PM Kisan 19வது தவணை இன்னும் வரவில்லையா? கவலை வேண்டாம், இதை செய்தால் போதும்

PM Kisan Samman Nidhi Yojana: இன்னும் தங்கள் கணக்குகளில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் ரூ.2,000 தவணைத் தொகை வரவு வைக்கப்படாததால், ஏராளமான விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 25, 2025, 04:09 PM IST
  • பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா.
  • குழப்பத்தில் சில விவசாயிகள்.
  • தவணைத் தொகை கணக்கில் டெபாசிட் செய்யப்படாததற்கு காரணம் என்ன?
PM Kisan 19வது தவணை இன்னும் வரவில்லையா? கவலை வேண்டாம், இதை செய்தால் போதும்

PM Kisan Samman Nidhi Yojana: விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நேற்று நிறைவேறியது. பிரதமர் நரேந்திர மோடி, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் 19வது தவணையை கோடிகணக்கான விவசாயிகளின் கணக்குகளில் நேற்று பரிமாற்றினார். பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், திங்களன்று, பீகார், பாகல்பூரிலிருந்து 9.8 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு பிரதமர் மோடி மொத்தம் ரூ.22,000 கோடி தொகையை வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து விவசயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Add Zee News as a Preferred Source

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா: குழப்பத்தில் சில விவசாயிகள்

எனினும், இன்னும் தங்கள் கணக்குகளில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் ரூ.2,000 தவணைத் தொகை வரவு வைக்கப்படாததால், ஏராளமான விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த தொகைக்காக அவர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள். 

PM Kisan 19th Installment

தங்கள் கணக்கில் இன்னும் பிஎம் கிசான் 19வது தவணைத் தொகை வராத விவசாயிகள் கவலை கொள்ளத் தேவையில்லை. இதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்துகொண்டு அதை சரி செய்ய உடனடியாக நடவடிக்கைகளை எடுப்பது நல்லது. தவணைத் தொகை கணக்கில் டெபாசிட் செய்யப்படாததற்கு காரணம் என்ன? இதை எப்படி சரி செய்வது? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

E KYC and Land Records: e-KYC மற்றும் நிலப் பதிவுகள் சரிபார்ப்பு

பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டம் மூலம் தவணைத் தொகையை பெறுவதில் தாமதம் ஏற்படுவதற்கு பல காரணிகள் காரணமாக இருக்கலாம். விண்ணப்பப் படிவத்தை நிரப்பும்போது e-KYC மற்றும் நிலப் பதிவுகள் சரிபார்ப்பு துல்லியமாக முடிக்கப்படாவிட்டால், தொகை கணக்கில் வராது. இது ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது. e-KYC நிறைவு செய்யப்படாமல் இருந்தாலும், பணம் கணக்கில் வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

E-KYC செயல்முறையை முடிக்க வேண்டியது மிக அவசியம்

பணம் நேரடியாக தங்கள் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுவதை உறுதிசெய்ய ஒவ்வொரு விவசாயியும் e-KYC செயல்முறையை முடிக்க வேண்டியது மிக அவசியமாகும். இது இடைத்தரகர்களின் தேவையை நீக்குகிறது. PM கிசான் சம்மன் நிதிக்கான e-KYC -ஐ மூன்று வழிகளில் செய்து முடிக்கலாம். 

- முதலில், உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐப் பயன்படுத்தி போர்டல் அல்லது மொபைல் செயலி வழியாக e-KYC செயல்முறையை நீங்கள் சுயாதீனமாக செய்து முடிக்கலாம்.

- அலது, பயோமெட்ரிக் அடிப்படையிலான e-KYC -க்கு உட்பட பொது சேவை மையத்திற்கு (CSC) செல்லலாம். 

- மூன்றாவதாக, முக அங்கீகாரம் மூலமும் இதை நிறைவு செய்யலாம். இந்த செயல்முறை, உங்கள் மொபைல் சாதனம் அல்லது மடிக்கணினியில் உள்ள கேமரா மூலம் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து, e-KYC ஐ செய்து முடிக்க உங்களை அனுமதிக்கிறது. 

- கூடுதலாக, அருகிலுள்ள CSC மையத்திற்கு சென்றும் e-KYC சேவைகளைப் பெறலாம். அங்கு உங்கள் ஆதார் அட்டை மற்றும் அதனுடன் தொடர்புடைய மொபைல் எண்ணை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | SBI Mutual Fund: மாதம் ரூ.250 முதலீடு போதும்... ரூ.29 லட்சமாக பெருகும்... முழு கணக்கீடு இதோ

மேலும் படிக்க | மத்திய அரசின் மாஸ்டர் பிளான்: இனி 60 வயதுக்கு மேல் அனைவருக்கும் பென்ஷன்.... புதிய ஓய்வூதிய திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News