கிய பணிகளை செய்துமுடிக்க வேண்டும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா

இந்தியாவில் 50 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இது நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானது. நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகள் மீது அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. விவசாயிகளுக்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவற்றில் பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனா மிக முக்கியமான ஒரு திட்டமாகும். நாட்டில் சிறு விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம். இந்த விவசாயிகளுக்கு நிதி சலுகைகளை வழங்க இந்திய அரசு திட்டங்களை நடத்துகிறது.

பிஎம் கிசான் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலும், அவர்களது நிதி நிலையை வலுப்படுத்தும் வகையிலும், 2018 ஆம் ஆண்டு இந்திய அரசு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவைத் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் மூலம், இந்திய அரசு நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதி உதவியை அளிக்கின்றது. இந்த தொகை தலா ரூ.2,000 ஆக 3 தவணைகளில் அளிக்கப்படுகின்றது.

PM Kisan 19th Installment: பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 18 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 18வது தவணை 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று வெளியிடப்பட்டது.  அடுத்த தவணையான 19வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். இன்னும் 2 நாட்களில், அதாவது பிப்ரவரி 24 ஆம் தேதி விவசாயிகளின் கணக்குகளில் 19வது தவணைத் தொகை வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம் கிசான் தவணை நிலையை செக் செய்வது எப்படி?

விவசாயிகள் தங்கள் கணக்கில் பிஎம் கிசான் தவணை நிலையை எளிய வழியில் தெரிந்துகொள்ளலாம். ஆன்லைனில் இதை செய்வதற்கான முழுமையான செயல்முறையை இங்கே காணலாம்.

- இதற்கு முதலில் விவசாயிகள் பிஎம் கிசான் யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in/ -க்குச் செல்ல வேண்டும்.

- அங்கு 'Farmers Corner' -க்கு சென்று 'Know Your Status' என்பதைக் கிளிக் செய்யவும்.

- இதற்குப் பிறகு விவசாயிகள் தங்கள் ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணை அங்கு உள்ளிட வேண்டும். 

- அதைத் தொடர்ந்து 'Get Data' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். 

- அதன் பிறகு உங்கள் திட்டத்தின் நிலை (Status) உங்கள் திரையில் தெரியும்.

- இங்கு, விவசாயிகள் தங்கள் பணம் செயலாக்கப்பட்டதா, கணக்கிற்கு பணம் வந்துவிட்டதா என்பது போன்ற தகவல்களை பார்த்து தெரிந்துகொள்ளலாம். 

பிஎம் கிசான் திட்டத்தின் பயனைப் பெறும் விவசாயிகள் e-KYC-ஐ நிறைவு செய்வது மிக அவசியமாகும். e-KYC செய்து முடிக்காத விவசாயிகள் 19வது தவனைத் தொகையை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு 3 குட் நியூஸ்: வட்டி விகிதம், ஓய்வூதிய உயர்வு... 6 நாட்களில் முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு முக்கிய கோரிக்கைகள்: கூடுதல் ஓய்வூதியம் முதல் பதவி உயர்வு வரை..... காத்திருக்கும் ஜாக்பாட் அறிவிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News