)
PM Shram Yogi Maan Dhan Scheme: மத்திய அரசு மூத்த குடிமக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக, அவர்கள் பொருளாதார ரீதியாக வலிமையாக இருக்கவும், அவர்ளுக்கு மாதந்தோறும் ஓய்வூதியத்தையும் வழங்கி வருகிறது. இதன் மூலம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பலரும் பயனடைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு முக்கிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது திட்டத்தில் எப்படி விண்ணப்பிக்கலாம், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் யோஜனா (PM-SYM) திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க அரசு ஓய்வூதியத் திட்டமாகும், இது அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு 60 வயதிற்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்கப்படுகிறது. ஆட்டோ ஓட்டுநர்கள், தெரு வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள் அல்லது கட்டுமானத் தொழிலாளர்கள் அனைவரும் அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு நிரந்தர வேலைகளோ, வருங்கால வைப்பு நிதியோ அல்லது ஓய்வூதிய சலுகைகளோ இல்லை. அவர்கள் வயதாகும்போது, அவர்களின் வேலை செய்யும் திறன் குறைந்து வருமானம் குறைகிறது. இது வயதான காலத்தில் நிதி சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற நிதி சிக்கல்களை தீர்க்கவே, மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் தானாகவே சேரலாம். இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். மிக முக்கியமாக, மத்திய அரசும் உங்கள் கணக்கில் சமமான தொகையை டெபாசிட் செய்யும். இந்தத் திட்டம் உங்களின் வயதான காலத்தில் பெரிதும் உதவியாக இருக்கும். மாதாந்திர டெபாசிட் தொகையை குறையாக உள்ளது.
இந்த திட்டத்திற்கு 18 வயதில் இருந்தே சேரலாம். 18 வயதில் இந்த திட்டத்தில் சேருபவர்கள் டெபாசிட் தொகையாக ரூ.50 செலுத்தினால் போதும். அதுவே 44 வயதில் இந்த திட்டத்தில் சேருபவர்கள் ரூ.200 செலுத்த வேண்டும். வயது பொருத்து டெபாசிட் தொகை என்பது மாறுப்படும். நீங்கள் செலுத்தும் தொகை மற்றும் அரசும் குறிப்பிட்ட தொகையை உங்கள் வங்கி கணிக்கில் செலுத்தும். இந்த தொகை 60 வயதில் இருந்தே மாதாந்தோறும் ரூ.3,000 என்ற கணக்கில் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் யோஜனா என்பது மாத வருமானம் ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவாக உள்ள அமைப்புசாரா துறையில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும். காய்கறி மற்றும் பழ விற்பனையாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், செருப்பு தைப்பவர்கள், தையல்காரர்கள், சலவை செய்பவர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் சிறு கடைக்காரர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் இருப்பவர்கள், PF அல்லது ESIC சலுகைகளைப் பெறுபவர்கள் அல்லது வருமான வரி செலுத்துபவர்கள் தகுதியற்றவர்கள்.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள பொது சேவை மையத்தை (CSC) பார்வையிட வேண்டும். அங்கு, உங்கள் பயோமெட்ரிக் கைரேகை அல்லது OTP ஐப் பயன்படுத்தி நீங்கள் சரிபார்க்கப்படுவீர்கள். மேலும் ஒரு ஆன்லைன் படிவத்தை நிரப்பப்படும். இதன் பிறகு, நீங்கள் முதல் தவணையை ரொக்கமாக டெபாசிட் செய்ய வேண்டும். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து டெபாசிட் தொகை தானியங்கி முறையில் டெபிட் செய்யப்படும். இதனால் மாதாந்திர தொகை தானாகவே வங்கிக் கணக்கில் டெபிட் செய்யப்படும். இதனை அடுத்து, பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான் தன் அட்டையைப் பெறுவீர்கள். நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பினால், maandhan என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு பதிவு செய்யலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ