பிஎம் கிசான் : தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காலவகாசம் நீட்டிப்பு

PM Kisan : பிஎம் கிசான் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. முழு விவரம்.  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Nov 11, 2025, 02:00 PM IST
  • பிஎம் கிசான் திட்டத்தின் அப்டேட்
  • விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
  • விவசாய தனித்து அடையாள எண் - காலவகாசம் நீட்டிப்பு
பிஎம் கிசான் : தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காலவகாசம் நீட்டிப்பு

PM Kisan : மத்திய அரசு வழங்கும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி பெறுவதற்கு நாடு முழுவதும் விவசாயிகளுக்கு நில உடமை பதிவு எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டனர். இருப்பினும் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருக்கும் விவசாயிகள் இன்னும் நில உடமை பதிவெண் பெறாமல் உள்ளனர். அவர்களுக்கான ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை விவசாயிகள் தனித்துவ அடையாள எண் (Farmer Registry) இலவசமாக பதிவு செய்யாதவர்கள் நவம்பர் 15 ஆம் தேதி வரை இதற்காக விண்ணப்பிக்கலாம் என்றும், காலவகாசம் அதுவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

பிஎம் கிசான் திட்டம் - மொபைல் செயலி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் நில உள்ளடக்கிய விவசாயிகளின் தரவுகளை சேகரிப்பதற்கு பிரத்யேகமான விவசாயிகள் பதிவேடு செயலியை (Mobile App) உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் விவசாயிகளின் நில உடைமைகளை சரிபார்த்து விவசாயிகளுக்கென தனித்துவமான அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம் அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது.

விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

இந்த முகாமில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகத் துறை சார்ந்த கள அலுவலர்கள் கிராமங்களுக்கு வருகை தந்து விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,32,231 விவசாயிகள் உள்ளனர். பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 69,026 விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இதில் விவசாயிகள் பதிவேடு திட்டத்தில் இதுவரை பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 51,365 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன் பெறும் 17,661 விவசாயிகள் பதிவு செய்யவில்லை. 

இம்மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 84,390 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளார்கள். எனவே, இம்மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் உடனடியாக தங்கள் நில உடைமை விவரங்களை பதிவேற்றம் செய்து, விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் பெற வேண்டியது அவசியமாக உள்ளது.இவ்வாறு பதிவு செய்து பெறப்படும் தனித்துவ விவசாயி அடையாள எண் மூலம் இனிவரும் காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பயன்களை பெற முடியும்.

இ-சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம்

எனவே, விவசாயிகள் தங்களுடைய கணினி சிட்டா, ஆதார் எண், கைபேசி ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தில் வரும் 15.11.2025-ம் தேதிக்குள் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | PM Kisan 21வது தவணை: அரசு அதிரடி முடிவு, 35 லட்சம் விவசாயிகள் நீக்கம்.... உங்கள் பெயர் உள்ளதா?

மேலும் படிக்க | பிஎம் கிசான் : தமிழ்நாடு விவசாயிகள் பெயர்கள் நீக்கம்! ரூ.2000 கிடைக்காது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News