முத்ரா கடன் திட்டம்... 52 கோடி பேருக்கு... ரூ.32.61 லட்சம் கோடி கடன்... நீங்களும் பலன் பெறலாம்

PM Mudra Yojana: தொழில் தொடங்க விரும்புபவர்கள், கடின உடல் உழைப்பை பணியாக கொண்டவர்கள், தொழிலாளிகள், விவசாயிகள் என பல தரப்பு மக்களை தொழில்முனைவோராக ஆக்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சி தான் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 8, 2025, 10:30 AM IST
  • முத்ரா திட்டத்தின் கீழ், 52 கோடி பேருக்கு ரூ.32.61 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்கள்
  • ஆண்டுக்கு சராசரியாக5.14 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு
  • ரூ.10 பத்து லட்சம் வரை பிணை இல்லாத கடனை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன.
முத்ரா கடன் திட்டம்... 52 கோடி பேருக்கு... ரூ.32.61 லட்சம் கோடி கடன்... நீங்களும் பலன் பெறலாம்

பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம்: நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி 2015, ஏப்ரல் 8ஆம் தேதியன்று பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தை (PMMY) தொடங்கினார்.  இந்த திட்டம் இன்று 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. தொழில் தொடங்க விரும்புபவர்கள், கடின உடல் உழைப்பை பணியாக கொண்டவர்கள், தொழிலாளிகள், விவசாயிகள் என பல தரப்பு மக்களை தொழி முனைவோராக ஆக்கி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் முயற்சி இது.  

Add Zee News as a Preferred Source

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் பத்து லட்சம் ரூபாய் வரை பிணை இல்லாத கடன்

மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் பத்து லட்சம் ரூபாய் வரை பிணை இல்லாத கடனை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன. பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா போன்ற பல பொதுத் துறை வங்கிகள் முத்ரா கடன்களை வழங்குகின்றன. அதேபோல், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சிட்டி யூனியன் பேங்க் போன்ற சில தனியார் வங்கிகளும் முத்ரா கடன்களை பயனாளிகளுக்கு கொடுக்கின்றன. இதுமட்டுமல்லாமல், பல மைக்ரோ நிதி சேவை நிறுவனங்கள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகளும் முத்ரா கடன்ககளை வழங்குகிறது.

 ரூ.32.61 லட்சம் கோடி மதிப்புள்ள 52 கோடிக்கும் அதிகமான கடன்கள் 

மத்திய அரசின் முயற்சிகளில் ஒரு முக்கியமான முன்முயற்சி திட்ட மான பிரதம மந்திரி முத்ரா  திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகளில் ரூ.32.61 லட்சம் கோடி மதிப்புள்ள 52 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தகவல் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு வர்த்தகம் தொழிலை விரிவுபடுத்த உதவியுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது முதல் முறையாக வணிகம் அல்லது தொழில் செய்யும் மக்களை ஊக்குவித்துள்ளது.

பெண்கள் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற உதவும் முத்ரா திட்டம்

"பிரதம மந்திரி முத்ரா திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க உதவியுள்ளது. மேலும், 70 சதவீதத்திற்கும் அதிகமான கடன்கள் பெண் தொழில்முனைவோரால் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற்று, பாலின சமத்துவத்திற்கு பெரும் பங்களித்துள்ளது" என நிதி அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் கீழ், ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும் கடன் தொகை கடந்த ஒன்பது ஆண்டுகளில் 13 சதவீதம் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் (CAGR) ரூ.62,679 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், பெண்ணுக்கு அதிகரிக்கும் வைப்புத் தொகை திட்டம்14 சதவீதம் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் அதிகரித்து ரூ.95,269 ஆக உள்ளது.

பிரதம மந்திரி முத்ரா யோஜனாவைப் பாராட்டியுள்ள IMF

சர்வதேச நாணய நிதியம் (IMF) பிரதம மந்திரி முத்ரா யோஜனாவைப் பாராட்டியுள்ளதுடன், பெண்கள் தொழில்முனைவோருக்கு சிறப்பு கவனம் செலுத்தி பிணையமில்லாத கடன்களை வழங்கும் இந்தத் திட்டம், பெண்களுக்குச் சொந்தமான MSME நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியுள்ளது என்றும், தற்போது 28 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளது.

ஆண்டுக்கு சராசரியாக5.14 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு

SKOCH வெளியிட்டுள்ள “Outcomes of Modinomics 2014-24” அறிக்கையில், “2014 முதல் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக குறைந்தது 5.14 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் PMMY திட்டம் மூலம் மட்டும் 2014 முதல் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2.52 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதில்  20,72,922 முத்ரா கடன்களுடன் ஜம்மு காஷ்மீர் முத்ரா திட்டத்தின் கீழ் பெரிதும் பயனடைந்துள்ளது.

தொழில்முனைவோர் செயல்பாட்டில் ஒரு பெரிய எழுச்சி: எஸ்பிஐ அறிக்கை 

கடந்த 10 ஆண்டுகளில் முத்ரா திட்டம் 52 கோடிக்கும் மேற்பட்ட கடன் கணக்குகளைத் திறக்க உதவியுள்ளது, இது தொழில்முனைவோர் செயல்பாட்டில் ஒரு பெரிய எழுச்சியைக் குறிக்கிறது என்று எஸ்பிஐ அறிக்கை கூறுகிறது. பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் கீழ், பபன் பெறும் டீன் ஏஜ் கடன்கள் (ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரை), 2016 நிதியாண்டில்ல் 5.9 சதவீதத்திலிருந்து நிதியாண்டு 2025 இல் 44.7 சதவீதமாக அதிகரித்துள்ளது, இது சிறு தொழில்களுக்கான உண்மையான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. இளைஞர்கள் பிரிலும் (ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை) முத்ரா கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

மேலும் படிக்க | சமையல் சிலிண்டர் திடீர் விலை உயர்வு... உச்சக்கட்ட ஷாக்கில் மக்கள்!

மேலும் படிக்க | SCSS: மூத்த குடிமக்களுக்கு பம்பர் திட்டம்... அதிக வட்டி, பாதுகாப்பான வருமானம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News