PM SVANidhi, Step-by-Step To Apply Online Form: பிரதமர் மந்திரி தெருவோர வியாபாரிகள் ஆத்ம நிர்பார் நிதி திட்டத்தை (PM SVANidhi) மறுசீரமைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
PM SVANidhi: பிஎம் ஸ்வாநிதி தொடங்கப்பட்டது எப்போது?
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தெருவோர வியாபாரிகள் பெரும் சிரமங்களை சந்தித்தனர். அந்த வகையில், தெருவோர வியாபாரிகளை ஆதரிப்பதற்காக, மத்திய அரசு முதன்முதலில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி அன்று PM SVANidhi திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தில் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை, சுமார் 68 லட்சத்திற்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம், 13 ஆயிரத்து 797 கோடி ரூபாய் மதிப்புள்ள 96 லட்சத்திற்கும் மேற்பட்ட கடன்கள் இத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன.
PM SVANidhi: பிஎம் ஸ்வாநிதி திட்டம் மறுசீரமைப்பு
2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியில் இருந்த கடன் வழங்கும் காலம், தற்போ 2030ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 7,332 கோடி செலவாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தின் முக்கிய அம்சங்களில் முதல் மற்றும் இரண்டாவது தவணையில் கடன் தொகைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது கடனை திருப்பிச் செலுத்திய பயனாளிகளுக்கு UPI-இணைக்கப்பட்ட RuPay கிரெடிட் கார்டு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் கேஷ்பேக் சலுகைகள் ஆகியவையும் வழங்கப்படும்.
PM SVANidhi: மூன்று தவணைகளில் கடன்
முதல் தவணை கடன் முன்னர் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. அது தற்போது ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை கடன்கள் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தவணை தொகை மட்டும் ரூ.50 ஆயிரமாகவே நீடிக்கிறது. இத்திட்டம், ஒரு கோடியே 15 லட்சம் பயனாளிகளுக்கு பயனளிக்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
PM SVANidhi: கடன் பெற தகுதிகள் என்ன?
இந்நிலையில், PM SVANidhi திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு, விண்ணப்பிப்பது எப்படி என்பதை இங்கு காணலாம். தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபார ஒழுங்குமுறை) சட்டம், 2014இன் கீழ் விதிகள் மற்றும் திட்டங்களை அறிவித்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு மட்டுமே PM SVANidhi திட்டம் கிடைக்கிறது.
இதில் கடன்பெற, நீங்கள் நகர்ப்புற அல்லது புறநகர்ப் பகுதிகளில் பணிபுரியும் தெரு வியாபாரி அல்லது வியாபாரியாக இருக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் (ULBs) வழங்கப்பட்ட விற்பனைச் சான்றிதழ் அல்லது அடையாள அட்டை உங்களிடம் இருக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாத விற்பனையாளர்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பரிந்துரை கடிதத்தைப் (LoR) பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க உங்களுக்கு குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும்.
PM SVANidhi: பிஎம் ஸ்வாநிதி திட்டம் பயன்கள்
- 3 தவணைகளில் ரூ.50 ஆயிரம் வரை பிணையமில்லாத கடன்கள்.
- முறைசாரா கடன் வாங்குதலுடன் ஒப்பிடும்போது குறைந்த வட்டி விகிதங்கள்.
- டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கேஷ்பேக் வெகுமதிகள்.
- எதிர்கால கடன்களுக்கான கடன் வரலாற்றை உருவாக்க உதவும்.
PMSBY (காப்பீடு) மற்றும் PMJJBY போன்ற அரசு நலத் திட்டங்களுடன் இணைக்கப்படும்.
PM SVANidhi: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
- அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு pmsvanidhi.mohua.gov.in
- Apply For Loan என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- தனிப்பட்ட விவரங்கள், வணிக விவரங்கள் மற்றும் வங்கி விவரங்களுடன் விண்ணப்பத்தை நிரப்பவும்.
- ஆதார், வாக்காளர் அட்டை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் விற்பனைச் சான்றிதழ்/LoR உள்ளிட்ட தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
- உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பித்து கண்காணிக்கலாம்.
மேலும் படிக்க | அடல் ஓய்வூதிய திட்டம்: முக்கிய செயல்முறையில் மாற்றம்... APY புதிய விதி என்ன?
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அடி தூள்!! லெவல் 1-3 மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸான ஊதிய உயர்வு
மேலும் படிக்க | FASTag : நவம்பர் 15 முதல் எவ்வளவு பணம் கூடுதலாகச் செலுத்த வேண்டும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









