)
PM Kisan Samman Nidhi Yojana: மத்திய அரசு பலதரப்பட்ட மக்களுக்காக பல வித நலத்திட்டங்களை தீட்டி வருகிறது. மூத்த குடிமக்கள், அரசு ஊழியர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைவருக்கும் பிரத்யேகமாக பல திட்டங்கள் உள்ளன. இவற்றில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மிகவும் பிரபலமானது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது. இதுவரை, இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2,000 -க்கான சுமார் 19 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் அடுத்த தவனை, அதாவது 20 ஆவது தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மத்திய அரசு 2025 ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் 20வது தவணையை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது.
PM Kisan: பிஎம் கிசான் திட்டம்
அடுத்த தவணையைப் பணத்தை தவறாமல் பெற விரும்பும் விவசாயிகள், முதலில் சில முக்கியமான வேலைகளை செய்து முடிக்க வேண்டியது மிக அவசியமாகும். அரசாங்கம் பிப்ரவரி 24, 2025 அன்று 19வது தவணையை வெளியிட்டது. அடுத்த தவணை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், இது ஜூன் மாதம் வெளியிடப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இண்ட தவணைத் தொகையை தவறவிடாமல் பெற, விவசாயிகள் சில முக்கிய அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும்.
PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்?
பிஎம் கிசான் தொகையை பெற தேவையான அனைத்து பணிகளையும் செய்து முடித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மத்திய அரசு, பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 20வது தவணையை செலுத்தும். இதைப் பெற,
- விவசாயிகள் முதலில் e-KYC செய்ய வேண்டும்.
- நில சரிபார்ப்பு பணியையும் செய்து முடிக்க வேண்டும்.
- விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கு எண்ணுடன் தங்கள் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும்.
இந்தப் பணிகள் செய்து முடிக்கப்படாவிட்டால், திட்டத்தின் தவணை பணம் சிக்கிக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
Online e-KYC: ஆன்லைன் e-KYC-ஐ செய்வது எப்படி?
- இதைச் செய்ய, முதலில் பயனாளிகள் பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.
- இதற்குப் பிறகு, விவசாயிகள் பகுதியான Farmers Corner -க்குச் செல்ல வேண்டும்.
- பின்னர் 'e-KYC' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
- பின்னர் ‘Find’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிட வேண்டும்.
- இதற்குப் பிறகு, பயனாளிகள் submit பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
PM Kisan Installments: அரசாங்கம் ஆண்டுதோறும் எவ்வளவு தவணைகளை வழங்குகிறது?
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், அரசாங்கம் ஆண்டுதோறும் ரூ.6,000 அளிக்கிறது. இந்த தொகை தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு தவணைக்கும் நான்கு மாதங்கள் இடைவெளி இருக்கும். விவசாயிகள் உரங்கள் மற்றும் விதைகளை ரொக்கமாக வாங்குவதற்கு அரசாங்கம் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தவணைத் தொகை முதன்முறையாக 2019 இல் வெளியிடப்பட்டது. இப்போது அனைத்து விவசாய பயனாளிகளும் அடுத்த தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ