PM Kisan 19வது தவணை இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது: காரணம் இதுதான்!!

PM Kisan Samman Nidhi Yojana: பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் விவசாயிகளின் நிதி தேவைகளுக்கு உதவ மத்திய அரசால் நடத்தப்படும் திட்டமாகும். இதில் தகுதியான விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 வழங்கப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 21, 2025, 03:57 PM IST
  • பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா.
  • பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?
  • வீட்டிலேயே இருந்தபடியே E-KYC-ஐ எவ்வாறு புதுப்பிப்பது?
PM Kisan 19வது தவணை இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது: காரணம் இதுதான்!!

PM Kisan Samman Nidhi Yojana: விவசாய நாடாக உள்ள நம் நாட்டில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறார்கள். விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு நடத்தும் பல நலத்திட்டங்களில் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா முக்கியமான ஒன்றாக உள்ளது.

Add Zee News as a Preferred Source

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் விவசாயிகளின் நிதி தேவைகளுக்கு உதவ மத்திய அரசால் நடத்தப்படும் திட்டமாகும். இதில் தகுதியான விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மூன்று சம தவணைகளில் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகின்றது. விவசாயிகளின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு தவணைத் தொகை நேரடியாக மாற்றப்படுகிறது. 

PM Kisan 19th Installment: பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் 19அது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இதற்கு முந்தைய தவணை, அதாவது 18வது தவணை பிரதமர் மோடியால் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று வெளியிடப்பட்டது. 18வது தவணைத் தொகை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு சுமார் 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், 19வது தவணைக்காக விவசாயிகள் தற்போது ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

விவசாயிகளின் கணக்குகளில் பிரதமர் கிசான் யோஜனாவின் 19வது தவணை விரைவில் வரவுள்ளது. இந்தத் தகவல் பிரதமர் கிசான் யோஜனாவின் X பக்கத்தின் மூலம் பகிரப்பட்டுள்ளது. இந்த முறை பிரதமர் மோடி பீகாரின் பாகல்பூரில் இருந்து 19வது தவணையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

பிஎம் கிசான் திட்டம்: இதை கவனத்தில் கொள்ளவும்

பிஎம் கிசான் திட்ட பயனாளிகளின் செய்யும் சில தவறுகள் காரணமாக, 19வது தவணை அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படாமல் போகலாம். இதற்கான காரணம் என்ன? இதை எப்படி சரி செய்வது? இந்த தகவல்களை இந்த பதிவில் காணலாம். 

வீட்டிலேயே இருந்தபடியே E-KYC-ஐ எவ்வாறு புதுப்பிப்பது?

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளில் ரூ.2000 வழங்கப்படுகிறது. ஆனால் தவணை விடுவிக்கப்பட்ட பிறகும், பல விவசாயிகள் தங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்று புகார் கூறுவதுண்டு. E-KYC நிறைவு செய்யாத விவசாயிகளின் கணக்குகளில் பணம் வராது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். வீட்டில் இருந்தபடியே இதை எளிதாக செய்து முடிக்கலாம். முக அங்கீகாரம் மூலம் வீட்டிலேயே e-KYC செய்யலாம்.

Face Authentication Feature: வீட்டிலிருந்தே பிரதமர் கிசான் யோஜனாவுக்கான KYC-ஐ நிறைவு செய்யும் முறை

பிரதமர் கிசான் யோஜனாவிற்கு E-KYC செய்வது கட்டாயமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் பயோமெட்ரிக் அடிப்படையிலான E-KYC செய்ய வேண்டியிருந்தது. இதனால் மக்களின் நேரம் அதிகம் வீணானது. ஆனால் இப்போது விவசாயிகள் தங்கள் மொபைலில் PM கிசான் யோஜனா செயலியின் உதவியுடன் E-KYC செய்யலாம். இந்த செயலியின் உதவியுடன், விவசாயிகள் OTP அல்லது கைரேகை இல்லாமல் முக அங்கீகார அம்சத்தின் மூலம் வீட்டில் இருந்தபடியே  e KYC-ஐ எளிதாகச் செய்து முடிக்கலாம்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்சில் டபுள் ஜாக்பாட்: மீண்டும் அகவிலைப்படி உயர்வு

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்: மாதா மாதம் ரூ.20,500 வருமானம், பாதுகாப்பான முதலீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News