PM Kisan Tractor Yojna: இந்தியாவில் விவசாயமும், விவசாயிகளும் நாட்டின் முதுகெலும்பாக பார்க்கப்படுகின்றன. விவசாயிகளின் நலனிற்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், விவசாயிகள் நிதி உதவி, மானியம், சலுகைகள் என பல வித உதவிகளை பெறுகிறார்கள். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் விவசாயத்தை நவீனமயமாக்கவும் அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனா
விவசாயிகளுக்கான பிரத்யேகமான திட்டங்களில் பிஎம் கிசான் டிராக்டர் யோஜனாவும் முக்கியமான ஒரு திட்டமாகும். விவசாயிகள் நவீன விவசாய உபகரணங்களைப் பயன்படுத்தி தங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில், டிராக்டர்கள் வாங்குவதற்கு மானியம் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். பொருளாதார ரீதியாக நலிவடைந்த விவசாயிகளுக்கு டிராக்டர்கள் வாங்குவதில் இந்தத் திட்டம் பெரிதும் உதவுகிறது.
பிஎம் கிசான் டிராக்டர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எவ்வளவு மானியம் கிடைக்கிறது? இந்தத் திட்டத்தின் பலன்களை யார் பெற முடியும்? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன? பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனா பற்றிய அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம். இவற்றின் உதவியுடன் விவசாயிகள் இந்த திட்டத்தை எளிதாகப் பயன்படுத்திக் கொண்டு விவசாயப் பணிகளை மேம்படுத்தலாம்.
பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனாவின் நோக்கம் என்ன?
- விவசாயிகளுக்கு நவீன விவசாய உபகரணங்களுக்கான அணுகுவதை உறுதி செய்தல்.
- விவசாயச் செலவைக் குறைத்தல்.
- உற்பத்தி திறனை அதிகரித்தல்.
- விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல்.
பிரதம மந்திரி கிசான் டிராக்டர் திட்டத்தில் சேர்வதற்கான தகுதி வரம்புகள் என்ன?
- விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் நபருக்கு விவசாய நிலம் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் பெயர் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவில் (PM Kisan Samman Nidhi) பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.2,00,000 க்கு குறைவாக இருக்க வேண்டும்.
- இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர், இதற்கு முன்பு வேறு எந்த டிராக்டர் மானியத் திட்டத்தையும் பெற்றிருக்கக்கூடாது.
- இந்தத் திட்டத்தில் பொது, ஓபிசி, எஸ்சி/எஸ்டி ஆகிய அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனா: விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- பான் கார்டு
- நில உரிமைச் சான்றிதழ்
- வருமானச் சான்றிதழ்
- வங்கி கணக்கு அறிக்கை
- சாதிச் சான்றிதழ்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனாவிற்கு எப்படி விண்ணப்பிப்பது?
- முதலில் விவசாயிகள் தங்கள் மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற வேண்டும்.
- அதன் பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பவும்.
- இதனுடன் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைக்கவும்.
- பின்னர், விண்ணப்பப் படிவத்தை வேளாண்மைத் துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: இரட்டிப்பாகும் ஊதியம், ஓய்வூதியம்... அலவன்சுகளிலும் அதிரடி ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









