PM Kisan 19வது தவணை இந்த நாளில் வரும்: பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? இப்படி செக் செய்யலாம்

PM Kisan 19th Installment: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசால் ஒரு குறிப்பிட்ட தொகை விவசாயிகளின் கணக்கில் சீரான இடைவெளியில் டெபாசிட் செய்யப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 14, 2025, 05:55 PM IST
  • பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா.
  • பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?
  • பிஎம் கிசான் பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயரை எப்படி செக் செய்வது?
PM Kisan 19வது தவணை இந்த நாளில் வரும்: பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? இப்படி செக் செய்யலாம்

PM Kisan Samman Nidhi Yojana: நாட்டில் உள்ள பல்வேறு பிரிவு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் மத்திய அரசு பல வித திட்டங்களை துவக்கி செயல்படுத்தி வருகிறது. நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தயும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா மிக பிரபலமானது.

Add Zee News as a Preferred Source

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசால் ஒரு குறிப்பிட்ட தொகை விவசாயிகளின் கணக்கில் சீரான இடைவெளியில் டெபாசிட் செய்யப்படுகிறது. தகுதியுள்ள விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.6,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 18 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. 

PM Kisan 19th Installment: பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?

தற்போது, ​ விவசாயிகள் பிஎம் கிசான் 19வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்தத் தவணை பிப்ரவரி 24, 2025 அன்று விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என கூறப்படுகின்றது. பிப்ரவரி மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி பீகாருக்கு வருகை தருகிறார். அப்போது இந்த நல்ல செய்தி கிடைக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது தொடர்பான எந்த தகவலும் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.

PM Kisan Nidhi Yojana: பிஎம் கிசான் பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயரை எப்படி செக் செய்வது?

19வது தவணை பயனாளிகள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா இல்லையா என்பதை விவசாயிகள் முன்கூட்டியே செக் செய்ய முடியும். பயனாளிகள் படியலில் பெயர் உள்ளதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? இதற்கான முழு செயல்முறையை இங்கே காணலாம். 

- PM Kisan Samman Nidhi Yojana திட்டத்தின் கீழ் அடுத்த பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள விரும்பினால், முதலில் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in/ -க்கு செல்ல வேண்டும்.

- இதில் லாக் இன் செய்ய வேண்டும்.

- இதற்குப் பிறகு, கிசான் சம்மான் நிதி பிரிவுக்குச் சென்று பயனாளி நிலை (Beneficiary Status) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

- இங்கே உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

-  அது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

- இதற்குப் பிறகு Get Data என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

- இதைத் தேர்ந்தெடுத்த பிறகு, திரையில் முழுமையான பட்டியலைக் காண்பீர்கள்.

- இந்தப் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை செக் செய்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: ஓய்வூதியதாரர்களின் கோரிக்கை... அரசு கொடுத்த அப்டேட்

மேலும் படிக்க | புதிய வருமான வரி மசோதா 2025... வரிசெலுத்துவோர் அடையும் சில பயன்கள் விபரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News